பெருவில் அமைந்துள்ள நாஸ்கா பாலைவன பகுதியில், 37 மீட்டர் (120 அடி) நீளம் கொண்ட 2,000 ஆண்டு பழமை வாய்ந்த, மிகப்பெரிய பூனையின் வடிவிலான கோடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நாஸ்கா பாலைவனத்தில் அமைந்துள்ள இந்த ராட்சஸ பூனை வடிவ கோடுகளானது, காதுகள் மேலோங்கி, அகன்ற வயிறுடன், வால் நீட்டப்பட்டு உள்ளது. இந்த ஆராய்ச்சியின் மூலம் ஆயிரமாண்டுகளுக்கு பிறகு இந்த கோடுகளின் மீது தற்போது சூரிய ஒளி படுகிறது. இது பெருவில் அமைந்துள்ள பிரபலமான நாஸ்கா பாலைவனத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஜியோகிளிஃப் (Geoglyph) ஆகும்.

‘தற்போது, நாங்கள் கண்டுபிடித்துள்ள பூனையின் வடிவம் தொடர்பான புள்ளிவிவரங்கள் மிகவும் வியக்கத்தக்கது. இதுபோன்று, இனி வரும் காலத்தில் இன்னும் பல உருவங்கள் மற்றும் பழமையான வடிவமைப்புகளை கண்டுபிடிப்பதற்கான முன்னோடியாக இது திகழும்’ என்கிறார் பெருவின் நாஸ்கா கோடுகளின் தலைமை தொல்பொருள் ஆய்வாளர் ஜானி இஸ்லா (Johnny Isla).
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அழியாத நாஸ்கா பாலைவன கோடுகள்!
நாஸ்கா பாலைவனத்தின் மண்ணில் மிகப்பெரிய வரைபடங்கள் நாஸ்கா கோடுகள் இருக்கின்றனர். இவை பெரும்பாலும் கி.மு 500 மற்றும் கி.பி 500 க்கு இடையில் நாஸ்கா கலாச்சாரத்தால் உருவாக்கப்பட்ட என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாஸ்கா பாலைவனத்தின் சிவப்பு-பழுப்பு நிற கூழாங்கற்களுக்கு அடியில் மஞ்சள் சாம்பல் நிற மண் அமைந்துள்ளது. இதன் மேல் பகுதி அகற்றப்படும் போது, இதற்கு அடியில் உள்ள மண் ஒரு இலகுவான நிறத்தை வெளிப்படுத்துகிறது.

பழைய பராக்காஸ் கலாசாரத்தில் உருவாக்கப்பட்ட நாஸ்கா கோடுகள்?
நாஸ்கா பாலைவனத்தில் காணப்படும், இந்த பூனையின் படிவமானது கிமு 200-100 க்கு இடையில் உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம். குறிப்பிட்ட பூனையின், இப்பகுதியில் காணப்படும் மற்ற படிவங்களை விட பழைமையானதாக கருதப்படுகிறது.
இவை தோராயமாக கிமு 200-100 க்கு இடையில் உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம். அதாவது இது பராக்காஸ் காலத்தின் பிற்பகுதியாகும். கிமு 100 இல் நாஸ்கா கலாச்சாரம் தொடங்கியதால், இந்த பூனையானது உருவாவதில் பழைய பராக்காஸ் கலாச்சாரம் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுவதாக ஆராச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த சூழலில் சமீபத்திய ஆய்வுகள் இது தொடர்பில் எங்களுக்கு சில துப்புகளைக் கொடுத்துள்ளன. இது தொடர்பாக பெரு நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையில், இந்த பூனையின் கண்டுபிடிப்பானது மாறுபட்ட கலாச்சார மரபுகளை மீண்டும் நமக்கு கண் முன் கொண்டு வருகின்றது என்று குறிப்பிட்டிருந்தது.

நாஸ்கா கோடுகள் கடவுளை வழிபட குறிக்கப்பட்டவையா?
பெரிய சின்னங்கள் தெய்வங்களை வழிபடுவதற்காக குறிக்கப்பட்டவையா?
நாஸ்கா பாலைவன பகுதியில் கண்டறியப்பட்ட, இந்த குறிப்பிட்ட பூனையின் ஜியோகிளிஃப் (Geoglyph) கிமு 200-100 க்கு இடையில் உருவாக்கப்பட்டவை. ஜியோகிளிஃப் (Geoglyph) என்பது பெரிய வடிவமைப்பு அதாவது 4 மீட்டருக்கு மேல் இருக்கும் சில உருவங்களின் செதுக்கல் ஆகும்.
பொதுவாக இந்த படிவங்கள் கிளாஸ்டிக் பாறைகள் அல்லது கல், கல் துண்டுகள், சரளை அல்லது பூமி போன்ற நிலப்பரப்பின் நீடித்த கூறுகளால் உருவாக்கப்பட்டது. இந்த பெரிய சின்னங்கள் ஏன் பாலைவனத்தில் பதிக்கப்பட்டன என்பது பற்றி முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், அவை பயணக் குறிப்பான்களாக இருக்கலாம் அல்லது வானத்தில் உள்ள தெய்வங்களை வழிபடுவதற்காக குறிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கண்டுபிடிப்பு!
புதிய தொழில்நுட்ப கருவிகளைக் கொண்ட சமீபத்திய ஆண்டுகளில், ஆராய்ச்சியாளர்களால் இந்த கண்டுபிடிப்பானது வெற்றியடைந்துள்ளது. ஏனெனில், பூனையின் வடிவமானது செங்குத்தான சாய்வில் அமைந்திருப்பதால், இது இப்போது கண்டுபிடிக்கப்படாமல் போயிருந்தால், பிற்காலத்தில் இயற்கையாகவே அழிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இப்போது, கவனமாக சுத்தம் செய்யப்பட்ட 2,000 ஆண்டுகள் பழமையான பூனையின் படிவத்தில் சூரியனின் ஒளியானது மீண்டும் பட்டது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக ஆராச்சியாளர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.
நாஸ்கா கோடுகளை எதற்காக வரைந்திருப்பார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்?