இன்று அதிகாலை சென்னையில் நிலநடுக்கம் – அமெரிக்கா உறுதி

0
58
Earthquake-of-magnitude-49-hits-Bay-of-Bengal-tremors-felt

சென்னையில் இன்று அதிகாலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை இரவில் உணர்ந்ததாக பலரும் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சென்னைக்கு வடகிழக்கே வங்க கடலில் இன்று காலை 7 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வங்க கடலின் வடகிழக்கே 600 கி.மீட்டர் தொலைவில் ரிக்டர் அளவில் 4.9 ஆக நில நடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இதன் தாக்கம் சென்னையிலும் உணரப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கடலுக்கடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில், நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

earthquke

அதிகாலை

சென்னையின் தி,நகர் போன்ற பகுதிகளில் இந்த அதிர்வை மக்கள் உணர்ந்ததாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். எந்தவித உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. அ‌‌ந்தமா‌னி‌ல் இ‌ன்று ‌நள்ளிரவு 2.51 ம‌ணி‌க்கு ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌‌ற்ப‌ட்டு‌ள்ளது. இது ‌ரி‌க்ட‌ர் அளவுகோ‌லி‌ல் 5.5 ஆக ப‌திவா‌‌கியு‌ள்ளது. இத‌ன் தா‌க்கமே செ‌ன்னை‌யிலு‌ம் எ‌திரொ‌லி‌த்தது. அந்தமான் பகுதிகளில் இம்மாதிரி சிறிய நிலநடுக்கங்கள் அடிக்கடி வருவது வாடிக்கைதான். ஆனால் நில அதிர்வு இம்முறை சென்னையில் ஏற்பட்டுள்ளது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.