மனிதனின் பரிணாம வளர்ச்சி பல மில்லியன் ஆண்டுகளாக தொடர்ந்து மெதுவாக நடைபெறும் நிகழ்வாகும். சீனாவில் சமீபமாக கண்டெடுக்கப்பட்டுள்ள கல் கருவிகள் மூலம், மிகப்பழமையான நம் மூதாதையர்கள் ஏறத்தாழ 2.1 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் வாழ்ந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
ஜோர்ஜியா மாகாணத்தின் ட்மனிசி (Dmanisi in Georgia) என்ற இடத்தில் எலும்புகள் மற்றும் சில கருவிகளை கண்டெடுத்த ஆய்வாளர்கள், வட சீனாவின் சாங்ச்சேன் (Shangchen) பீடபூமியில் சிதிலமடைந்த சில கற்கருவிகளையும் கண்டெடுத்துள்ளனர். இவை இதற்கு முந்தைய காலங்களில் கிடைத்த ஆதாரங்களை விடவும் 270,000 ஆண்டுகள் பழமையானவை.
மிகப்பழமையான வரலாற்றைக் கொண்ட மனித இனத்தின் முன்னோடிகளில் எந்த இனத்தால் இந்தக் கருவிகள் உருவாக்கப்பட்டன என்பது இன்னும் தெளிவாக புலப்படவில்லை.
இவை பல்வேறு நோக்கங்களுக்காக அவர்களால் பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என்பதற்கான அறிகுறிகளும் அக்கருவிகளில் புலப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் சீனாவின் குயின்லிங் மலையடிவாரத்தில் (Qinling Mountains) நடந்த அகழ்வாய்வின் போது கிடைத்த கருவிகள் பெரும்பாலும் படிகக் கற்காளால் செய்யப்பட்டவையாக இருந்திருக்கின்றன.
ஆனால் மிகப்பழமையான வரலாற்றைக் கொண்ட மனித இனத்தின் முன்னோடிகளில் எந்த இனத்தால் இந்தக் கருவிகள் உருவாக்கப்பட்டன என்பது இன்னும் தெளிவாக புலப்படவில்லை.
ஆப்பிரிக்கா – பரிணாம வளர்ச்சியின் பாரம்பரியம்
மனிதர்கள் தங்கள் வரலாற்றில் பலமுறை ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறியதற்கான சான்றுகள் உள்ளன.உதாரணமாக ஆப்பிரிக்காவிற்கு வெளியே வாழ்ந்து வரும் மக்கள் சுமார் 60000 ஆண்டுகளுக்கு முன்பாக ஏதோ ஒரு உந்துதலில் பேரில் தங்கள் பூர்வீகத்தை தேடி அதனை ஆப்பிரிக்காவில் கண்டடைந்தனர்.

ஆனால் யூரோ-ஆசியா பகுதிகளில் மனித இனம் விரவி இருந்ததற்கான எந்த சான்றுகளும் ட்மனிசி ஆய்வுக்கு முன்னர் கிடைக்கவில்லை.
நேச்சர் பத்திரிகையின் ஆசிரியரும், பண்டைய மனிதர்கள் பற்றிய ஆய்வாளருமான (palaeoanthropologist) ஜான் கேப்பல்மேன் (John Kappelman), ” கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்கு ஆசியா வரையிலும் சுமார் 14000 கிமீ தொலைவிற்கு ஆதி மனித இனம் பரவி இருந்தது” எனக் கூறுகிறார்.
ஆப்பிரிக்கா பாரம்பரியமாக மனித பரிணாம வளர்ச்சியின் இயந்திரமாக இருந்துள்ளது. உலகின் மற்ற பகுதிகளுக்கெல்லாம் பரவுவதற்கு முன்னரே முக்கிய மனித இனங்கள் ஆப்பிரிக்காவில் தான் தோன்றியுள்ளன.
எனினும் சில விஞ்ஞானிகள் இந்த வரலாற்றின் முக்கிய சாட்சியாக ஆசியாவை முன்வைக்கிறார்கள். இந்த புதிய கண்டுபிடிப்புகள் மூலம் அவர்கள் இன்னும் வியந்து போகக்கூடும்
ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியா சென்ற ஆதி இனம்
இங்கிலாந்தின் எக்செட்ர் பல்கலைக்கழக (University of Exeter) பேராசிரியர் ராபின் டென்னெல் (Robin Dennell), ” எத்தியோப்பியாவில் இருந்து கிடைத்துள்ள சில சான்றுகளில் சில துப்புகள் கிடைத்துள்ளதாகவும், அதன் மூலம் சுமார் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் கூர்மையான கற்களில் செதில்களை எவ்வாறு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை அறிந்திருந்தான்” என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்

அவர்கள் சிங்கம் போன்ற பெரிய மற்றும் வலுவான விலங்குகளால் துரத்தப் படுவதற்கு முன்னர் சிதைந்த மாமிசங்களை உறிஞ்சுவதற்கு பயன்படும் படியான எளிமையான ஒரு கருவியை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு புதிய பாதை திறந்ததாக டென்னெல் கூறுகிறார்.
மேலும் “அத்தகைய புதிய திறன்களைக் கொண்டு அவர்கள் இனம் ஆப்பிரிக்காவில் இருந்து அதே போன்ற சூழலை உடைய ஆசிய நாடுகளின் சமவெளிகள் மற்றும் வனப்பகுதிகளில் விரிவடைந்தது. அதற்கு முன்னர் ஆசிய விலங்கினம், கருவிகளை பயன்படுத்த தெரிந்த ஒரு இருகால் உயிரினத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை.” என டென்னெல் கூறுகிறார்.
ஆசியா – மனித பரிணாம வளர்ச்சியின் அடிப்படை
சீனாவில் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் இருந்திருந்தால், ஆசியாவின் மேற்கு பகுதிகளில் அதற்கான ஆதாரங்கள் இருக்க வேண்டும்.
ஆசியாவில் வாழ்ந்த மனித இனத்தின் வரலாறு, 2.5 முதல் 2.6 மில்லியன் வருடங்களை கடந்து செல்ல முடியும். அதுதான் ஆதி மனிதன் தட்டையான கற்களை தலையணையாக பயன்படுத்த தொடங்கிய காலம் என்கிறார் ராபின் டென்னெல்.

ஆசிய ஆய்வு அந்த கண்டத்தை மனித பரிணாமத்தின் “திடமான அடிப்படை” என்று காட்டியதாக சொல்கிறார் டென்னெல்.
மேலும் அவர், ” யூரோ-ஆசியாவின் மனித பரிணாம வளர்ச்சியை இப்போது நாம் ஐரோப்பாவை மையமாகக் கொண்டே அணுகி வருகிறோம். ஐரோப்பாவிலும் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவின் மனித பரிணாம வளர்ச்சி பற்றிய பதிவுகள் சிக்கலானதாகவும் புதுமையானதாகவும் அறியப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
புலம்பெயர்தலில் காலநிலையின் பங்கு
வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழலில், உருவாக்கப்பட்ட சுமார் 80 கலைப்பொருட்கள் மற்றும் 16 கருவிகள்புதைபடிமான மண்ணில் கண்டறியப்பட்டுள்ளன. இவை உலர்ந்த மற்றும் குளிர்ந்த காலநிலைகளில் இருந்து வந்தவை.
பொதுவாக கணிசமான அளவுக்கு சீனாவின் லோஸ் பீடபூமியில் மனிதர்கள் வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். சுமார் 1.3 முதல் 2.1 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலகட்டத்தில் பல்வேறு காலநிலை சூழ்நிலைகளின் கீழ் அவர்கள் வாழ்ந்திருக்கலாம்.
பீடபூமியில் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு மாறாக, காலநிலைக்கேற்ப ஆதி மனிதர்கள் எண்ணிக்கையில் அதிகரித்து அல்லது குறைந்து போயிருக்கலாம்
டெக்சாஸ் பல்கலைக்கழக (University of Texas) ஆசிரியர் டாக்டர் கேப்பல்மான் (Dr Kappelman), மனித இனத்தின் பரவுதல் பெரும்பாலும் பனி யுகத்தின் மாறுபட்ட காலநிலைகளில் நிகழ்ந்திருக்கிறது. குளிர்காலங்களில் உயரமான நிலப்பகுதிக்கு இடம்பெயர்தல் என்பது நடத்தை ரீதியான மாற்றங்களை குறிக்கலாம்.
லோஸ் பீடபூமியில் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு மாறாக, காலநிலைக்கேற்ப ஆதி மனிதர்கள் எண்ணிக்கையில் அதிகரித்து அல்லது குறைந்து போயிருக்கலாம் ” என்கிறார்.
இந்தோனேசியாவின் ஹோபிட்டுகள்
ஹோமோ புளோரிஸென்ஸிஸ் (Homo floresiensis), பின்னர் “ஹோபிட் ” (Hobbit) எனப் பெயரிடப்பட்டது, இது இந்தோனேசிய தீவு புளோரஸில் (Indonesian island of Flores) சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு சிறிய, அழிந்த மனித இனமாகும். இந்த இனத்தின் பெரியவர்களில் ஒருவர் 1.1 மீட்டர் (3.7 அடி) உயரம் தான் இருந்திருப்பார் என அறியப்படுகிறது .
ஹோபிட் , ஹோமோ எரக்டஸின் (Homo erectus) ஒரு சிறிய வடிவமாக இருக்கலாம் என பல விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள்.ஹோமோ எரெக்டஸ் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிய முதல் மனித இனமாக நீண்ட காலமாக கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில், ஹோமோ எரக்டஸ் இனம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் புளோரஸுக்கு வந்து அங்கு தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் அளவில் சுருங்கி விட்டதாக நம்பப்படுகிறது .

ஆனால் ஒரு சிலர் ஹொபிட் இனத்தின் உடற்கூறின் அம்சங்களை ஆராய்கையில் அவர்கள் ஹோமோ எரக்டசின் மூதாதையர் என்றும் மிகவும் பழமையானவர்கள் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். ஹொபிட்டின் முன்னோடி ஒருவேளை அஸ்டிரோலியோபிதேசின் (australopithecine )ஆக இருக்கலாம். இவர்கள் ஆப்பிரிக்காவில் வசித்து வந்த முந்தைய, மேலும் ஒரு ஆதி இனத்தவர், ஆனால் ஆப்பிரிக்காவிற்கு வெளியே இவர்கள் வாழ்ந்ததற்கான சாட்சிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
ராபின் டென்னெல் இதுபற்றி கூறுகையில் “ஷாங்க்சென்ஸில் உள்ள மனித இனம் தயாரித்த 2.1 மில்லியன் வயதுடைய கலைப்பொருட்கள் ஒரு பழமையான வடிவமாக இருந்தது. அது அந்த சமயத்தில் ஒரு அஸ்டிரோலியோபிதேசின் போல அல்ல.”
இந்த கண்டுபிடிப்புகள் ஹோமோ ஃப்ளோரேசியென்ஸிஸ் பழமையான அஸ்டிரோலியோபிதேசின் வகை மூதாதையராக இருப்பதற்கான வாய்ப்புக்கு வழி காட்டுகிறது.. ஆனால் நமக்கு எலும்புத்திறன் சான்றுகளும், திறந்த மனமும் தேவை. இதில் நமக்கு தெரியாத அளவுக்கு பல விஷயங்கள் இருக்கின்றன, ஷாங்க்சென் சான்றுகள் மிக சிக்கலானவை . ” என்கிறார்.