ஆன்லைன் வகுப்பு: குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்போன்களை பயன்படுத்துவது எப்படி? பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை!

Date:

இன்றைய உலகில் இணையம் ஒரு ‘உயிர் நாடி’யாக இருந்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் கொரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து காணப்படுகிறது. அதுமட்டுமின்றி, இன்றைய பெரும்பாலான நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய வேலையாட்களை நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியமர்த்த திட்டமிட்டுள்ளனர்.

இன்றைய முழு உலகமும் ஆன்லைன் மூலம் இயங்கி கொண்டிருக்கிறது. அதற்குக் கல்வித்துறையும் விலக்கல்ல, நடப்பாட்டில் சிறிய குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை உள்ள அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

எனவே, இன்றைய தலைமுறையினர், லேப்டாப் வழியே கூகுள் ஹேங்அவுட் (Google Hangouts), கூகுள் மீட் (Google Meet) போன்ற வீடியோ மீட்டிங் ஆப்களின் மூலம் தங்கள் கல்வியை தொடர்கின்றனர். அதுமட்டுமின்றி, தனியார் பள்ளிகளைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

baby online using002
Credit: //pixabay.com/

ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களின் கல்வி சார்ந்த கண்ணோட்டத்தில் வழங்கப்பட்டாலும் இதனை பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனிப்பது அவசியம்.

ஏனெனில், ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளின் மனநிலை மட்டுமல்ல, உடல்நிலையும் மோசமடையும். குறிப்பாக, ஆன்லைன் வகுப்புகளுக்காகத் தொடர்ந்து இரண்டு மூன்று மணி நேரம் ஆண்ட்ராய்டு, லேப்டாப் போன்ற எலெக்ட்ரானிக் பொருள்களைத் பயன்படுத்தும் போது, மாணவர்களின் கண்கள் அதிகம் பாதிக்கப்படும். மேலும், சமூக வலைதளங்களை பயன்படுத்தும் குழந்தைகள், அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த சில நாட்களாக, ஆன்லைன் வகுப்பில் இணையும் பெண் குழந்தைகளின் புகைப்படங்கள், சமூக விரோதிகளால் மார்ஃபிங் செய்யப்படுகிறது. அதேபோன்று, மூன்றில் ஒரு குழந்தை ஆன்லைன் மோசடி நபர்களிடம் மாட்டிக் கொள்கின்றது . அதுமட்டுமின்றி, ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களைப் பயன்படுத்தும் குழந்தைகளின் மனநிலை, பக்குவம், பாலியல் விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், குழந்தைகளின் இத்தகைய செயல்களை பெற்றோர்கள் அறிவதில்லை. ஏனெனில், இன்றைய தலைமுறையினரின், சரிபாதி பெற்றோர்களுக்கு இணையத்தை பயன்படுத்துவது பற்றி விழிப்புணர்வு இல்லை என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தில், பாதுகாப்பான முறையில் ஆன்லைன் பயன்படுத்துவதை பற்றி பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

இதுதான் இன்றைய தலைமுறைக்கு தேவையாக இருக்கிறது. அதாவது குழந்தைகளுக்கு முறையான ஆன்லைன் பயன்பாடு, பெற்றோர்களுக்கு ஆன்லைன் விழிப்புணர்வும் உருவாக்க வேண்டும்.

நீங்கள் பெற்றோராக இருக்கும் பட்சத்தில், பேஸ்புக் பெற்றோர் போர்டல் (facebook.com/safety/parents) மற்றும் Instagram பெற்றோர் போர்டல் (about.instagram.com/community/parents) இல் உங்களுக்கான சில எளிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை, படித்து ஆன்லைனில் எவ்வாறு பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு உங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்.

பொதுவாக, தம் பிள்ளைகள் ஒரு நாளைக்கு எவ்வளவு மணிநேரம் ஆன்லைன் பயன்படுத்துகிறார்கள், அவற்றில் கொட்டி கிடக்கும், நல்லவை மற்றும் தீயவை ஆகியவற்றில் எவற்றை தன் பிள்ளைகள் பார்ப்பதற்கும், அறிந்து கொள்ளவும் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள், இது போன்ற சில விஷயங்களை பெற்றோர்கள் அறிந்து வைத்திருப்பது அவசியம்.

குழந்தைகள் ஆன்லைன்/மொபைல் பயன்படுத்தும் போது, பெற்றோர்கள் அவர்களை பாதுகாப்பான முறையில் கண்காணிக்க தேவையான சில உதவிக்குறிப்புகள்!

பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் இருந்தால், அவர்களுடன் நட்பு கொள்வது அல்லது பின் தொடர்வது பற்றி விவாதிக்கவும். அவர்கள் யாருடன் நண்பர்களாக இருக்கிறார்கள், எந்த மாதிரியான விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்களிடம் அடிக்கடி ஒரு நண்பர் போல பேசுங்கள். இது உங்கள் குழந்தையுடன் நீங்கள் கலந்துரையாடுவதற்கும், அவர்கள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கும் ஆன்லைன் பாதுகாப்பைப் பற்றி உரையாடுவதற்கும் ஒரு வாய்ப்பாகும்.

இன்றைய குழந்தைகள் பெரும்பாலும், தங்கள் பெற்றோர்களின் செல்போன்களை பயன்படுத்துகின்றன. எனவே, பெற்றோர்கள் தங்கள் செல்போனில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

உங்கள் குழந்தைகளின் வயதைப் பொறுத்து, சம்மந்தமில்லாத நெருக்கமான படங்கள் போன்ற சில வகையான புகைப்படங்களை பகிர்வதால் ஏற்படும், கடுமையான சட்ட விளைவுகளை பற்றி நீங்கள் பேசலாம். உங்கள் குழந்தைகள் புதிய ஆப் செயலியை பயன்படுத்தத் தொடங்கினால், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பிறகு, தனிப்பட்ட முறையும் உங்களுக்கு அந்த செயலி குறித்து விழிப்புணர்வு வேண்டும்.

தொழில் நுட்ப வளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆன்லைன் பயன்படுத்த அனுமதிக்கும்போது, அவர்களை கண்காணிக்கவும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கவும் உதவ வேண்டும். எனவே தான், பெற்றோர்கள் ஆன்லைன் பயன்பாட்டில் நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும் எனில், இணையம் குறித்து பெற்றோர்களும் புரிதல் வேண்டும். இல்லையெனில், இந்திய சமூகத்தின் தொழில்நுட்ப வேகத்துக்கு எதிர்காலம் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

Also Read: செல்போன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்…? WhatsAppitis பிரச்சினை உங்களுக்கு இருக்கக்கூடும்…

செல்போன் கதிர்வீச்சு அபாயத்திலிருந்து தப்பிக்க 10 வழிகள்

அதிகநேரம் செல்போன் உபயோகித்தால் “கொம்பு முளைக்கும்” – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!