குழந்தைகளிடம் கோபப்பட்டுக் கத்துகிறீர்களா? – கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

Date:

கோபம் வருவது என்பது மனிதர்களுக்கு இயற்கையே. அதே சமயத்தில் அந்தக் கோபமே உங்களை முழுவதுமாக ஆட்கொண்டு விடச் செய்வது முறையல்ல. அதிலும் ஒரு குழந்தைக்குப் பெற்றோராக இருப்பவர்கள் இன்னும் கவனமாக இருப்பது அவசியம். பெற்றோர்கள் செய்யும் எந்தச் செயலும் குழந்தையை நேரடியாக பாதிக்க கூடியது. பெற்றோர்களின் மன அழுத்தம், எரிச்சல், உரக்கக் கத்துதல், குழந்தைகளைப் போட்டு அடித்தல் போன்றவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களாகும்.

குழந்தைகளிடத்தில் நீங்கள் கோபப்பட்டு உரக்கக் கத்துபவராக இருந்தால்… உங்களுடைய மனைவி அல்லது கணவர் கோபத்தில் தாண்டவமாடுபவர் என்று நினைத்தால், இதை படியுங்கள்.

n PARENTS KIDS FIGHTINGகோபத்திற்கான முதன்மைக் காரணம்

உங்கள் அனுபவத்தில் நீங்கள் உச்சகட்டக் கோபத்தில் இருக்கும் நேரத்தைக் கணக்கிடுங்கள். உங்களுக்கு ஏன் எரிச்சல் வந்தது என்று ஆராயுங்கள். உங்கள் குழந்தை ஒருவேளை சாப்பிட மறுக்கலாம் அல்லது அவனுடைய வீட்டு வேலையைச் செய்ய மறுக்கலாம். ஆனால், அவைமட்டுமே உங்களைத் தூண்டி உரக்கக் கத்த வைக்கவும், அடிக்க வைக்கவும் செய்யுமா என்ன?

உண்மையில் உங்களுக்கு வேறு ஒரு காரணத்தினாலேயே கோபம் வந்திருக்கலாம் அல்லது கோபம் தூண்டப்பட்டிருக்கலாம். உங்கள் அலுவலகமோ அல்லது வாழக்கைத்துணையோ அதைச் செய்திருக்கலாம். ஆனால், அந்தக் கோபத்தைக் குழந்தை மீது திணிக்கிறீர்கள்.

கோபத்தால் பாதிக்கப்படும் குழந்தை

கோபம் என்பது பலவித உணர்வுகளின் சேர்க்கையாகும். உதாரணத்திற்கு, அந்தத் தருணத்தில் நீங்கள் சக்தியற்றுப் போயிருக்கலாம், குறைவாக மதிப்பிடப்பட்டிருக்கலாம், ஏமாற்றம் அடைந்திருக்கலாம், அல்லது அதிக வேலைப்பளுவால் அவதிப்பட்டிருக்கலாம். இவற்றில் பல உங்கள் கோப உணர்வோடு கலந்திருக்கலாம். முதலில் உங்கள் கோபத்தைச் சற்று அடக்க முயலுங்கள். முதன் முதலில் உங்களைத் தூண்டிய அம்சங்களைக் கண்டு கொள்ளுங்கள்.

ஒரு சில சமயங்களில் கோப தாபங்களினால் நிலைமை கட்டுக் கடங்கலாம். இருந்தாலும், அதுவே பழக்கமாகி குழந்தை வெறும் பயத்தினால் அடங்கி விட்டால், உங்கள் குழந்தையின் நம்பிக்கை சிதறி விடும். வெறும் பயத்தினால் மட்டுமே குழந்தை கட்டுப்படுத்தப் பட்டு விட்டால், அந்தக் குழந்தை உணர்வுகளை அடக்கிக் கொண்டு பின்வாங்கும். அதன் உணர்வுகள் உதாசீனப்படுத்தப் பட்டதாக நினைக்கும். ஆகவே, கோபப்படும் பொழுது கோபத்தின் விளைவுகளை ஆராய்ந்து விட்டு அதனால் வரும் நஷ்டத்தின் மீது கவனம் கொண்டால் கோபப்படவே மாட்டீர்கள்.

shutterstock 311991953கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழிகள்

நிலைமையை உங்கள் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுங்கள். உங்கள் கோப உணர்ச்சி உள்ளுக்குள்ளேயே புகைந்து கொண்டிருப்பதாக நினைத்தால், உடனே நீண்ட பெருமூச்சு விடுங்கள். அதைச் செய்து விட்டு, ‘ஒரு வேளை வேறு ஒரு காரணம் என் கோபத்தைத் தூண்டி விட்டிருக்கிறதோ? வேலைப் பளுவினால் எல்லையற்று அழுத்தம் ஏற்பட்டதா அல்லது நான் பசியுடனும், அதீதமான களைப்புடனும் இருக்கிறேனா?’ என்றெல்லாம் சிந்தியுங்கள். அப்படி என்றால் உடனுக்குடன் அந்தத் தேவைகளை முதலில் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

கொஞ்சம் மனதை வேறு பக்கம் திருப்புங்கள்

உங்கள் குழந்தையிடம், உங்கள் மனம் சரியாக இல்லை என்றும், தான் சற்று நேரம் மனதை வேறு பக்கம் திருப்பப் போவதாகவும் சொல்லுங்கள். அந்த இடத்திலிருந்து விலகிச் சென்று விடுங்கள். ஆழமாக மூச்சு விடுங்கள். குளிர்ந்த குடி நீரைப் பருகுங்கள். முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே பேசிக் கொள்ளுங்கள். கீழ்க்கண்டவற்றை சொல்லிக் கொள்ளுங்கள்.

  • ஆம்! நான் உண்மையிலேயே கோபமாகத் தான் இருக்கிறேன். இருந்தாலும், இது ஒரு சில நிமிடங்களில் விலகிச் சென்று விடும். என்னையே நான் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். கோபம் என்னை கட்டுப்படுத்த விடமாட்டேன்.
  • இவ்வளவு வயதான நான் குழந்தையை அடிக்கலாமா?
  • நான் கோபப்படுவது என் குழந்தைக்கு பிடிக்காது. அன்பாக அமைதியாக எடுத்துச்சொன்னால் என்னையும் பிடிக்கும்.சொல்வதற்கும் மதிப்பிருக்கும்.

மனம் அமைதியான பிறகு சென்று குழந்தையுடன் பேசித் தீர்க்க ஆரம்பியுங்கள்.

உங்களுக்கான நேரம் என்பது சுயநலமல்ல

உங்களது கோபத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய, ஆனால் விமர்சனத்திற்கு உட்பட்டதான வழிமுறை இதுவாகும். உங்களை மகிழ்விக்கக் கூடிய ஏதாவதொன்றை நீங்கள் தினசரி செய்ய ஆரம்பியுங்கள். உங்களது மன இறுக்கத்தைக் குறைக்க அது உதவும்.

யோகாசனப் பயிற்சி, நீச்சல், இசை, தோட்டக்கலை, புத்தக கிளப், நண்பர்களுடன் தேநீர் விருந்து ஆகியவை போன்ற ஏதாவதொன்றில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். ஒரு மகிழ்ச்சி மிக்க, பரபரப்பற்ற, அமைதியான பெற்றோராக இருப்பது உங்கள் குழந்தைக்கு மிகச் சிறந்த பரிசாக இருக்கும். எனவே ‘ உங்களுக்கான நேரம் ‘ என்பதை சுயநலம் என்று எண்ணாதீர்கள்.

‘பெரியோர்களாகிய நாம் குழந்தைகளுக்காக செய்யக் கூடியது ஒன்று தான் அதாவது நாம் அவர்கள் யாராக மாற வேண்டுமென்று  விரும்புகிறோமோ அப்படியே நாம் மாறி விடுவதுதான்’ என்கிறார் கரோல் ஹில்மன் என்ற சிந்தனையாளர். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். குழந்தைகளாக மாறி விடுங்கள்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!