வரலாற்றுக்கு முந்தைய காலம் வாழ்ந்த மனிதர்கள், தாங்கள் கண்ட காட்சிகள் மற்றும் வேட்டையாடிய மிருகங்களின் உருவங்களை குகைகள் மற்றும் கல்லறை சுவர்களில் ஓவியமாகத் தீட்டுவது வழக்கம். இத்தகைய வரலாற்று சிறப்பு வாய்ந்த ஓவியங்கள் தமிழ்நாட்டில் சித்தன்னவாசல், நீலகிரி, தருமபுரி, விழுப்புரம், மதுரை போன்ற மாவட்டங்களில் உள்ள மலைக்குகைகளில் இன்றும் காணப்படுகின்றன.
எகிப்தியர்களின் கல்லறைகளில் இருந்து, சுமார் 4,600 ஆண்டுகள் பழமையான அரியவகை வாத்து ஓவியங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். “மீடியம் கீஸ்” என்று அழைக்கப்படும் இந்த ஓவியம், 1800-களில் நெஃபர்மாத் என்ற எகிப்தியரின் கல்லறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 27 செ.மீ உயரமும் 172 நீளமும் கொண்ட இந்த ஓவியம், நைல் நதிக்கரையில் ஒரு வேட்டைக் காட்சியைக் குறிக்கிறது. இந்த ஓவியமானது, மாறுபட்ட கலாச்சார மரபுகளை மீண்டும் நமக்கு கண் முன் கொண்டு வருகின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று, எகிப்திய விஜியர் மற்றும் அவரது மனைவியின் கல்லறையில் இருந்து, சுமார் ஐந்து மில்லினியன் ஆண்டுகள் முன்பு மல்பெரி வண்ண கருப்பு தாது கொண்டு வரையப்பட்ட மற்றுமொரு ஓவியம் கண்டறியப்பட்டது. இந்த ஓவியமானது, இப்போது கெய்ரோவின் எகிப்திய அருங்காட்சியகத்தில் உள்ளது. இருப்பினும், மேற்கூறிய இந்த அரியவகை வாத்து இனங்கள் இப்போது உள்ள எந்த நவீன வாத்து இனங்களுக்கும் ஒத்துப்போகவில்லை.

இதுகுறித்து எகிப்திய பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப உதவியாளர் ஆய்வு ஆசிரியர் அந்தோனி ரோமிலியோ என்பவர் நடத்திய ஆய்வில், கல்லறையில் வரையப்பட்ட மூன்று வாத்து ஓவியங்களின் அளவீடுகளை எடுத்துக்கொண்டார். ஓவியத்தில் உள்ள ஒரு வகை வாத்து ஓவியம், நவீன கிரேலாக் வாத்து (அன்சர் அன்சர்) ஐ ஒத்திருப்பதைக் கண்டறிந்தார். அதேசமயம், அது ஒரு பீன் (ஏ. ஃபபாலிஸ்) வாத்து இனமாகவும் இருக்கலாம். இரண்டாவது வாத்து ஓவியம் வெள்ளை நிறமுள்ள நவீன வாத்தினை (ஏ. ஆல்பிஃப்ரான்கள்) ஒத்திருந்தது. மூன்றாவது வாத்து ஓவியம் நவீன சிவப்பு மார்பக வாத்தினை (பிராண்டா ரூஃபிகோலிஸ்) ஒத்திருக்கிறது. ஆனால், அதன் உடல் மற்றும் முகத்தில் வண்ண வடிவங்களில் மட்டும் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது. மற்ற வாத்து ஓவிங்களின் இனம் துல்லியமாக உறுதி செய்யப்பட்டதால், இந்த மூன்றாவது வாத்து வகை உண்மையிலேயே அழிந்துபோன உயிரினமா, அல்லது எஞ்சியிருக்கும் உயிரினத்தின் இனமா என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.
இதுவரை, எந்த எகிப்திய தொல்பொருள் தளத்திலும் நவீன சிவப்பு மார்பக வாத்துக்களின் எலும்புகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், இந்த சிவப்பு மார்பக பறவைக்கு இதுவரை கண்டறியப்படாத பறவைக்குரிய எலும்புகள், மூக்கின் நுனியில் காணப்பட்டதாக ரொமிலியோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வரலாற்றுக்கு முந்தைய காலத்து விலங்கினங்களால், எகிப்தில் பசுமையான புல்வெளிகள், ஏரிகள் மற்றும் வனப்பகுதிகள் என தேசம் முழுவதும் நிறைந்து காணப்பட்டது கண்டறியப்பட்டது. “இதன்மூலம் ஆரம்பகால மனிதர்கள் இந்த பண்டைய விலங்குகளுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தனர்” என்பதை உணர முடிவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவற்றின் ஓவியங்களை கல்லறை மற்றும் குகைகளில் காணும்போது, இந்த பழங்கால இனங்கள் தற்போது அழிந்துவிட்டன என்று தெளிவாகத் தெரிகிறது. இவற்றில் குறிப்பாக, ஓரிக்ஸ், மான், கழுதை மற்றும் டாரோச் போன்ற விலங்குகளின் ஓவியங்கள் இன்று வரை ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியாத இனங்களாக கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தொல்பொருள் பேராசிரியரான அந்தோனி ரோமிலியோ கூறும்போது, நாங்கள் தற்போது கண்டுபிடித்துள்ள பழமை வாய்ந்த வாத்து ஓவியங்கள் தொடர்பான தகவல்கள் மிகவும் வியக்கத்தக்கது. இதுபோன்று, இனி வரும் காலத்தில் இன்னும் பல உருவங்கள் மற்றும் பழமையான வடிவமைப்புகளை கண்டுபிடிப்பதற்கான முன்னோடியாக இது திகழும் என்கின்றார்.
Also Read: உலகிலேயே மிகவும் வண்ணமயமான 10 பறவைகள்!
நன்றாக சிந்தித்து பிரச்சினைகளை தீர்க்கும் புத்திசாலித்தனமான 10 விலங்குகள்