ரஷ்யாவின் வினோத நகரமான சைபீரியாவில் தான் இந்த கருப்பு நிற பனி பெய்திருக்கிறது. உலகின் மிகவும் குளிர்ச்சியான பிரதேசமான சைபீரியாவில் ஒவ்வொரு பனிக்கால துவக்கத்தின்போதும் இத்தகைய நிறம் மாறும் பனிப்பொழிவு நடைபெறுகிறது. இதுகுறித்து ஆராய்ச்சியில் குதித்தவர்கள் என்ன நடக்க கூடாது என நினைத்தார்களோ அதுதான் நடந்திருக்கிறது. மர்ம கருப்பு பனி முழுவதும் கார்பன்டை ஆக்சைடால் ஆனது என தெரிவந்திருக்கிறது.

நிலக்கரிச் சுரங்கம்
சைபீரியாவின் Kuzbass பகுதியில் தான் கருப்புப் பனி அதிகமாகப் பெய்கிறது. அதற்குக் காரணம் அங்கு இருக்கும் நிலக்கரிச் சுரங்கங்கள். உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுங்கப்பகுதியைக் கொண்டிருக்கும் இங்கு 26,000 சதுர கிலோமீட்டர் அளவிற்கு இந்த சுரங்கங்கள் அமைந்துள்ளன. இதிலிருந்து வெளிவரும் நச்சுக்காற்றில் இருக்கும் கார்பன் மூலக்கூறுகள் வளிமண்டலத்தில் தங்கிவிடுகின்றன. பனிப்பொழிவின் போது இவை மறுபடியும் பூமியை அடைகின்றன.
அந்நகரத்தின் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுத்துவரும் தன்னார்வ அமைப்புகள் சமீப காலமாக இந்த கருப்பு பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.
எமனாகும் நிறுவனங்கள்
மாசுகட்டுப்பாட்டு விதிகள், நச்சுக்காற்றில் இருந்து சுற்றுச்சூழலுக்கு மாசுபாட்டை ஏற்படுத்தும் பொருட்களைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் ஆகியவற்றை கட்டாயம் நிறுவனங்கள் வைத்திருக்க வேண்டும் என அரசாங்கம் ஒருபுறம் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால் இந்த நிறுவனங்கள் தவறை பணத்திற்குப் பின்னால் ஒளித்துவிடுகின்றனர். கேள்வி கேட்போரை ஒழித்துவிடுகின்றனர்.

இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட நச்சுப்பொருள்களை மறைக்க அவற்றின்மீது வெள்ளை நிற நிறமிகளைப் பிரயோகிக்கிறார்கள். பின்னர் அதனை பனியில் கொண்டுபோய் கொட்டிவிடுகின்றனர்.
ரஷிய மக்களின் சராசரி வயதினை விட இந்நகர மக்களுக்கு 3 – 4 வயது குறைவு என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இங்கிருக்கும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ரஷியாவின் ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிகையை விட இரண்டு மடங்கு அதிகம்.
ரத்த மழை
சைபீரியாவில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த 2018 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் விதிகளுக்குப் புறம்பாக ஆலையின் கழிவுப்பொருட்கள் தேக்கிவைக்கப்பட்டிருந்திருக்கிறது. திடீரென ஏற்பட்ட சூறாவளிக் காற்றினால் இந்த கழிவுகள் அனைத்தும் வளிமண்டலத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு சில நாட்கள் கழித்து மழையாகப் பெய்தது. கழிவுகள் சிவப்பு நிறத்தில் இருந்ததால் மழையும் ரத்த நிறத்தில் பெய்தது மக்களை பீதியில் ஆழ்த்தியது.

அதன்பிறகு ஆராய்ச்சியாளர்கள் மக்களிடம் நடந்த உண்மைகளைக்கூறி பதற்றத்தைத் தணித்தனர். அந்த நிறுவனம் முழுவதும் புயலினால் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. இயற்கையை எதிர்ப்போருக்கு இதுதான் தண்டனை.
உலக வெப்பமயமாதலில் கார்பன்டை ஆக்சைடு மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. நிலக்கரி சுரங்கங்களின் மூலம் தான் அதிகளவு கார்பன்டை உருவாவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ரஷியா நிலக்கரியிலிருந்து, மின்னாற்றலுக்கு மாறவில்லையெனில் இந்த பாதிப்பு அதிகமாகும் என்கிறது ஆய்வுமுடிவுகள்.