கொரோனா அச்சத்தால் பலரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல காய்கறி, பழங்கள், கீரைகளை பரிந்துரைக்கிறார்கள். நியோதமிழும் நிறைய பரிந்துரைத்திருக்கிறது. அப்படி காய்கறி, பழங்கள், கீரைகள் வாங்க அடிக்கடி கடைக்கு போவது கூட சில நேரங்களில் கொரோனா தொற்று ஏற்படவும் காரணமாகக்கூடும். இந்த சூழ்நிலையில் வீட்டிலேயே முடிந்த அளவுக்கு கீரை, காய்கறிகளை வளர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. அப்படி வீட்டிலேயே என்னென்ன காய்கறி , மூலிகைச் செடிகளை வளர்க்கலாம் என்று பார்க்கலாம். இங்கே 10 கீரை, காய்கறிகள் மற்றும் மூலிகைகள் தரப்பட்டுள்ளன.
1வெந்தயக் கீரை (Fenugreek)
வெந்தயக்கீரை வளர்ப்பது மிக எளிது. வெந்தயத்தை முதல் நாள் இரவு தண்ணீரில் கொட்டி வைத்தாலே போதும். அடுத்த நாள் முளைத்து வரும். பின் அதை தொட்டியில் உள்ள மண்ணில் நட்டு வையுங்கள். வெறும் 10-15 நாட்களில் உணவாகக்கூடியது. சூடு, வயிற்றுக் கோளாறு போன்ற பிரச்சினைகளுக்கு வெந்தயம் சிறந்த மருந்து.
Also Read: கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையுமா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
2கொத்தமல்லி (Coriander)
கொத்தமல்லி விதைகளை புதைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றினால் 2-3 நாட்களில் முளைத்துவிடும். தொட்டியிலேயே கொத்தமல்லியை வளர்க்கமுடியும். மல்லித்தழையாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சட்னி செய்யலாம். கொத்தமல்லி நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகையாகும். ரசம், சாம்பார், குழம்புகளில் அதிகம் சேர்ப்பதால் வீட்டிலேயே வளர்ப்பது சிறந்தது.
Also Read: இஞ்சி டீ உடல்நலத்துக்கு நல்லதா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
3தக்காளி (Tomato)
தமிழக உணவுகளில் தினமும் சேர்த்துக்கொள்வது தக்காளி. வளர்ப்பது எளிது. தொட்டியில் உள்ள மண்ணில் நன்கு பழுத்த தக்காளியை பிழிந்து போட்டால் போதும். சில நாட்களில் நன்கு வளர்ந்து பலன் தரக்கூடியது. சில செடிகளில் 1 கிலோ தக்காளி கூட கிடைக்கும்.
Also Read: உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த 10 வழிகள் போதும்!
4துளசி (Tulsi)
வீட்டில் வளர்த்துப் பயன்படுத்துவது எளிது. ஏனெனில், மருத்துவ குணங்களைக் கொண்ட துளசியை வளர்க்க எந்த பராமரிப்பும் தேவையில்லை. வீட்டில் துளசி இருப்பது மருத்துவர் வீட்டில் இருப்பது போன்றது என்பார்கள். சளித்தொல்லை நீங்க துளசிக்கு அருமருந்து!
Also Read: வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
5புதினா (Mint)
புதினா வளர்க்கவும் பெரிய பராமரிப்புகள் ஏதும் தேவையில்லை. சில புதினா தண்டுகளை நட்டு வைத்து நீருற்றினாலே தானாக வளரக்கூடியது. புதினா செரிமான திறனை அதிகரிக்கும் அற்புத மருந்து. புதினா சட்னி நாம் அடிக்கடி இட்லி, தோசையுடன் சேர்த்து உண்பது. சிலருக்கு புதினா வாசனையே புத்துணர்ச்சியை தரும்.
Also Read: சர்க்கரை நோய் குணமாக ஆயுர்வேதம் சொல்லும் 10 வழிகள்
6கீரை வகைகள் (Greens)
சிறுகீரை, தண்டுக்கீரை போன்றவற்றை வளர்ப்பது மிகவும் எளிது. விதைகளை வாங்கி மண்ணில் தூவி விட்டாலே வளரக்கூடியது. 15 நாட்களுக்குள் பறித்து உண்ணக்கூடியது. பசலைக் கீரை தண்டுகளை நட்டுவைத்தாலே வளரும்.
வெட்டுக்கிளிகள் தொல்லையால் உணவுப்பஞ்சம் ஏற்படக்கூடும் என அரசு அச்சம் தெரிவித்துள்ள நிலையில் நாமே காய்கறிகளை வளர்த்து உண்பது சிறந்தது. இங்கே குறிப்பிட்டுள்ள செடி மற்றும் மூலிகை வகைகள் மட்டுமல்லாது உங்கள் வீட்டில் போதுமான இடம் இருந்தால் மேலும் நிறைய செடிகளை எளிதாக வளர்க்கலாம். உரம், பூச்சிமருந்து என எதுவுமே இல்லாமல் கிடைப்பதால், இதன் மூலம் ஆர்கானிக் பொருட்களை உண்ட மகிழ்ச்சி கிடைக்கும். பணத்தை சேமிக்கவும் நல்ல வழி இது.