ரஷியாவில் இருக்கிறது சைபீரிய நகரம். உலகில் அதிகமாக குளிர் நிலவும் இடங்களில் சைபீரியா முன்னிலை வகிக்கிறது. எங்கு நோக்கிலும் பனி தான். இங்குள்ள பனி சாதாரணமானவை அல்ல. அவற்றிற்குள் சுமார் 3 டன் தங்கக் கட்டிகள் புதைந்திருக்கின்றன. அங்குமிங்குமாக கொட்டிய இந்த கட்டிகள் சிலவற்றை மக்கள் கைப்பற்றினாலும் பெரும்பான்மையானவை இன்னும் பனிக்குள் உறைந்துதான் கிடக்கின்றன.

தங்க மழை
2018 ஆம் ஆண்டு. மார்ச் 16 ஆம் தேதி. சைபீரியாவின் யாகட்ஸ்க் (Yakutsk) விமான நிலையம் பரபரப்பாக இருந்தது. அந்த நகரத்தின் பிரதான தொழிலான நிலக்கரிச் சுரங்க அதிபர் ஒருவருக்குச் சொந்தமான தங்கக்கட்டிகள் ஆண்டனோவ் ஏஎன் – 12 (Antonov An-12) என்னும் விமானத்தில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன.
Antonov விமானம் அமெரிக்க – ரஷிய நாடுகளுக்கு இடையே பனிப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில் விமான சேவைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. சைபீரியாவின் கடுங்குளிரின் காரணமாக விமானங்களில் ஏற்படும் சிக்கல்களை அவ்வப்போது பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணித்து வந்தாலும், அன்று ஏற்பட இருந்த விபத்தை அவர்களால் உத்தேசிக்க முடியாமல் போனது.
தங்கம், வைரம், பிளாட்டினம்
சுமார் 3 டன் மதிப்புள்ள தங்கக் கட்டிகள், வைரங்கள் மற்றும் பிளாட்டின கட்டிகளை Antonov விமானத்தில் எடுத்துச்செல்ல திட்டமிட்டிருந்தார் சுரங்க அதிபர். சரக்குகளை ஏற்றி பயணத்தைத் துவங்கிய சில நிமிடங்களுக்குள் அபாய அறிவிப்பு விடப்பட்டது. விமானத்தின் சரக்கு சேமிப்பு இடமான cargo hatch பலமாக சேதமடைந்து விமானத்தின் மேற்கூரைகள் காற்றில் பறந்துசென்றன. நிலைமையை உணர்ந்துகொண்ட விமானி அருகிலிருந்த (10 மைல் தூரத்தில்) மேகன் விமான நிலையத்தில் (Magan Airport) விமானத்தை தரையிறக்கினார்.

ஆரம்பம் முதலே விமான கூரைகளில் விரிசல் இருந்ததால் பல தங்க கட்டிகள் யாகட்ஸ்க் விமான நிலையத்திற்கு அருகிலேயே விழுந்துவிட்டன. ஆனால் விமான நிலையத்திற்கு வெளியில் பனிப்பாறைகள் அதிகம் என்பதால் அங்கே விழுந்த கட்டிகளை மீட்க முடியாமல் போனது.
அதிஷ்டவசமாக பொதுமக்கள் யாருக்கும் இதனால் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் விமான நிலையத்தின் பாதுகாப்பு குழுவினரின் அஜாக்கிரதையே இந்த விபத்திற்குக் காரணம் என்று அறிக்கை அளித்தனர்.
மீட்கப்படாத தங்கம்
விமானத்திலிருந்து விழுந்த 200 தங்க கட்டிகளில் பல இன்னும் சைபீரிய பனிப்படலத்திற்குள் புதைந்து கிடக்கின்றன. குளிர் மிக அதிகம் என்பதால் இதனைத் தோண்டி எடுக்க மக்கள் அச்சப்படுகின்றனர். ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக எப்போதாவது அரிதாக தங்கம் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது.