காமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2018

0
113
Mary McGowan's squirrel photo
கண்டுபுடிச்சுட்டாங்கய்யா... என்பது போன்று தனது உடல்மொழியால் கூறும் இந்த அணில் படம் தான் இந்த ஆண்டிற்கான Overall winner விருதை வென்றது. PHOTOGRAPH BY MARY MCGOWAN, Courtesy of Comedy Wildlife Photo Awards

உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் தங்கள் புகைப்பட பதிவுகளுடன் கலந்துகொண்ட உலகின் சிறந்த சிரிப்பூட்டும் வனவிலங்கு புகைப்பட விருதுகளுக்கான போட்டி நடைபெற்றது. இதில், புளோரிடாவின் டம்பாவை சேர்ந்த மேரி மெகுவோன் அவர்களின் அணில் புகைப்படம் ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றது.

8 பிரிவுகளில், 41 படங்கள் இறுதிசுற்றுக்கு தேர்வு பெற்ற இப்போட்டியில் 14 படங்கள் சிறந்த சிரிப்பூட்டும் படங்களுக்கான விருதுகளை வென்றன.

போட்டியில் இடம்பெற்ற சில ஆச்சரியப்படக் கூடிய மற்றும் மிகவும் பாராட்டப்பட்ட படங்கள் இங்கே.

 

 

வனவிலங்குகளின் நகைச்சுவை புகைப்பட விருதுகள் குழுமம் , இத்தகைய புகைப்படங்களை உள்ளடக்கி புத்தகம் ஒன்றை வெளியிடுகின்றது. இதன்மூலம் கிடைக்கும் வருமானம் “Born Free Foundation” என்ற தொண்டு நிறுவனத்துக்கு உதவும் வகையில் இருக்கும் என்றும் அது தெரிவித்திருக்கிறது.

இந்த படங்களை பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.