Home அறிவியல் ஆராய்ச்சிகள் பனிக்கட்டிகள் இல்லாத அண்டார்டிகா - டைனோசர்கள் வாழ்ந்த காடுகள்

பனிக்கட்டிகள் இல்லாத அண்டார்டிகா – டைனோசர்கள் வாழ்ந்த காடுகள்

அண்டார்டிகா என்றதும் எங்கும் நிறைந்து இருக்கும் பனிப்பாறைகள், உச்சபட்சக் குளிர், இவை தானே நம் நினைவில் வரும். அண்டார்டிகா குறித்து நம் நினைவில் பதிந்த காட்சிகள் இவை தான். புத்தகங்களும், திரைப்படங்களும் நமக்குக் கற்றுக் கொடுத்ததும் இவற்றைத் தான்.

ஆனால், அந்த கண்டத்தில் டைனோசர்கள் வாழ்ந்து இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா?

இப்போது எங்கும் பனிக்கட்டி படர்ந்திருக்கும் அண்டார்டிகாவில்  ஒரு காலத்தில் காடு இருந்திருக்கிறது. அந்த காட்டில் டைனோசர்கள் உலவி இருக்கின்றன.

எப்படி இது சாத்தியம்? குளிர்பிரதேசமாக அறியப்பட்ட ஒரு நிலத்தில் எப்படி வெப்பமும், காடும் இருந்திருக்கும்?

‘கிரிட்டாஸியஸ் காலம்’

இதனைப் புரிந்து கொள்ள நாம் பின்னோக்கி பயணிக்க வேண்டும். 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கிரிட்டாஸியஸ் காலம் என அறியப்பட்ட காலத்தில் அண்டார்டிகவில் பனிக் கட்டிகள் எல்லாம் ஏதும் இல்லை. அந்த காலத்தில் தான், அந்தப்  பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்து இருக்கின்றன. பின் ஒரு விண்கல் புவியை தாக்கியதில் அந்த இனமே அழிந்து போய் இருக்கிறது.

அந்த சமயத்தில், நிலத்தின் இரு துருவங்களிலும் காடு இருந்திருக்கிறது. இப்போது அங்கிருந்து எடுக்கப்படும் புதை படிமங்களைக் கொண்டு அந்த சமயத்தில் அந்த நிலத்தின் காலநிலை எப்படி இருந்திருக்கும் என்று அறிய முடிகிறது.

அண்டார்டிகாவில் வெப்பம்

அங்கிருந்து எடுக்கப்பட்ட புதைபடிவ உயிரினங்களை ஆராய்ச்சி செய்து அங்கு அந்த சமயத்தில் எவ்வளவு வெப்பம் இருந்திருக்கும் என்று கணக்கிடுகின்றனர். ஒரு வரியில் இதனைப் படிக்க சுலபமாக தெரிந்தாலும் இது மிகப்பெரிய பணி. அங்கு எடுக்கப்பட்ட புதைபடுவத்தின் ஒட்டின் வேதியியலை ஆராய வேண்டும். பல்வேறு காலநிலை, வெப்பம் அந்த ஓட்டினில் ஆதிக்கம் செலுத்தி இருக்கும். இதனை ஆய்வு செய்து வெப்பத்தை கணக்கிடலாம்.

ஸ்மித்சோனியன் நேச்சுரல் ஹிஸ்டரிஅருங்காட்சியகத்தை சேர்ந்த ஆய்வாளர் ப்ரைன் ஹுபர் (Dr Brian Huber from the Smithsonian Museum of Natural History) அண்டார்டிகா பகுதியில் ஆழ்கடல் பகுதிகளை ஆராய்ச்சி செய்து வருகிறார். அவர், “இந்த நுண் புதைபடிமங்கள் முக்கிய தகவல்களை வழங்கி வருகின்றன.” என்கிறார்.

Credit : Australian Geographic

சரி… இங்கிருந்த மரங்களுக்கு என்ன ஆனது, டைனோடர்கள் எங்கே சென்றன?

அவர், “கடற்பரப்பு விரிவடைந்ததால் , எரிமலை வெடிப்புகள் அதிகரித்து இது கரி அமில வாயுவை அதிகரித்து இருக்கிறது. இது வெப்பக் குடிலை உண்டாக்கி, இதன் காரணமான பசுமைக்குடிலினால் இந்த புவி வெப்பமாகி இருக்குமோ… இதன் காரணமாக இந்த புவியின் தன்மை மாறி இருக்குமோ என்ற கோணத்தில் ஆய்வு செய்து வருகிறோம்” என்கிறார்.

பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றம் குறித்து நம் அனைவருக்கும் தெரியும். அனைத்தும் மாறிவிடும் என்பதற்கு பருவநிலை மாற்றம் தான் சிறந்த உதாரணம். அது கடந்த காலத்திலும் இருந்தது என்பதை அறிய முடிகிறது. இப்போது இருக்கிறது, எதிர்காலத்திலும் இருக்கும். அப்படியானால், அண்டார்டிகா பனி எல்லாம் உருகி மீண்டும் காடுகள் உண்டாகுமா?

அதனைக் கணிக்க முடியாது. நாம் சில ஆண்டுகளில் பில்லியன் டன் கணக்கில் கரியமில வாய்வினை வெளியிட்டு வருகிறோம். கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக சில மாற்றங்கள் நிகழலாம்.

மீண்டும் அண்டார்டிகாவில் டைனோசர்கள் உலவுவமா என்று தெரியாது. ஆனால், பனி இல்லாத பிரதேசமாக, காடுகள் சூழ்ந்த பகுதியாக அப்பகுதி மாறலாம்.

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகள், போன்ற செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

- Advertisment -