இமயமலையைச் சுற்றியுள்ள பகுதிகளான அருணாச்சல பிரதேசம், திபெத், நேபாளம், சீனாவின் சில பகுதிகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்திருக்கின்றனர். அருணாச்சல பிரதேசத்தின் தென்திசையில் சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பாதிப்பு சுமார் 40 கிலோமீட்டருக்கு இருந்ததாக கூறப்படுகிறது.

சீனாவில் உள்ள மேடாக் மாவட்டத்தில் இருக்கும் நியீங்ச்சி என்னும் நகரத்தில் இன்று காலை 4.30 மணியளவில் நிகழ்ந்த நிலடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சீன ஆராய்ச்சியகம் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தின் அருகே 28.40 டிகிரி வடக்கு அட்ச ரேகை 94.61 டிகிரி கிழக்கு அட்ச ரேகையில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதனால் உயிர்சேதம் ஏதும் இல்லை என இந்திய சீன ஆராய்ச்சியகம் உறுதி செய்துள்ளது. திபெத் பீடபூமியில் மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இங்குதான் ஆசிய – ஐரோப்பிய கண்டத்திட்டுகள் இந்திய கண்டத்தின் மீது மோதுகிறது.

அதேபோல் நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இன்று காலை 6.14 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற அளவில் நிலஅதிர்வு உணரப்பட்டது.
தொடர்ந்து நேபாளத்தின் தாடிங் மாவட்டத்தில் உள்ள நவுபிஸில் காலை 6.29, 6.40 மணிக்கு அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.2 மற்றும் 4.3 என பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்