“சிறு வயதில் பழகிக்கொண்ட உணவுப் பழக்கங்கள் தான் வளர்ந்த பிறகும் தொடரும், அதனால் அதை இப்போதே சரி செய்து விடுவது நல்லது.” என்கிறார், “குட் கிட்ஸ், பாட் ஹாபிட்ஸ்” என்ற நூலின் எழுத்தாளர், ஜெனிஃபர் டிராக்டென்பெர்க் (Jennifer Trachtenberg).
தற்போது நிலவிவரும் உணவு முறைகளும், உணவைப் பற்றி ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்களும், உண்மையில் எது ஆரோக்கியமான உணவென்றோ, எது உங்களைப் போல் சத்துணவை நாடிச் செல்லும் தாய்மார்களை ஏமாற்றும் போலியான விளம்பர உத்தி என்றோ கண்டுகொள்ள முடியாமல் செய்து விடுகிறது.
நாம் அடிக்கடி குழந்தைகளுக்குக் கொடுத்து வரும் இந்த ஐந்து உணவுப் பொருட்களின் போலியான முகத்திரையை விலக்கிக் காண்பிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
ஏற்கனவே தயார் செய்யப்பட்டு கடைகளில் கிடைக்கும் தானிய உணவுகளில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கியுள்ளதாக வெளிப்புற அட்டையில் எழுதியிருந்தாலும் அவைகளில் சேர்க்கப்பட்டுள்ள சர்க்கரை, உப்பு, கெட்டுப் போகாமல் இருக்க உதவும் ரசாயனங்கள் மற்றும் பதப்படுத்துவதற்கான இதர சேர்க்கைகளை எண்ணிப் பார்க்கும்போது அவைகளில் உள்ள சத்து மிக மிகக் குறைவே.

எந்தெந்த பிராண்டுகளில், 1 வேளைக்குத் தேவையான உணவில், 3 கிராம் அளவு நார்ச்சத்தும் 10 கிராமிற்கும் குறைவான சர்க்கரையும் உள்ளதோ, அவற்றை வாங்கி உபயோகிப்பது பரிந்துரைக்கப்படுகிறது .
உங்கள் கண்மணிக்கு மிகச் சிறந்த காலை உணவு, முழு ஓட்ஸ் அல்லது கோதுமையால் செய்யப்பட்ட கஞ்சி தான். ஏனெனில், இவைகளில் மிக உயர்ந்த அளவு நார்ச்சத்தும், மினரல்களும், வைட்டமின்களும் அடங்கியுள்ளன. இவ்வுணவின் சுவையைக் கூட்ட, பழத் துண்டுகள், தயிர் அல்லது தேன் சேர்த்துப் பரிமாறவும்.
சோடா, பதப்படுத்திய பழச்சாறுகள் மற்றும் குளிர்பானங்கள்
நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுகள், சோடா மற்றும் சர்க்கரை சேர்த்த பானங்கள் நாளடைவில் உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் குழந்தைகளில் முரட்டுத்தனத்தை உண்டாக்குவதாக கண்டறிந்துள்ளதால் இவ்வகை உணவுப் பொருட்களை நாம் தவிர்க்க வேண்டும்.
ஒரு 500 மில்லி அளவு சோடா பாட்டிலில் 60 கிராம் சர்க்கரை உள்ளது. இது ஒரு குழந்தைக்கு ஒரு நாள் கிடைக்க வேண்டிய சர்க்கரையின் அளவின் நான்கு மடங்கு ஆகும். இவை கொஞ்சமும் ஊட்டச்சத்தில்லாத வெறும் கலோரி மட்டும் அடங்கிய பானங்களாகும்.
இவ்வகை பானங்களுக்கு பதிலாக உங்கள் குழந்தைகளுக்கு, ஒரு டம்ளர் வீட்டில் தயாரித்த பழச்சாறு, மோர் அல்லது மில்க்-ஷேக் கொடுங்கள்.
பழங்கள் சேர்த்த தின்பண்டங்கள்
இவ்வகை தின்பண்டங்களில் நல்ல பழங்கள் அல்லது பழச்சாறுகள் அடங்கியுள்ளன என்ற கூற்று விளம்பரத்திற்காகக் கூறப்படும் வெறும் கட்டுக்கதை தான். இவற்றில் சிறிய அளவு பழச்சாறும், அதிகமான அளவில் சர்க்கரையும் அடங்கியுள்ளன. இவ்வகை தின்பண்டங்கள், வெளிப்புற அட்டையில் மட்டும் ஊட்டச்சத்தைப் பறைசாற்றும், வெறும் இனிப்புப் பண்டங்கள் தாம்.
நீங்கள் ஊட்டச்சத்து மிக்க எளிய தின்பண்டங்களைக் கொடுக்க நினைத்தால், உலர்ந்த பழ வகைகளான, திராட்சை, எலந்தை, உலர் திராட்சை, ப்ளம் மற்றும் சிறு பழ வகைகளைக் கொடுக்கலாம்.
பதப்படுத்தாத பால்:
கொதிக்க வைத்துப் பதப்படுத்திய பாலை விட, கறந்த பால் மிகவும் ஊட்டச்சத்து மிக்கது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. குழந்தைகளின் நோய் எதிர்ப்புத் திறன் வலுவடையாததாலும், ஜீரண சக்தி குறைவாதலாலும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. எப்போதும் அவர்களுக்கு கொதிக்க வைத்து பதப்படுத்திய பாலை மட்டுமே கொடுங்கள்.

பெரும்பாலான துரித உணவகங்கள் குழந்தைகளுக்கான உணவு வகைகளையும் தயாரிக்கின்றன. இவை பெரும்பாலும் ஆரோக்கியச் சீர்கேட்டை விளைவிக்கும் பீட்ஸா, பர்கர் மற்றும் பொரித்த உணவுகள் அடங்கியதாகும்.
ஒரு வேளைக்கான துரித உணவில் 540 கலோரிகள், 18 கிராம் கொழுப்பு சத்து, 0.5 கிராம் ட்ரான்ஸ் ஃபாட், 790 மில்லி சோடியம் மற்றும் 32 கிராம் சர்க்கரையும் அடங்கியுள்ளன. மேலும் இவைகளில், குழந்தைகளுக்கு அறவே கூடாத பூச்சிக்கொல்லி மருந்துகள், பதப்படுத்த உதவும் ரசாயனங்கள் போன்றவையும் அடங்கியுள்ளன.
எல்லா உணவு வகைகளையும் தயாரிப்பதில் ஒருபோதும் நீங்கள் கைதேர்ந்தவராக முடியாது.
இவற்றிற்கு பதிலாக, முழு கோதுமையால் தயாரித்த ரொட்டி, காய்கறிகள், சிக்கன் துண்டுகள் மற்றும் இறைச்சித் துண்டுகள் சேர்த்து வீட்டிலேயே தயாரித்த பீட்ஸா மற்றும் பர்கரை குழந்தைகளுக்குக் கொடுங்கள்.
எல்லா உணவு வகைகளையும் தயாரிப்பதில் ஒருபோதும் நீங்கள் கைதேர்ந்தவராக முடியாது. எப்போதேனும் உங்கள் குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்று விருந்தளிக்காமல் இருக்கவும் முடியாது. ஆனால், மேலே கூறப்பட்டுள்ள உணவு வகைகளை நீண்ட இடைவெளிக்கு ஒருமுறை தான் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
அதனால், அடுத்த முறை கடைக்கு அல்லது வணிக வளாகங்களுக்குச் செல்லும் முன் உங்கள் பட்டியலிலிருந்து இந்த உணவு வகைகளை நீக்கி விடுங்கள். மாறாக வீட்டில் தயாரித்த உணவுகள், இயற்கை உணவு வகைகள், சாயம் மற்றும் ரசாயனக் கலவைகள் சேர்க்காத உணவு வகைகளை தேர்ந்தெடுங்கள்.
Also Read: குழந்தைகள் நன்றாக சாப்பிட்டும் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கான 7 காரணங்கள்