நவரத்தினங்களில் ஒன்றான மரகதம் மிகுந்த விலைமதிப்புள்ளது. இது ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளில் வெட்டி எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனையாகின்றது. ஆப்பிரிக்க நாடான ஸாம்பியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Gemfield சுரங்க நிறுவனம் கடந்த மாதம் 1.1 கிலோ அளவுள்ள மரகதக் கல்லைத் தோண்டி எடுத்திருக்கிறார்கள். எடுத்த கையோடு Inkalamu என்று நாமகரணமும் சூட்டப்பட்டது. ஆப்பிரிக்க மொழியில் Inkalamu என்றால் சிங்கம் என்று பொருள்.

உலகின் மிகப்பெரிய மரகத்தைச் சுரங்கம்
ஐரோப்பியச் சந்தைகளில் மரகதத்திற்கு கடுமையான கிராக்கி இருக்கிறது. இந்த தேவைகளை ஆப்பிரிக்க நாடுகளே தீர்த்து வருகின்றன. இதற்காகப் பல சுரங்கங்கள் தோண்டப்பட்டு ஏராளமான நிறுவனங்கள் மரகதத்தை வெட்டி எடுத்துவருகின்றன. இந்நிலையில் Gemfield நிறுவனம் தான் அதிகளவு மரகத விற்பனையை மேற்கொண்டு வருகிறது.
கடந்த மாதம் 2 – ஆம் தேதி வெட்டியெடுக்கப்பட்ட கற்களை சுத்தப்படுத்துதலுக்காக அனுப்பியபோது அவை மரகதக் கல் தான் என்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன் இதே சுரங்கத்தில் 6,225 கேரட் மதிப்புள்ள மரகதக் கல் வெட்டியெடுக்கப்பட்டது. அதன் எடை அதிகமாக இருந்ததால் Insofu எனப் பெயரிட்டனர். அதாவது யானை.

ஒளிரும் பச்சைத் தங்கம்
தற்போது கிடைத்திருக்கும் இந்த Inkalamu மரகதக் கல் விளக்கின் வெளிச்சத்தில் தங்கம்போல் மின்னுகிறது. சமீப காலமாகவே ஸாம்பியாவில் வெட்டி எடுக்கப்படும் கற்களுக்கு ஐரோப்பாவின் சந்தைகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே இந்தக்கல் சிறு சிறு பகுதிகளாக செதுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கிறது.