சிலந்திகள் உங்கள் வீட்டை குப்பையாக்கும் ஒரு பூச்சியினம். அது வீடு முழுக்க கூடுகளை கட்டுகிறது. இதனால், வீடு அசுத்தமாகும். இது சில நேரங்களில் உங்களை கடிக்கவும் செய்யும். இதில், சில சிலந்திகள் விஷத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.
சிலந்தியை கட்டுப்படுத்துவது எப்படி?
வீடுகளில் இருக்கும் சிலந்தி வலைகளை தூரிகை கொண்டு சுத்தப்படுத்தவும். வீட்டில் பொருட்கள் சேமித்து வைக்கும் இடங்களை அடிக்கடி சுத்தம் செய்யவும். நீங்கள் ஒட்டடைகளை சுத்தம் செய்யும் பொழுது, சிலந்திகள் சிலந்திகள் வலையை விட்டு ஓடி விடும். எனவே அவற்றை ஓடவிடாமால் அடித்து விடவேண்டும், இல்லையேல் அதை வீட்டின் வெளியே வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால் வேறு வேறு இடங்களில் அவை மீண்டும் வலைகளை பிண்ணி வைக்கும்.
சிலந்திகளை தொல்லையில் இருந்து விடுபட 9 எளிய வழிகள்
- வேக்யூம் க்ளீனர் கொண்டு வீட்டின் மூலைகளில், சுவர்களின் மேல் இருக்கும் ஒட்டடைகளை சுத்தம் செய்யலாம்.
- வீட்டின் வெளிப்புறத்தில் இருக்கும் வெட்டப்பட்ட மரங்கள், புதர்கள் மற்றும் தாவரங்கள் போன்றவை உங்கள் வீடுகளில் இருந்து சற்று தொலைவில் இருக்கும் படி செய்யவும். வீட்டோடு சேர்ந்திருக்கும் படி எந்த மரம், செடி, கொடிகளும் இல்லாத வகையில் சுத்தமாக வைத்திருக்கவும்.
- வீட்டின் சுவர் மற்றும் மூலைகளை வாரத்திற்கு இரண்டு முறையாவது துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். ஒரு சில நாட்கள் கவனிக்காமல் விட்டாலும்கூட, வீட்டின் மூலையில் சிலந்திகள் வலை பின்ன ஆரம்பித்துவிடும்.
- சிலந்தி, அதன் வலையின் உள்ளே இருப்பது தெரிந்தால், அதனை துண்டு காகிதத்தால், சுவர்களோடு நசுக்கி விடாமல் கவனமாக பிடிக்கவும். சுவர்களில் உள்ள சிலந்தியை பிடித்து நசுக்கும் பொழுது அதன் உடலிலிருந்து வெளியேறிய திரவம் சுவர்களில் அழுக்கான கோடுகளை ஏற்படுத்திவிடும். ஆதலால் கவனமாக பிடித்து வேகமாக வெளியே வீசிவிட வேண்டும் அல்லது கவனமாக காகிதத்தில் வைத்து நசுக்க வேண்டும், ஏனெனில் அதன் உடலில் இருந்து வரும் திரவம் மனித உடலில் பட்டால் உங்கள் சருமங்களில் பாதிப்புகள் வரலாம். பின்னர் ஒட்டடை குச்சி கொண்டு அந்த வலையையும் சுத்தம் செய்யவும்.
- சின்னச் சின்ன ஒட்டடைகள் சேராமல் இருக்க, சாதாரண தண்ணீரில் சுத்தம் செய்தால் அது பெரிய அளவிற்கு பயன் தராது. ப்ளீச்சிங் பவுடர் கரைசல்கள் அல்லது மண்ணெண்ணெய் போன்றவற்றை உபயோகப்படுத்தும் போது, அது வேறு வகையான பூச்சிகளையும் விரட்டி விடும். இவற்றின் வாசனையால் சிலந்திகளும், கொசுக்களும் வீட்டினுள் வராமல் இருப்பதோடு, வீடும் சுத்தமாக இருக்கும்.
- எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களின் தோள்களை சிலந்தி இருக்கும் இடத்தில தேய்ப்பதால் சிலந்திகள் வீட்டினுள் வராது. சிலந்தி வலைக்கு அருகில் இருப்பதுபோல போட்டு வைத்து விடலாம்.
- வீட்டில் விரிசல்கள் அல்லது ஏதேனும் சிறு துவாரங்கள், ஜன்னல் இடைவெளி இருப்பின், அவற்றின் வழியாகவும் சிலந்திகள் வீட்டினுள் வந்துவிடும்.
- புதினா எண்ணெய் (Peppermint oil) சிலந்திகளுக்கு மோசமான எதிரி. ஒரு ஸ்பிரே பாட்டிலில் தண்ணீரை நிரப்பி, அதில் 15-20 துளிகள் புதினா எண்ணெய் சேர்க்கவும். இதை உங்கள் வீடு முழுவதும், உங்கள் ஜன்னல் ஓரங்கள் மற்றும் திரைச்சீலைகள் மீது தெளிக்கலாம்.
- வினிகர் (Vinegar) சிலந்திகளை அண்ட விடாமல் தடுக்கிறது. இதன் வாசனை சிலந்திகளுக்கு முற்றிலும் பிடிக்காது. ஒரு பாட்டிலில், பாதி அளவு தண்ணீரும், பாதி அளவு வினிகரும் சேர்த்து வீட்டின் மூலை முடுக்கெல்லாம் தெளித்து விடலாம்.
Also Read: கொசுக்கள் தேடி வந்து உங்களையே கடித்தால் அதற்கு காரணம் இது தான்…