ரத்த அழுத்தம் மாறுபாடு: என்னென்ன அறிகுறிகள்? தடுப்பதற்கான வழிமுறைகள்!

Date:

நம் உடலின் ரத்த நாளங்களில் குறிப்பிட்ட அளவு அழுத்தம் இருந்தால் மட்டுமே ரத்தமானது டல் முழுவதும் சீராக ஓடும். அதாவது, இரத்தம் நம் உடல் முழுவதற்கும் பரவுவதற்கு ஒரு விதமான அழுத்தம், உந்துசக்தி தேவைப்படும். இந்த அழுத்தம் நம் உடலிலுள்ள எல்லா பாகங்களுக்கும் ரத்தத்தை எடுத்துச் செல்லும். இந்த அழுத்தமானது வயது, உயரம், எடை இவற்றைப் பொறுத்து சிறிதளவு மாறுபடலாம். இந்த ரத்த அழுத்தம், குறிப்பிட்ட அளவைவிடக் குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கும் நிலையையே, ‘ரத்த அழுத்த நோய்’ என்கிறோம்.

ஸ்பிக்மோமானோமீட்டர் (Sphygmomanometer) என்ற கருவியின் மூலம் ரத்த அழுத்தம் கணக்கிடப்படுகின்றது. ரத்த அழுத்தம் சீராக இல்லாதது உறுதிசெய்யப்பட்டால், கொழுப்பு அளவிற்கான பரிசோதனை, ஹீமோகுளோபின் அளவு, தைராய்டு பரிசோதனை மற்றும் இதயப் பரிசோதனைகள் செய்யப்படும். மேலும் சிறுநீரகப் பிரச்னைகள் இருக்கின்றனவா என்பதும் பரிசோதிக்கப்படும்.

பொதுவாக, ரத்த அழுத்தம் ஒருவருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்று இருந்தால், அது வழக்கமானது சராசரியானது. இதில் 120 என்பது, இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுகின்ற அழுத்தம், இது சிஸ்டாலிக் அழுத்தம் (Systolic pressure). இதில் 80 என்பது, இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியேற்றிய பின், தன் அளவில் விரிந்து உடலில் இருந்து வருகின்ற ரத்தத்தைப் பெற்றுக்கொள்கிறபோது ஏற்படுகின்ற அழுத்தம், இது டயஸ்டாலிக் அழுத்தம் (Diastolic pressure).

ரத்த அழுத்தம் குறைவது/அதிகரிப்பதற்கான அறிகுறிகள்

ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கான அறிகுறிகளாக இதயத்துடிப்பு அதிகரிப்பு, தலை சுற்றுவது, பார்வை மங்குவது, மயக்கம், தன்னிலை அறியாதநிலை, அதிக அளவில் வியர்வை வெளியேறுவது, அடிக்கடி சிறுநீர் வருவது போன்றவை இருக்கலாம்.

குறைவான ரத்த அழுத்தத்தின் அறிகுறிகளாக தலை சுற்றுவது, வியர்வையாக கொட்டுதல், முகம் வீங்குவது போன்றவை ஏற்படலாம்.

ரத்த அழுத்தம்

கவனிக்க வேண்டியவை

உங்கள் இரத்த அழுத்தத்தை அளவிடும் போது நீங்கள் முக்கியமாக இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, நீங்கள் நிமிர்ந்து உட்கார்ந்திருக்கும்போது ​​உங்கள் வலது கை உங்கள் இதயத்தின் மட்டத்தில் (நெஞ்சு அளவிற்கு) இருக்கும்போது இரத்த அழுத்தத்தை அளவிடுவதுதான் இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கான சிறந்த மற்றும் சரியான வழியாகும். ஏனெனில் இந்த முறையில் கிடைக்கும் அளவீடுதான் சரியான அளவில் இருக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ருமுறை மட்டுமே ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துவிட்டு, அதைக்கொண்டு ‘உயர் ரத்த அழுத்தம்’ இருக்கிறது என முடிவுசெய்யாமல் குறைந்தது, வாரத்தில் மூன்று நாட்களாவது பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அப்போதும் அளவீடுகளில் அதிகமாக வந்தால் மட்டும் அதை உயர் ரத்த அழுத்தமாக எடுத்துக்கொள்ளலாம்.

ரத்த அழுத்த பிரச்சினைகளை எப்படி தவிர்ப்பது:

  • தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
  • சைக்கிளிங், நீச்சல், விளையாட்டு என உடலுழைப்பு தரும் செயல்களில் ஈடுபட வேண்டும்.
  • புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். கூடியவரையில் சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • உண்ணும் உணவில், கொழுப்பு மற்றும் உப்பின் அளவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
  • ஒருவர் 7 மணி நேரமாவது ஒரு நாளைக்கு உறங்க வேண்டும்.
  • யோகா செய்வது நல்லது.
  • உடல் எடையை சீரான அளவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • மன அழுத்தமும் பதற்றமும் அடையாமல் மனதை அமைதியாக்க வேண்டும். வீட்டிலுள்ளவர்களிடம், நண்பர்களிடம் உரையாடினாலே மனம் அமைதியாகும்.
  • சிறிது நேரமாவது இசையைக் கேட்டு மகிழுங்கள், இது உங்கள் மனதை அமைதியாக்கும்.
  • மது அருந்துதல் மற்றும் புகைப் பழக்கங்களை கைவிட வேண்டும்.
  • தொற்றுநோய்கள் அதிகரிக்காமலிருக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
  • மட்டன், மாட்டு இறைச்சி போன்ற அதிகக் கொழுப்புச்சத்துள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

Note: இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவை பொதுப் பயன்பாட்டுக்கானவை. ஏதேனும் தொந்தரவுகள் இருப்பின், தகுந்த மருத்துவரிடம் ஆலோசனைகளை பெற்று உடல் நலனை சீராக வைத்துக்கொள்ளுங்கள்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!