உங்கள் வீட்டுக்குள் கரையான் வராமல் தடுக்க 7 எளிய வழிகள்…

Date:

நாம் எப்போதும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். நம் வீட்டில், நம் கண் முன் உலாவரும் ஈக்கள், சிலந்திகள், கொசுக்கள் போன்றவை வெளியில் இருக்கும் நோய்களை நம் அனுமதியில்லாமலேயே வீட்டுக்குள் பரப்பிவிடுகின்றன. அதேபோல், ஈரப்பதமான காலங்களில் கரையான்கள் பூமிக்குள்ளிருந்து வந்து நமது வீட்டின் நிலைக்கதவுகள், ஜன்னல்கள் போன்ற இடங்களை ஆக்கிரமித்து அரித்துவிடும். இவற்றிலிருந்து தப்பிக்க வீட்டைவிட்டு அவற்றை அகற்றுவதோடு மட்டுமல்லாமல் மீண்டும் வரவிடாமல் தடுப்பதுதான் சிறந்த வழி.

கரையான்கள்

பெரிய நிலத்தடியில் காலனியாக கரையான்கள் காணப்படுகின்றது. அவை பெரிய எறும்புகள் போலவே தோற்றமளிக்கிறது. ஆனால், அவற்றுக்கு இறக்கைகள் இருக்கும். உணவுக்காக மரம் மற்றம் பிற இடங்களுக்கு 100 க்கும் மேற்பட்ட கரையான்கள் ஒன்றிணைந்து வெளியில் வரும்.

நிலத்தடியில் கரையான்கள் வாழ ஈரப்பதம் மற்றும் இருண்ட பரப்பு தேவை. உங்கள் வீடுகளில் அது போன்ற சுழல்கள் இருந்தால் அகற்றவும்.

கரையான்களை கட்டுப்படுத்துவது எப்படி?

  1. வீடுகளின் தரைப்பகுதி மற்றும் வெளிப்புறத்தில் சிறிய துவாரங்கள் இல்லாமல் கவனித்துக் கொள்ளவும்.
  2. வீட்டை சுற்றிலும் மரப் பொருட்களை சேமித்து வைக்கும் போது அவ்வப்போது கவனிக்கவும். தற்போதைய வீடுகளில் இந்த சுழல்கள் இருப்பதில்லை. ஆனால், பழங்கால வீடுகளில் கரையான்கள் வசிக்க ஏற்ற இடங்கள் இருக்கும். இவை வீட்டை சுற்றிலும் உள்ள பகுதிகளில் காணப்பட்டாலும் அது நிலத்தை துறந்து பெரும் ஆபத்தை விளைவிக்கலாம். எனவே அவற்றை கட்டுப்படுத்துவது சிறந்தது.
  3. மிளாய்த்தூள் கரையான்களை அழிக்கும் சக்தி கொண்டது. இவற்றை மரச்சாமான்களில் தூவிவிட, கரையான்கள் அழிந்து போகும். 
  4. வேப்பிலையை பொடியாக அரைத்து, கரையான் அரித்த மரச்சாமான்களில் தூவிவிடலாம். வேப்பிலையின் கசப்பினால் கரையான்கள் மடிந்துவிடும். அல்லது வேப்பிலையை அரைத்து தண்ணீரில் கலந்து, அதனை கரையான் படிந்த மரப்பலகைகளில் தெளிக்கலாம்.
  5. பலகைகள், மேற்புறங்களில் “டெர்மைட் கன்ட்ரோல்” (Termite Killer) என்ற பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்துவிட்டால் கரையான்கள் வராது.
  6. உப்பு கரையான்களை அழிக்கும். இவற்றை மரச்சாமான்களில் தூவிவிட அல்லது கரைத்து தெளித்துவிட, கரையான்கள் அழிந்து போகும். 
  7. ஈரப்பதமான காலங்களில் கரையான்கள் தென்னை மரங்களை அரிக்கின்றது. இதனால் தென்னை வலுவிழந்து விடும். காய் உற்பத்தியும் பாதிக்கும். இதில் இருந்து தப்பிக்க, தென்னை மரங்களின் கீழ்ப்பகுதியில் சுண்ணாம்பு அடிக்கலாம்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!