பழங்கால தமிழகம் மேற்கே ஆஃப்ரிக்கா முதல் கிழக்கே இலங்கை வரையும், வடக்கே பாகிஸ்தான் (சிந்து சமவெளி) முதல் தெற்கே ஆஸ்திரேலியா வரையும் இருந்ததென்பதை படித்திருப்போம். அதில் ஒரு குறிப்பிட்ட பகுதி ஆழிப் பேரலையால் மூழ்கிவிட்டது என்றும், அதன் பெயர் லெமூரியா கண்டம் அல்லது குமரிக்கண்டம் என்றும் தமிழாய்ந்த அறிஞர்கள் கூறக் கேட்டிருப்போம்.

அறிவியலாளர்கள் சிலர் அறிவியல் சார்ந்த ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தை சொல்லி அக்கூற்றை நிராகரித்து வந்திருக்கிறார்கள். சில அறிவிலாளர்கள் குமரிக்கண்டம் உண்மை என்றும், முதல் மனிதன் ஆஃப்ரிக்கா கண்டத்தில் தான் தோன்றினான் என்றும் கூறிவருகின்றனர். உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத அளவில் தமிழ் மொழிக்கு மட்டுமே, ஆப்பிரிக்கா முதல் நியூஸிலாந்து வரையும், பாகிஸ்தான் முதல் ஆஸ்திரேலியா வரையும் பல்வேறு பழங்கால சான்றுகள் கிடைத்துள்ளன.
- இன்று வாழும் இலெமூர் எனப்படும் புதுவின விலங்கினம் மடகாஸ்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன.
- பிலிப் ஸ்க்லேட்டெர் என்னும் ஆராய்ச்சியாளர் தனது கூற்றுகளில் இலெமூர் இன விலங்கினத்தின் தொல்லுயிர் எச்சம் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே உள்ளன என்கிறார்.
- மேலும் இவ்வகை தொல்லுயிர் எச்சம் ஆப்பிரிக்க மற்றும் கிழக்கரபு கண்டங்களில் இல்லை எனவும் விளக்குகின்றார்.
இதில் அறிவியலாளர்கள் கூறுவது, பல லட்சம் வருடங்களுக்கு முன், ஒன்றாக இருந்த பெரும் நிலப்பரப்பு, அதன் பிறகு சிறிது சிறிதாக பிளந்து இன்றைய நிலையை அடைந்தது என்றும் கூறுகின்றனர். இக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், பல கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு பெரிய நிலவெடிப்பு அண்மையில் தென் மேற்கு கென்யாவில் திடீரென தோன்றியது.
கடந்த மார்ச் 22- ம் தேதியன்று தோன்றிய அந்த வெடிப்பு 50 அடி ஆழமும், 65 அடி அகலமும் கொண்டதாக சில இடங்களில் உள்ளது. நில அதிர்வுகள் காரணமாக நைரோபி-நாராக் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி குறுக்கே பிளந்து உள்ளது.
வட அமெரிக்கா, பசிபிக், யுரேஷியன், ஆப்பிரிக்கா, இந்திய-ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் அமெரிக்க மற்றும் அண்டார்க்டிக் – கண்டத்திட்டுகள் என பூமியில் மொத்தம் ஒன்பது பெரிய தட்டுகள் உள்ளன.
இன்னும் 5 கோடி வருடங்களில், சோமாலியா, எத்தியோப்பியாவின் பாதி பகுதிகள், கென்யா மற்றும் தான்சானியா ஆகியவை ஆப்பிரிக்காவில் இருந்து பிரிந்து புதிய கண்டத்தை உருவாக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இது பற்றிய காணொளியை இங்கே காணலாம்.