நீங்கள் எறும்புகளை பல இடங்களில் பார்த்துள்ளீர்கள். அவை கடிக்கையில் எரிச்சலடைந்தாலும், எறும்புகள் எவ்வளவு ஆச்சரியமானது என்று பலரும் சிந்தித்திருப்பீர்கள். எறும்புகள் இந்த உலகில் எவ்வளவு இருக்கும் என்று சிந்தித்திருப்பீர்களா? எறும்புகள் பற்றிய தகவல்கள் பலவற்றை இங்கே காணலாம்.
எறும்பின் எடை
எறுப்புகள் மனிதனை விட பல மடங்கு பலம் கொண்டுள்ளது. எறும்புகள் அதன் எடையை விட 10 லிருந்து 50 மடங்கு அதிகம் உள்ள பொருட்களை தூக்கி செல்கின்றன. இதில், ஆசிய நெசவாளர் எறும்பு (Weaver Ants) அதன் எடையை விட 100 மடங்கு அதிகம் உள்ள பொருட்களை தூக்கிச் செல்லக்கூடியவை.

எறும்பின் வலிமை
எறும்புகளின் சிறிய உடல் அமைப்பே அதன் வலிமைக்கு காரணம். எறும்புகளின் உடலில் பெரிய விலங்குகளை ஒப்பிடுகையில் பெரிய குறுக்கு வெட்டு பகுதிகளை கொண்டுள்ளது. எனவே அவை வலுவாக உள்ளன.
எறும்பு சுவாசம்
எறும்புகளின் உடலில் சுவாச அமைப்பு கிடையாது. அதற்கு பதிலாக உடலைச் சுற்றி ஆக்ஸிஜனைக் கொண்டுச் செல்ல உதவும் சுவாச வழிகள் உள்ளன.

எறும்பு காதுகள்
எறும்புகளுக்கு காதுகள் கிடையாது. மற்ற பூச்சிகளை போல் அல்லாமல் எறும்புகளுக்கு காதுகள் கிடையாது. ஆனால், எறும்புகளால் கேட்க முடியாது என்றும் அர்த்தமல்ல. எறும்புகள் நிலத்தின் அதிர்வை கொண்டு பொருட்களை அறிந்துக் கொள்கின்றன. அவற்றின் முழங்காலுக்கு கீழ் அமைந்துள்ள துணை உறுப்புகள் இந்த அதிர்வை உணரச் செய்கின்றது. காதுகளே இல்லாத இந்த எறும்புகள் நமது காதுக்குள் போனால் நம் நிலை எப்படியாகிவிடுகிறது…? அதுவே யானையின் காதுக்குள் போய்விட்டால்! இது வேறொரு கட்டுரைக்கான தலைப்பு…
எறும்புகளின் எண்ணிக்கை!
எறும்புகள் இந்த உலகில் எவ்வளவு உண்டு என்று கணக்கிடமுடியவில்லை. ஆனால், எறும்புகள் 1 மனிதருக்கு 1 மில்லியன் என்ற அளவிற்கு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவை அண்டார்டிகா, ஆர்டிக் போன்ற சில கண்டங்கள் தவிர உலகம் முழுவதும் பரவி காணப்படுகிறது.
எறும்பு இனப்பெருக்கம்
சில எறும்புகளுக்கு ஆண் துணை தேவைப்படுவதில்லை. அவை, தானாகவே இனப்பெருக்கம் செய்து கொள்கின்றன. அவை குளோனிங் வழியாக இனப்பெருக்கத்தை அடைகிறது.

விவசாயி
எறும்புகள் தங்களுக்கானவற்றை பயிரிடுகின்றன. மனிதர்கள் பயிரிட்டு அறுவடை செய்வதற்கு முன்பிருந்தே எறும்புகள் பயிரிட்டு வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வயிறு
எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் உள்ளன. அதில், ஒன்று தனக்கான உணவுகளை வைத்திருக்கும், மற்றொன்றில் பிற எறும்புகளுக்கான உணவை சேமித்து வைத்திருக்கும்.
நீச்சலடிக்கும் எறும்புகள்!
ஒரு சில எறும்பு வகைகள் நீச்சலடிக்கும். அவை, தண்ணீருக்கும் மேல் மிதக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. நெருப்பு எறும்புகள், படகு போன்ற ஒன்றை உருவாக்குகின்றன. அவை அதற்கு தேவையானவற்றை அழித்து பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தும்.
எறும்பு வாழ்நாள்
சாதாரண வகை எறும்புகள் 90 நாட்கள் வரை உயிர் வாழும் என்று பிரிட்டன் ஆய்வகம் தெரிவிக்கிறது. ஆனால், கறுப்பு வகை பெண் எறும்புகள், 15 ஆண்டுகள் வரை உயிர்வாழும் என்ற அறியப்படுகிறது.

எறும்பு புற்று!
எறும்புகள் கூட்டமாக வாழுமிடம் காலனி (colony) என்று ஆங்கிலத்தில் அழைப்படுகிறது. இதை தமிழில் எறும்புப் புற்று என குறிப்பிடுகிறோம். எறும்புகள் உணவு, இனப்பெருக்கம் போன்ற தேவைகளுக்கு இந்த புற்றுகளை பயன்படுத்துகின்றன. ஒரு பெரிய பகுதியில் பல எறும்பு புற்றுகள் இருக்கக்கூடும். பல எறும்பு புற்றுகள் ஒன்றுபடும் போது ஒரு சூப்பர் காலனி ஏற்படுகிறது. 2002 ஆம் ஆண்டில் 6,000 கிலோ மீட்டர் நீளம் கொண்ட எறும்பு காலனி கண்டறியப்பட்டது. இது இத்தாலி முதல் ஸ்பெயின் நாட்டின் எல்லைப் பகுதியி வரையில் நீண்டிருந்தது.
எறும்பை பார்த்து சுறுசுறுப்பை கற்றுக்கொள் என்று பெரியவர்கள் கூறுவதை கேட்டிருப்போம். கூடவே, மேலே கண்ட எறும்புகள் பற்றிய தகவல்கள் மூலம் ஒற்றுமையாக இருப்பதையும் எறும்புகளிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.