தும்பிகள் சண்டையிட்டு பார்த்திருக்கிறீர்களா? தும்பி பற்றி உங்களுக்கு தெரியாத 10 ஆச்சரியமான தகவல்கள்!

Date:

சிறிய பூச்சி வகையாக இருந்தாலும், தும்பிகளால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இந்த தும்பிகளை தட்டாரப்பூச்சி என்றும், தட்டான் என்றும், தும்பி பூச்சி என்றும் குறிப்பிடுவதுண்டு. இது பொதுவாக நீர்நிலைகளின் அருகில் தான் அதிகம் காணப்படும். இதே போல இன்னும் பல, தும்பிகள் பற்றிய உங்களுக்கு தெரியாத 10 ஆச்சரியமான தகவல்கள் (Facts about Dragonflies) இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தும்பிகளை பார்த்தால் ஹெலிகாப்டரின் தோற்றம் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஹெலிகாப்டரின் வடிவமைப்புக்கு முக்கியமான காரணமாக இருந்தது தும்பிகள் தான் என்பது உங்களுக்கு தெரியுமா?

1. டைனோசர் கால தும்பி!

தும்பிகள் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருப்பதாக உயிரியலாளர்கள் கருதுகின்றனர். டைனோசர் காலத்திலும் இந்த தும்பிகள் இருந்துள்ளது. டைனோசர் காலத்தில் 2 அடிக்கும் மேல் நீளமாக வளரும் தும்பிகளை Griffinflies என்று குறிப்பிடுகின்றனர்.

dragonfly 1

2. நீர்நிலைகளின் அருகில் வாழும் தும்பிகள்!

தும்பிகள் நீர்நிலைகளின் அருகில் வாழ்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். அதற்கு என்ன காரணம் என்று சிந்தித்ததுண்டா…? காரணம் இருக்கிறது. பெண் தும்பிகள் முட்டைகளை நீர்நிலைகளின் மேற்பரப்பிலேயே இடுகின்றன. இல்லை எனில் தண்ணீரின் மேற்பரப்பில் இருக்கும் பாசிகளின் இடையில் முட்டைகளை இடும்.

அந்த முட்டைகள் பொரித்தபின், அவை சிறிய மீன்கள் மற்றும் முட்டைகளை வேட்டையாடுகின்றது. 6 லிருந்து 15 முறை தன் இறகுகளை இழந்தபின் இந்த சிறிய தும்பிகள் பருவநிலையை அடைகிறது. அதன் பின் முதிர்ச்சியடையாத தோலை களைந்துவிட்டு தண்ணீருக்கு வெளியில் வருகிறது.

Did you know?
கொசுக்கள், ஈக்கள் மற்றும் சிறிய பூச்சிகளை தும்பிகள் உண்ணுகின்றன!

3. பறவைகளால் உண்ணப்படும் தும்பிகள்

தண்ணீருக்கு வெளியில் வரும் தும்பிகள் மெல்ல ஊர்ந்து பாறைகள் அல்லது தாவரங்களில் அமரும். அதில் இறகுகள் வளர பல நாட்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம். அவை அதுவரை அந்த இடத்திலேயே இருக்கும். அப்போது மென்மையான உடலையே தும்பிகள் கொண்டிருக்கும். இது மிகவும் ஆபத்தானது. காரணம் பறவைகள் இந்நாட்களில் பிடித்து உண்டுவிடும்.

4. மலக்குடல் வழியாக சுவாசம்

தும்பிகள் மலக்குடல் வழியாக சுவாசிக்கின்றன. அதே போல் வாயு பரிமாற்றத்தை எளிதாக்க அதன் தோலை உதிர்க்கும். ஆசன வாயில் தண்ணீரை உள்ளே இழுக்கிறது. உடலில் இருந்து தண்ணீரை வெளியேற்றுகையில் தன்னை முன்னோக்கி தள்ளுகிறது.

தும்பி

5. சிறந்த கண்பார்வை

மற்ற பூச்சிகளுடன் கணக்கிடுகையில், தும்பிகளுக்கு நல்ல கண் பார்வை உள்ளது. அவை மற்ற பறவைகள் மற்றும் பூச்சிகளிடம் மோதாமல் தவிர்க்க உதவுகிறது. தும்பிகளுக்கு கிட்டத்தட்ட 360 டிகிரி கோணத்தில் பார்க்க முடியும்.

அது மட்டுமின்றி மனிதர்களை விட அதிக நிறங்களையும் தும்பிகளால் பார்க்க முடியும். அதன் கண்ணில் 28,000 லென்ஸ்கள் உள்ளது. இதன் மூலம் பார்க்கும் தும்பிகள் தங்கள் மூளையை 80 சதவீதம் மட்டுமே பயன்படுத்துகின்றன.

தும்பி ஆங்கிலத்தில் (in English) Dragonfly எனப்படுகிறது.

6. பல பாலியல் உறுப்புகள்

ஆண் தும்பிகளுக்கு பல பாலியல் உறுப்புகள் உள்ளது. அவற்றுக்கு பாலியல் உறுப்பு அடிவயிற்றின் அடிப்பகுதியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதிகளைச் சுற்றி உள்ளன. அதன் வயிற்றின் ஒன்பதாவது பிரிவில் விந்தணுக்கள் இருக்கும். இனச்சேர்க்கைக்கு முன்பு ஆண் தும்பிகள், விந்தணுவை ஆண்குறிக்கு மாற்ற அடிவயிற்றை மடிக்க வேண்டும்.

Did you know?
வயது வந்த தும்பிகள் ஆறு மாதங்கள் வரை மட்டும் உயிர் வாழும் என்று கணக்கிடப்பட்டுள்ளது!!

7. விமானத்தின் அடிப்படை

தும்பிகள் தங்களின் நான்கு இறக்கையையும் தனித் தனியே உயர்த்த முடியும். ஒவ்வொரு இறக்கையையும் மேலேயும் கீழேயும் மடக்கிய முன்னும் பின்னும் சுழற்றலாம். மேலும், கீழ்நோக்கியும், மேல்நோக்கியும் சாய்க்க முடியும். அதேபோல், மணிக்கு 30 மைல் வேகத்தில் செல்லக் கூடிய திறன் தும்பிக்கு உள்ளது. எனவே இதை விமானத்தின் முன்னோடி என்று குறிப்பிடுகின்றனர்.

8. இடத்திற்கு போராடும் ஆண் தும்பிகள்

சில வகை தும்பிகள், மற்ற ஆண் தும்பியை உள்ளே விடாமல் குறிப்பிட்ட இடத்திற்கு உரிமை கோருகிறது. இதற்கு மற்ற ஆண் தும்பிகளுக்கு எதிராக அவை போட்டி போடுகின்றன. சில வகை தும்பிகளில் இதுபோன்ற நடைமுறை இல்லை. ஆனால், ஒரு ஆண் தும்பி கடக்கும் போது, அதை தாக்க முற்படுகின்றன.

தும்பி

9. இடம் பெயரும்

காலநிலை மற்றும் தேவைகள் பொறுத்து தும்பிகள் இடம் பெயருகின்றன. பச்சை நிற தும்பிகள் தெற்கு பகுதியில் அதிகம் காணப்படும். வசந்த காலம் வந்ததும் வடக்கே இடம்பெயர்கின்றன. இனச்சேர்க்கைக்கு பின் பெரும்பாலும் நீர்நிலைகள் அருகிலேயே தும்பிகள் இருக்கின்றன.

10. வெப்பநிலையை கட்டுப்படுத்தும் திறன்

சூடான காலநிலை மற்றும் குளிரான காலநிலை இரண்டிலும், தும்பிகளால் இயல்பாக வாழ முடியும். உடலில் வெப்பநிலையை அதிகரிக்க தும்பிகள் முன்னும், பின்னும் வேகமாக பறக்கிறது. மறுபுறம் வெப்பத்திறனுக்காக சூரிய சக்தியை தும்பிகள் நம்பியுள்ளன.

தும்பிக்களை பிடித்து கயிற்றில் கட்டி விளையாடியிருப்போம். இனி தும்பிகள் மற்றும் அவற்றின் வாழ்க்கை முறைகளை உற்று கவனிப்போம்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!