உலகத்தையே மிரள வைக்கும் நாஸ்டிரடாமஸ் என்னும் சோதிடர் பற்றித் தெரியுமா?

Date:

நாஸ்டிரடாமஸ் பிரான்சில் பிறந்து வளர்ந்த மருத்துவர், காலக் கணிப்பாளர். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் 1555 ஆம் ஆண்டு அவர் பதிவு செய்த எதிர்காலம் குறித்த தகவல்கள் அனைத்தும் படிக்கும் அனைவருக்கும் மயிர்கூச்செறியச் செய்யும் அனுபவத்தைத் தரவல்லவை. இவர் தான் எல்லா காலத்திலும் மிகப் பெரிய தீர்க்கதரிசிகளில் ஒருவராக கருதப்படுபவர். எதிர்கால நிகழ்வுகளை அதிக துல்லியத்துடன் கணித்தவர் இவர்தான். இவர் எழுதிய பெரும்பாலான தகவல்கள் அனைத்தும் போர், மரணம், நோய் போன்ற ரத்த மணம் கமழும் விஷயங்கள் என்பதால் இந்தப் புத்தகத்தை சாத்தானின் உடமையாகப் பார்க்கும் நபர்களுக்கும் இந்த உலகினில் பஞ்சமில்லை.

nostradamus
Credit: Factinate

நடந்ததும் பயந்ததும்

ஹிட்லரின் எழுச்சியைக் குறித்தும், ஐரோப்பிய நாடுகளை அவர் துவம்சம் செய்ததையும் தன்னுடைய Les Propheties என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் நாஸ்டிரடாமஸ்.

q? encoding=UTF8&ASIN=B0013OMOQU&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=pdt recommend nt 21&language=en INir?t=pdt recommend nt 21&language=en IN&l=li3&o=31&a=B0013OMOQU

இவை மட்டுமல்ல டைட்டானிக் கப்பல் மூழ்கியது, பிரிட்டனின் அரசியல் வானத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட மாற்றங்கள், உலகப்போர்கள் என எதையும் விட்டுவைக்காமல் அடித்து நொறுக்கியிருக்கிறார் நம் சோதிடர்.

முதலாவதாக, 1666 இல் லண்டனை பேரழிவிற்கு உட்படுத்திய பெரும் நெருப்பு பற்றி தனது லெஸ் ப்ராபெட்டீஸ் புத்தகத்தில் 52 வது கவிதையில் எழுதி இருக்கிறார். இந்த லண்டன் தீ விபத்து வரலாற்றில் The Great Fire of London என அறியப்படுகிறது.

அறிந்து தெளிக!!
எதிர்காலத்தில் மூன்றாம் உலகப்போர் மூளும் எனவும் ஹிட்லர் போன்ற மிகப்பெரிய சர்வாதிகாரியின் கீழ் இந்த உலகம் மண்டியிடும் எனவும் தகவல்கள் இருக்கின்றன.

கொரோனா வைரஸ் பற்றி நாஸ்ட்ரடாமஸ் கூறியிருப்பது என்ன?

கொரோனா வைரஸ் பற்றி நாஸ்ட்ரடாமஸ் எழுதிய 56 வது கவிதையை பாருங்கள்! இவர் பிரெஞ்சு மொழியில் எழுதிய கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது தான்.

The sloping park, great calamity,

Through the Lands of the West and Lombardy

The fire in the ship, plague, and captivity;

Mercury in Sagittarius, Saturn fading.”

– Nostradamus

Sloping Park என்பது ‘சரிவான இடத்தில் உள்ள பூங்கா’ என பொருள்படும். சீனாவில் வுஹானில் உள்ள ஹாங்கோ ஜியாங்டான் பூங்கா தான் கொரோனா வைரஸ் தொடங்கிய இடம். இந்த பூங்கா ஓரத்தில் ஓடும் ஆற்றைச் சுற்றியுள்ள சரிவுகளைக் கொண்டுள்ளது. Calamity என்பதற்கு பேராபத்து என பொருள். Through the lands of the West எனப்படுவது மேற்கத்திய நாடுகளையும், Lombardy என்பது இத்தாலியில் உள்ள நகரம் ஆகும். இப்போது, இத்தாலியில் கொரோனா மிகப்பெரும் அளவில் அழிவை ஏற்படுத்தி இருப்பதும் இந்த Lombardy நகரம் தான். Fire in the Ship என்பது நொறுங்கிப்போன பொருளாதாரத்தின் நிலைமையைக் குறிக்கிறது. ‘Plague’ என்பது கொரோனா வைரஸையும் மற்றும் ‘Captivity’ என்பது தனிமைப்படுத்துவதையும் குறிப்பதாக நாஸ்ட்ரடாமஸ் ஆர்வலர்கள் கூறுகின்றனர். Mercury is in Sagittarius, and Saturn is fading என்பது ஜனவரி மாதத்தை குறிக்கிறது. ஜனவரியில் தான் கொரோனா சீனாவின் வுஹானில் பரவத் தொடங்கியது. ஆக மனிதர் கொரோனா பற்றியும் கூறியிருக்கிறார்.

இந்தியாவைப் பற்றி ஏதாவது கூறியிருக்கிறாரா?

மூன்று புறமும் கடலால் சூழப்பட்ட நாட்டினில் பிரம்மச்சாரியான ஒருவர் ஆட்சியமைப்பார் என்ற வாசகமும் இந்தப் புத்தகத்தில் இருந்தே கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மூச்சு விடாமல் பேசப்பட்டது. இது மட்டுமல்ல இந்திரா காந்தியின் ஆட்சிக் கவிழ்ப்பு, அவருடைய படுகொலை, (மெய் காப்பாளர்களாலேயே சுடப்படுவார் என்று இருந்திருக்கிறது), அதன் பின்னர் ராஜிவ் காந்தியின் வளர்ச்சி அவருடைய மரணம் என எதுவும் இந்தப் புத்தகத்தில் இருந்து தப்பவில்லை.

இதெல்லாம் ஒரு ஊகத்தின் அடிப்படையில் அவர் எழுதினார் என்று கொள்ளவும் முடியவில்லை. ஏனெனில் அவர் இது வரை அளித்துள்ள 3000 ற்கும் மேற்பட்ட செய்திகளில் பல நிகழ்ச்சிகள் ஆண்டு மாறாமல் நடந்துள்ளன. இந்தப் புத்தகத்தில் உள்ள பெரிய சிக்கலென்னவெனில் எந்தப் பகுதியுமே நேரிடை அர்த்தத்தை கொடுக்கக்கூடியவை அல்ல. மாறாக கவிதை வடிவிலேயே இந்த உலகத்தின் மொத்த ஜாதகத்தையும் எழுதி வைத்திருக்கிறார் நாஸ்டிராடமாஸ்.

nostradamus book
Credit: Business Insider

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு சிறைத்தண்டனை கிடைத்ததும் கூட நம் ஜோசியக் காரரின் புத்தகத்தில் இருந்ததாகவும் செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால் இட்லி பற்றிய குறிப்புகள் இருந்ததா? என்பது பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!