28.5 C
Chennai
Wednesday, September 30, 2020
Home உளவியல் தோல்விகளால் துவண்டு விட்டீர்களா? ஹோண்டா நிறுவனரின் உத்வேகம் தரும் வாழ்க்கை கதையை கேளுங்கள்!

தோல்விகளால் துவண்டு விட்டீர்களா? ஹோண்டா நிறுவனரின் உத்வேகம் தரும் வாழ்க்கை கதையை கேளுங்கள்!

NeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.

NeoTamil on Google News

“தோல்வியே வெற்றியின் முதல் படிக்கட்டு” என்பது நாம் அறிந்ததே. அதற்கேற்றார் போல் தன் வாழ்வில் கண்ட பல தோல்விகளை, எதற்கும் அஞ்சாமல் எதிர்த்து நின்று வெற்றியாய் மாற்றியவரை நீங்கள் அறிவீர்களா? இதோ அவர் சொன்ன  வெற்றியின் இலக்கணம், ” வெற்றி என்பது தொண்ணுற்றி ஒன்பது சதவிகிதம் தோல்வியில் இருந்து வருவதே” (Success represents the 1% of your work which results from the 99% of failure) இவர் தான் தோல்விகளில்  மலர் கொய்து வெற்றி மாலை தொடுத்த ஹோண்டா நிறுவனர், சோய்செரோ ஹோண்டா (Soichiro Honda).

Soichiro Honda
Credit: Youtube

சோய்செரோ ஹோண்டா நவம்பர் 17, 1906 ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள ஷிசுயோகா (Shizuoka) என்ற இடத்தில் பிறந்தார். சிறுவயதிலே அறிவியல் தொழிநுட்பத்தில் ஆர்வம் கொண்டு இருந்த அவர் வாகன தொழில்நுட்பத்தை தனது வாழ்க்கையாகத் தேர்தெடுத்தார்.

அதே நேரத்தில் அவர் தன் தந்தையாலும், சுற்றத்தாராலும், நண்பர்களாலும், துரதிர்ஷ்டசாலி என்று நம்பப்பட்டார். ஏனென்றால்  அவர் எடுத்த எந்த காரியத்திலும் சிறுவயதிலிருந்தே  அவர் வெற்றி பெற்றதே இல்லை. யார்  தன்னை துரதிர்ஷ்டசாலி என்று கூறினாலும், அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், தன் விடாமுயற்சியைக் கொண்டு இலக்கை நோக்கி முன்னேறினார் சோய்செரோ ஹோண்டா.

முதல் வெற்றி

தனது இளம்வயதில் டொயோட்டா (Toyota) நிறுவனத்திற்காக தனது அனைத்துப் பணத்தையும் முதலீடாகக் கொண்டு சிறிய உலோக தொழிற்கூடத்தை உருவாக்கி, சிறிய வகை பிஸ்டனைத் (piston) தயாரித்து எடுத்துச் சென்றார். ஆனால் டொயோட்டா நிறுவனமோ தங்களின்  எதிர்பார்க்கும் அளவிற்கு பிஸ்டன் இல்லை என்று அவருடைய பிஸ்டனை நிராகரித்தது.

பின் சிறந்த தொழில்நுட்பத்தில் பிஸ்டன் உருவாக்கி மீண்டும் டொயோட்டாவிடம் எடுத்து சென்றார். இந்த முறை டொயோட்டா நிறுவனம் அவரின் பிஸ்டனை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் செய்துகொண்டது. டொயோட்டா நிறுவனத்திற்காக பிஸ்டன் நிறைய உருவாக்க பெரிய தொழிற்சாலையை உருவாக்கினார் சோய்செரோ ஹோண்டா.

soichiro-honda-riding-motorcycle
Credit: Exploring Your Mind

ஆனால் அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. அமெரிக்காவின் இருபெரும் அணுகுண்டு வீச்சில் ஜப்பான் பெரும் சேதம் அடைந்தது. அதில் சோய்செரோ ஹோண்டாவின் தொழிற்சாலையும் மிகவும் சேதம் அடைந்தது. ஆனால் சேதத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் தன் தொழிலாளர்களைக் கொண்டு மீண்டும் செயல்பட வைத்தார். தொழிற்சாலை நன்றாக செயல்படத் தொடங்கிய ஒரு சில மாதங்களில் அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் தொழிற்சாலை முழுமையாக தரைமட்டமானது.

உலகப் போருக்குப் பின்பு ஜப்பான் மெல்ல இயல்புநிலைக்கு திருப்பினாலும், மக்கள் பெட்ரோல் தட்டுப்பாட்டால் காரைத் தவிர்த்து சைக்கிள் மற்றும் நடைப்பயணத்தை மேற்கொண்டனர். இவற்றையெல்லாம் பார்த்த சோய்செரோ நாம் ஏதாவது புதிய தொழில்நுட்பத்தை கொண்டு ஏதேனும் உருவாக்க வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கினர்.

புல் வெட்டும் இயந்திரத்தில் இருந்த மோட்டாரை கழற்றி சைக்கிள் உடன் இணைத்து இயங்க செய்தார். அதுதான் இந்த உலகின் முதல் இருசக்கர மோட்டார் வாகனம் ஆகும்.

அப்போது அருகில் இருக்கும் புல் வெட்டும் இயந்திரத்தையும், அவருடைய சைக்கிள் வாகனத்தையும் பார்த்தார். அப்போது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது, உடனே புல் வெட்டும் இயந்திரத்தில் இருந்த மோட்டாரை கழற்றி சைக்கிள் உடன் இணைத்து இயங்க செய்தார். அதுதான் இந்த உலகின் முதல் இருசக்கர மோட்டார் வாகனம் ஆகும்.

விடா முயற்சி

அவர் ஓட்டிச் சென்ற இருசக்கர மோட்டார் வாகனத்தை பலரும் பார்த்து இதைபோல் தங்களுக்கும் செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். கேட்ட அனைவருக்கும் இருசக்கர மோட்டார் வாகனத்தை செய்துகொடுத்தார். பின் அங்கு மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே அவர் பெரிய இருசக்கர மோட்டார் வாகனத் தொழிற்சாலை உருவாக்கலாம் என்று முடிவு எடுத்தார்.

ஆனால் அரசாங்கமோ, வங்கியோ மற்றும் நண்பர்களோ யாரும் தொழிற்சாலை தொடங்க அவருக்கு உதவ முன்வரவில்லை. ஆனால் அதனால் அவர் சோர்வடையவில்லை.

Honda-
Credit: Money Control

ஜப்பானில்  அவருக்கு தெரித்த அனைத்து சைக்கிள் கடைகளுக்கும் கடிதம் எழுதினார். தனக்கு முதலீடு செய்யும் சைக்கிள் நிறுவனங்கள் தனது இருசக்கர மோட்டார் வாகன விநியோகஸ்தர்களாக இருப்பார்கள் என்று உறுதி  கொடுத்தார். அதன் பயனாக பல சைக்கிள் நிறுவனங்கள் அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்பயனாக அவர்  பெரிய தொழிற்சாலையை உருவாக்கினார். இந்த தொழிற்சாலை (ஹோண்டா நிறுவனம்) ஆகஸ்ட்  28, 1937 அன்று திறக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் முன்பே வரலாறு எழுதப்பட்டது. கைவிடாத முயற்சிக்கு காலம் அளித்த வெகுமதிதான் ஹோண்டா நிறுவனம்.

 

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

- Advertisment -