3000 வருடமாக பாதுகாக்கப்பட்ட உடல் கண்டுபிடிப்பு

Date:

எகிப்து என்றவுடன் நமக்குப் பாலைவனமும், முதுகு உயர்ந்த ஒட்டகங்களும் மட்டுமே நினைவிற்கு வரும். அதனோடு பிரம்மிடுகளும். ஃபாரோ எனப்படும் அரசகுலத்தைச் சேர்ந்தவர்கள் தான் முதன்முதலில் இந்த பிரம்மிடைக் கட்டத் துவங்கினார்கள். பல லட்சக்கணக்கான மக்களையும் அடிமைகளையும் சாறு பிழிந்ததன் விளைவாக பிரம்மிடுகள் கட்டிமுடிக்கப்பட்டன. அந்தக் காலத்தில் இறந்துபோன அரசர்கள், அரசிகள் மற்றும் ராஜாங்க அதிகாரிகளின் உடலைப் பதப்படுத்தி இதனுள் வைக்கவே இந்த பிரம்மிடுகள் கட்டப்பட்டன என்றும் கதைகள் உள்ளன.

mummy
Credit: Getty Images

கடந்த 2008 ஆம் ஆண்டு  எடுக்கப்பட்ட ஓர் ஆய்வின்படி 135 பிரம்மிடுகள் எகிப்தில் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றில் பல அளவுகளில் மிகச் சிறியவை. அதேபோல் இறந்து போனவர்களின் உடலைப் பதப்படுத்துதலும் (மம்மி உருவாக்கம்) அங்கே பிரதானமாக இருந்திருக்கிறது. அப்படி ஓர் மம்மியைத்தான் சென்ற வாரம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

கல்லறையை நெருங்க ஐந்து மாதங்கள் தேவைப்பட்டிருகின்றன.

3000 வருடம் பழைமையானது

பிரான்சை மையமாகக்கொண்டு இயங்கும் ஆராய்ச்சிக் குழு ஒன்று ஒரு மாதத்திற்கும் மேலாக எகிப்தில் ஆய்வினை மேற்கொண்டு வருகிறது. எகிப்தின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள எல் அசசெஃப் என்னும் நகரத்தில் தான் இந்த மம்மியானது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனை ஆய்வு செய்ததில் அது சுமார் 3000 வருடம் பழைமையானது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் கிடைத்துள்ள இரண்டாவது மம்மி இதுவாகும்.

அறிந்து தெளிக!!
பிரம்மிடுகள் எகிப்தில் மட்டும் இல்லை. ஈராக், சூடான், நைஜீரியா, கிரீஸ், ஸ்பெயின், சீனா, வட அமெரிக்கா ஏன் இந்தியாவில் கூட பிரம்மிடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. நினைவுச்சின்னமாக பிரம்மிடுகளை எழுப்பும் வழக்கம் உலகம் முழுவதும் இருந்திருக்கிறது.

எகிப்தில் மம்மிக்கள் கிடைப்பது சாதாரண விஷயம் தான். ஆனால் அதனைக் கைப்பற்ற ஆராய்ச்சியாளர்கள் மிகுந்த சிரமப்பட்டிருக்கின்றனர்.

1000 சிலைகள்

இரண்டாவது கல்லறையை நெருங்க ஐந்து மாதங்கள் தேவைப்பட்டிருகின்றன. பல்வேறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய போதும் இவ்வளவு காலம் பிடித்திருக்கிறது. மேலும் கல்லறையைச் சுற்றிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

statutes-egypt
Credit: Getty Images

பழங்காலத்தில் கல்லறைகளுக்குப் பாதுகாப்பாக இப்படி உருவங்களை புதைத்து வைக்கும் பழக்கம் பல நாடுகளில் இருந்தது என்பதை இதனோடு பொருத்திப் பார்த்தால் ஓரளவு விடை கிடைத்துவிடும். ஆனாலும் ஆயிரம் சிலைகள் கொஞ்சம் ஓவர் தான்!!

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!