இந்தோனேஷியாவின் சுலவேசி மாநிலத்தில் உள்ள வகாடோபி (Wakatobi) தேசியப் பூங்காவை ஒட்டியுள்ள கடற்கரையில் திமிங்கலம் ஒன்று இறந்து கரை ஒதுங்கியுள்ளது. 31.17 அடி நீளமுள்ள இந்த திமிங்கலத்தை ஆய்வு செய்த மருத்துவர்கள் அதன் வயிற்றில் 13.2 பவுண்டு (6 கிலோ) எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதிகரித்துவரும் கடல் மாசுபாடின் காரணமாக திமிங்கிலங்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. கடலில் வீசப்படும் பிளாஸ்டிக்கின் அளவு ஒவ்வொரு வருடமும் அதிகரித்துவருதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்க இருக்கும் கடல் மாசுபாட்டிற்கு உண்மையில் நம்மிடம் தீர்வு இருக்கிறதா?

6 கிலோ பிளாஸ்டிக்
இறந்த திமிங்கிலத்தின் வயிற்றினில் பிளாஸ்டிக் பைகள், 115 பிளாஸ்டிக் கப்கள், நைலான் கயிற்றின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிகளும் இருந்திருக்கின்றன. இதற்கு முன்பே கடந்த ஜூன் மாதத்தில் திமிங்கலம் ஒன்று இப்படி இறந்தது குறிப்பிடத்தக்கது. அதன் வயிற்றில் இருந்து சுமார் 8 கிலோ பிளாஸ்டிக் எடுக்கப்பட்டது.
அடுத்த பத்தாண்டுகளில் கடலில் வீசப்படும் பிளாஸ்டிக்கின் அளவு மும்மடங்கு அதிகமாகும் என பிரிட்டன் அரசால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
வகாடோபி கடற்கரையில் ஜூன் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது இதன் முக்கிய காரணமாகும். உலகளவில் கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் 50 % சீனா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருகின்றன. எல்லாப் பெருங்கடல்களின் ஆழத்திலும் பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. அடுத்த பத்தாண்டுகளில் கடலில் வீசப்படும் பிளாஸ்டிக்கின் அளவு மும்மடங்கு அதிகமாகும் என பிரிட்டன் அரசால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

தடைகள் சாத்தியமாகுமா ?
கடந்த அக்டோபர் மாதம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய சட்டம் இயற்றப்பட்டது. 2025 – ஆம் ஆண்டிற்குள் ஐரோப்பியாவில் 90 % பிளாஸ்டிக்குகள் மறுசுழற்சிக்கு உட்படுத்தவேண்டும் எனவும் ஐரோப்பிய யூனியனில் உள்ள அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
உலகம் முழுவதையும் பாதிக்கும் காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்ற பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமே பிளாஸ்டிக் தான். முன்னேறிய நாடுகள் பலவற்றிலும் பிளாஸ்டிக் மீதான தடை மெல்ல அமுல்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. ஆனால் ஆபத்து அதைவிட வேகமாய் நெருங்குகிறது என்பதே உண்மை.