சுறு சுறுப்புக்கும், கூட்டு முயற்சிக்கும் எடுத்துக்காட்டான உயிரி தான் தேனீ. தேனீக்கள் தங்களது வாழ்நாள் முழுவதையும் தேன் சேகரிக்கவே செலவிடுகின்றன. இவ்வாறு சேகரிக்கும் தேனைத்தான் நாம் சுத்தமான தேன் என்று பயன்படுத்துகிறோம்.
இவ்வளவு கஷ்டப்பட்டு தேன் சேகரிக்கும் தேனீக்கள் பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா? இந்தப் பதிவில் நீங்கள் தேனீயை பற்றி விரிவான தகவலை அறிந்து கொள்ளலாம்.
1. தேனீக்கள் காலணி
எறும்புகளை போலவே தேனீக்களுக்கும் காலணி உள்ளது. இதில் 60,000 முதல் 80,000 வரையிலான தேனீக்கள் நிறைந்திருக்கும். இதில் ஒரு ராணி தேனீயும் மற்றவை பணியாளராகவும் இருக்கும். தேன்கூட்டில் ஒவ்வொரு வேலைக்கும் தனித்திறன் வாய்ந்த தேனீக்கள் இருக்கும். அவைகளை கீழே காணுங்கள்.
- சிறு தேனீக்களை பாதுகாக்கும் தேனீக்கள்
- ராணி தேனீக்கு பணிவிடை செய்யும் தேனீக்கள்
- நுழைவு வாயிலை கண்காணிக்கும் காவல் தேனீக்கள்
- தேன் மெழுகை உருவாக்கும் தேனீக்கள்
- இறந்தவற்றை வெளியேற்றும் தேனீக்கள்
- மகரந்தங்களை சேகரித்து உணவு வழங்கும் தேனீக்கள்
ஆகியவை இருக்கும். இவை ஒவ்வொன்றும் அவற்றின் தனிப்பட்ட வேலையை செய்கின்றன.

2. ஆண் தேனீ
ஆண் தேனீயின் ஒரே பணி ராணித் தேனீக்கு விந்தணுக்களை கொடுப்பது மட்டுமே. ராணித் தேனீக்களால் 3 லிருந்து 5 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும். ஒரு கூட்டில் கிட்டத்தட்ட 250 ஆண் தேனீக்கள் இருக்கும்.
இனச்சேர்க்கைக்கு, ராணித் தேனீ கூட்டை விட்டு வெளியில் வந்து ஒரு வாசனையை வெளியிடும். அதை பின் தொடர்ந்து ஆண் தேனீக்கள் செல்லும். எந்த ஆண் தேனீ தனக்கு ஈடு கொடுக்கிறதோ அத்துடன் மட்டும் ராணித் தேனீ இணையும்.
அதன் பின் ஆண் தேனீ திசுக்கள் வெளியேறி இறந்துவிடும். இது போன்று மூன்று அல்லது நான்கு நாட்கள் நடைபெறும். இனச் சேர்க்கையில் 12 முதல் 15 தேனீக்களிடம் ராணித் தேனீ விந்தணுக்களை சேமிக்கும்.
ராணித் தேனீ கூட்டைவிட்டு வெளியேறி வந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் ஆண் தேனீயுடன் இணைய வேண்டும். அவ்வாறு இணையவில்லை என்றால், அந்த பெண் தேனீ ராணி பொறுப்பை இழந்து விடும். ஒரு கால இனச்சேர்க்கைக்கு பின் ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் முட்டையிட்டுக் கொண்டே இருக்கும்.

3. ஒரு மணி நேரத்திற்கு 25 கி.மீ வேகத்தில் பறக்கும் தேனீக்கள்
தேனீக்களுக்கு 6 கால்கள் உள்ளன. அவை தன்னுடைய இறக்கைகளை ஒரு நிமிடத்துக்கு 11,400 முறை வேகமாக அடிக்கின்றன. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 25 கி.மீ வேகத்தில் கடக்கும்.
4. ஒரு நாளில் 2000 முட்டைகளிடும் ராணி
இனச்சேர்க்கைக்கு பின் 48 மணி நேரத்தில், ராணித் தேனீ முட்டையிடத் துவங்கும். முட்டையிடும் போது அதன் உடல் எடை அதிகரிக்கும். ஒரு நாளில் சராசரியாக 1500 லிருந்து 2000 முட்டைகளை ராணித் தேனீ இடுகிறது. அதன் வாழ்நாளில் கிட்டத்தட்ட 10 லட்சம் முட்டைகளை ராணித் தேனீ இடும்.
ராணித் தேனீக்கு வேறு எந்த வேலையும் இருக்காது. எப்போதும் முட்டையிடுதலும், அதற்காக உணவு எடுத்துக் கொள்ளுதலுமே ஒரே பணி.
5. சிக்கலான மொழி
தேனீக்கள் தகவல் பரிமாற்றத்திற்கு சிக்கலான மொழியையே பயன்படுத்துகின்றன. தேனீக்களுக்கு முக்கியமாக தேன் இருக்கும் இடத்தை கண்டறிந்து, அதைப் பற்றிய வேலையை உத்தரவிடுதலிலேயே மொழியை பயன்படுத்துகின்றனர். அவற்றின் மொழி நடன வடிவத்திலேயே இருக்கிறது. அது தவிர தகவல் பரிமாற்றத்திற்கு பல வாசனையையே தேனீக்கள் வெளியிடுகின்றன.
ஜெர்மனியின் மியூனிக் நகரில் விலங்கியல் பேராசிரியரான கார்ல் வான் ஃபிரிஷ், தேனீக்களின் மொழியை படிக்க 50 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். அவருக்கு 1973 ஆம் ஆண்டு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

6. தேன் கூடு
இளம் தேனீக்களின் அடி வயிற்று பகுதியில் இருந்து வெளிவரும் சுரப்புகள் காற்றில் பட்டு கடினமடைகின்றது. தொழிலாளி தேனீக்கள் அதை நெகிழ்வான பொருளாக மாற்றி கூடு கட்டுகின்றன.
தேனீக்கள் வெப்பநிலையை தாங்கும் அமைப்பாக தங்கள் கூடுகளை வடிவமைத்திருக்கும். அதுவும், ராணித் தேனீக்கு காலநிலையை சமாளிக்கும் அளவிற்கு அந்த கூடு அமைக்கப்பட்டிருக்கும். குளிர் காலத்தில் இறுக்கமான அமைப்பும், வெயில் காலத்தில் காற்றோட்ட வசதியும் செய்யப்பட்டிருக்கும்.
7. அறுகோண வடிவத்தில் அறை
தேன் கூட்டின் அறை மிகச் சரியாக அறுகோண வடிவத்தில் அமைத்திருக்கும். அதாவது கலைப் பொருட்களை எப்படி நுணுக்கமாகவும், நேர்த்தியாகவும் செய்வோமோ அந்த அளவிற்கு மிக நேர்த்தியாக, தேனீக்கள் தங்கள் கூட்டைக் கட்டுகின்றன.
தேனீக்கள் தங்கள் கூட்டை சுத்தமாக வைத்திருக்க விடாமுயற்சியுடன் செயல்படுகின்றன. ராணி தேனி மட்டுமே கூட்டிற்குள் மலம் கழிக்கும், அதை சுத்தம் செய்வதற்கென நியமிக்கப்பட்ட தேனீக்கள் அவற்றை சுத்தம் செய்துவிடுகின்றன. கூட்டில் தேனீக்கள் இறப்பதில்லை. வயதான தேனீக்கள் எப்படியேனும் கூட்டை விட்டு வெளியேறி அதன் பின்னரே உயிர் விடுகின்றன.
9. ஒரு நாளில் 2000 மலர்களில் தேன் எடுக்கிறது.
ஒரு தொழிலாளி தேனீயால் பல பூக்களிலிருந்து ஒரே நேரத்தில் மகரந்தத்தை எடுத்துச் செல்ல முடியாது. எனவே பலமுறை அந்த இடத்தையே தேனீக்கள் சுற்றி சுற்றி வருகின்றன. அந்த தொழிலாளி தேனீ தனது வாழ்நாளில் 500 மைல்களைக் கடக்கிறது. அத்துடன் ஒரே நாளில் கிட்டத்தட்ட 2000 மலர்களில் இருந்து தேன் எடுக்கும் திறனையும் தேனீகள் பெற்றுள்ளன.

10. பெண்கள் உலகம்
இந்த தேனீக்கள் காலணி முழுவதும் பெண்கள் உலகமாகவே இருக்கும். காரணம் ஆண் தேனீக்கள் மிகவும் குறைந்த அளவு மட்டும் இருக்கும். இனச்சேர்க்கைக்கு பின் ஆண் தேனீக்கள் உண்டு விட்டு அப்படியே கூட்டில் தங்கி விடும் என்பதால், பெண் தேனீக்களால் அவை வெளியேற்றப்படுகின்றது.
இவ்வாறு தேனீக்கள் உலகம் ஆச்சரியமானது. ஆனால், தற்போதைய விவசாய முறைகள், இயற்கை அழிப்பு போன்ற பல காரணங்களால் தேனீக்கள் அழிந்து வரும் சூழலுக்கும் தள்ளப்பட்டுள்ளது. நாம் தேனீக்களை வளர்க்கவில்லை என்றாலும் அவை அழியும் படி எதையும் செய்யாமல் இருப்போம்.