தாயுடன் வலம் வரும் அரிய வகை திமிங்கிலக் குட்டியின் புகைப்படம் வெளியானது!!

Date:

உலகில் முதல் முறையாக “ஹம்ப்பேக் திமிங்கலம்” (Humpback whale) ஒன்று தன் புதிதாய் பிறந்த குட்டியுடன்  வலம் வருவது படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் இதுவரை எவரும் செல்லாத நெருக்கத்தில் இந்த அரிய காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது. கடல் உயிரியியல் ஆர்வலர்களால் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

whale1
Credit: Aol

ஹம்ப்பேக் திமிங்கலம் (Humpback whale)

மெகப்டெரா நோவங்கிளியே (Megaptera novaeangliae or big winged new Englander) என்ற அறிவியல் பெயரால் இவை  அழைக்கப்படுகின்றன. அதனர்த்தம் பெரிய இறக்கைகள் என்பதாம். 19 அடி நீள இறக்கைகளை வீசி இவை கடலில் மிதந்து வருவதைக் கண்டால் அம்மாடிவோவ்….

கடல்வாழ் உயிரினங்களில் மிகப்பெரிய பாலூட்டிகள் திமிங்கலங்கள் தான். உலகில் மொத்தம் சுமார் 90 வகையான திமிங்கலங்கள் உள்ளன. பொதுவாக திமிங்கிலத்தை பல்லுள்ளவை மற்றும் பல்லற்றவை எனப்பிரிக்கலாம். அதில் திமில் (பெயர்க்காரணம்) உள்ள இந்தத் திமிங்கலங்கள் பல சிறப்புக்களைக் கொண்டவை.

60 அடி நீளமும், 40 டன் எடையும் (இரண்டுமே அதிகபட்சமாக) கொண்ட இப்பாலூட்டிகள் அதன் உருவம் போன்றே அதீத தாய்ப்பாசம் கொண்டவை‌ . இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பிரசவிக்கும் இவை பெரும்பாலும் ஒரே குட்டியைத்தான் ஈன்றெடுக்கும். பிறந்த குட்டி அதிகபட்சமாக 15 அடி வரை இருக்கும். எடையோ ஒரு டன் அளவு இருக்கும் (900-1000 கிலோ). நாளொன்றுக்கு 1400  கிலோ உணவை உட்கொள்ளும் இப்பிரமாண்ட பட்சி தன் குட்டிக்கு ஒவ்வொரு நாளும் 600 லிட்டர் பாலூட்டும். வழக்கம்போல இவையும் பெண்களுக்கு கட்டுப்பட்டவை இம்முறை அளவில். அதாவது ஆணை விட பெண்தான் பெரியவை.

humback-mother-baby-whale
Credit: Maui No Ka Oi Magazine

இசை

இந்த விசேஷ திமிங்கிலம் தன் உணர்வுகளுக்கு ஏற்றார் போல் விசேஷ இசைகளை எலுப்பவல்லது. அழுதல், மகிழ்ச்சி , விளையாட்டு, இனப்பெருக்கம் என இதன் ஒலிகள் வித்தியாசமானவை. கடலுக்கடியில் (ஒலியின் வேகமானது காற்றை விட நீரில் தான் அதிக வேகத்தில் செல்லும் 1480 மீட்டர்/நொடிகள்) 30 கிலோமீட்டர் வரை இதன் ஒலியலைகளை கேட்க முடியும். அதே போல ஒவ்வொரு கடல் பகுதியில் வாழும் வெவ்வேறு திமிங்கலக் கூட்டங்களுக்கு வெவ்வேறு வைகயான இசையம்சம் உள்ளது. ஆண் மட்டுமே பாடும்.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால் கடலன்னையின் சாம்ராஜ்யத்தில் வாழும் இவற்றை பெரும்பாலும் ஜனவரி மாதம்  பார்க்கவே முடியாது. அந்த பிரம்ம முகூர்த்தத்தில்தான் இவை நம் கண்களுக்கு சிக்கியுள்ளன. கடலில் ரத்தம் போன்று திரவம் பரவியதைக் கண்ட உள்ளூர் மீனவர் ஒருவரால் தகவல் தெரிவிக்கப்பட்டு கடல் வாழ் பாலூட்டிகள் பற்றி ஆராயும் Lars bedjer என்ற ஆராய்ச்சியாளரால் இந்த அரிய காட்சி அவற்றிற்கு தொந்தரவில்லாமல் படமாக்கப்பட்டுள்ளது. இவர் புவிவெப்பமயமாதல் காரணமாக பாலூட்டி படும் சிக்கலை ஹவாய் தீவில் ஆராய்ந்து வருகிறார்.

குட்டித் திமிங்கலம்

பிரசவத்தின் போது குட்டி மூழ்கிவிடாது இருக்க அதன் வால் பகுதியே முதலில் வெளிவந்தது. பின் தாயால் நீரின் மேற்பகுதியில் மிகுந்த பாதுகாப்புடன் சிறிது நேரம் மூச்சுப்பயிற்சி மேற்கொண்டது இந்த கியூட்டான திமிங்கலக் குட்டி. அதிகபட்சமாக இவற்றால் 90 நிமிடம் கடலுக்குள் தொடர்ந்து நீந்த முடியும். எல்லாம் சரியாக இருந்தால் இவை 50 ஆண்டுகள் ஆதிக்கம் செய்யும். கடவுளின் இப்பிரமாண்டப் படைப்பு  உணவுக்காகவும், அதிக நேரம் உடலுறவு கொள்ள முடியும் என்ற அறிவியல் ஆதாரமில்லாத நம்பிக்கையால் அதன் இறக்கைக்காகவும் வேட்டையாடப்படுகிறது.

whale-humpback-
Credit: Earthsky

International Union for Conservation of Nature யின் மிகுந்த கவனத்தால் இவை தற்போது எண்ணிக்கை விருட்சம் அடைந்துள்ளன. தற்போது இதற்கு குறைந்த பட்ச கண்காணிப்பு போதுமானது. ஆனாலும் சிலர்   சட்டவிரோதமாக  இதனை வேட்டையாடுவதை தொடர்ந்து வருகின்றனர். நார்வே மற்றும் ஜப்பான் ஆகியன கலாச்சார முறை வேட்டையாடி நாடுகளாகும். கடந்த ஆண்டுதான் ஜப்பான் அரசு international whaling commission ல் இருந்து திமிங்கலங்கள் போதுமான அளவுஉள்ளதாக காரணம் காட்டி விலக்கு பெற்று இவற்றை வேட்டையாட உரிமம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!