கணினியால் ஏற்படும் கண் பாதிப்புகள்: கண்களை பாதுகாப்பது எப்படி?

Date:

இன்றைய நவீன காலத்தில், மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு பொருள் கணினி எனலாம். இணையத்தின் மூலம் எத்தகைய தகவலையும் நம்முடைய விரல் நுனியில் வைத்துக் கொள்ள முடியும். அலுவலகங்கள் முதல் வீடுகள் வரை உள்ள எல்லா இடங்களிலும் கணினியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே, கணினி திரையில் ஒளிரும் கேத்தோடு கதிர்கள் கண்களில் பாதிப்பு ஏற்படுத்துவதும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதன் காரணமாக, கண்களில் வலி மற்றும் எரிச்சல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, சிலருக்கு தலைவலியும் சேர்ந்துள்ளது. இதனால், கண்களில் பார்வைத் திறன் குறைந்து வரும்.

கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்

”கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” என அழைக்கப்படும் இந்த குறைபாட்டால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த குறைபாடுகளை பற்றி தெரிந்துகொள்ளும் முன் கண்ணின் செயல்பாடுகளைப் பற்றி அறிவது அவசியம். கண், தனது இமைகளை எப்போதும் மூடித்திறந்து கொண்டே இருக்கும். இது கண்களை சுத்தப்படுத்துவதற்காக செயல்படும் இயற்கை நிகழ்வு. இதன் மூலம், கண்ணில் நீர் சரியான பாதையில் செல்வது உறுதி செய்யப்படுகிறது. கண்களில் சுரக்கும் கண்ணீர் விழித்திரையில் படும் ஒளியை உள்வாங்காமல் பிரதிபலிப்பதால் பார்வை திறனில் பாதிப்பு ஏற்படுவதில்லை. மேலும், கண் இமைகளின் செயல்களால் கண்களின் வெளிப்புறத்தில் உள்ள அழுக்கு, தூசு போன்றவை கண்களின் உள்பகுதிக்கு செல்லாமல் தடுக்கப்படுகிறது. இவ்வாறு செயல்படவில்லை எனில், கண்ணில் உள்ள தூசு மற்றும் அழுக்கு பொருட்கள் மூச்சுக்காற்றுக்குள் சென்றுவிடக்கூடும்.

கணினித்திரையை கூர்ந்து பார்ப்பதால் கண் இமைக்கும் நேரம் குறைகிறது. இதனால், கண் இமைப்பதால் ஏற்படும் இயற்கையான செயல் தடுக்கப்பட்டு கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. கண்விழித்திரைகள் உலர்ந்து போகும் போது தற்காலிக நிவாரணத்திற்காக கண்களில் ”கண் சொட்டு மருந்துகள்” பயன்படுத்தப்படுகின்றன. அவை விழித்திரையை ஈரமாக்குகின்றன. மேலும், கண்ணின் ஈரப்பதம் குறைவதால், கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு பார்வைக் குறைபாடு, கண்கள் அரிப்பு, நீர்வடிதல், எரிச்சல், கண்களில் சிறு கட்டிகள் போன்றவை ஏற்படுகின்றன. அதுமட்டுமின்றி, சிலர் இரவு நேரங்களில் கணினி, செல்போன், தொலைக்காட்சி போன்றவற்றை நீண்ட நேரம் பார்க்கும் பழக்கம் கொண்டிருப்பர். இதனால் பசியின்மை, தூக்கமின்மை, அஜீரணம் போன்ற உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. எனவே, கண்ணின் இயற்கையான நிகழ்வுகளை தடுக்காமல் இருந்தால் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

computer eye problem003
Credit: coopervision.ca/

”கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” என்பது ஒரு வாழ்கை முறை சார்ந்த நோய். தற்போதைய சூழ்நிலையில் கணினி இல்லாத வாழ்கை முறையை பின்பற்றுவது இயலாத ஒன்று. ஆனால், ஒரு சில வழிமுறைகளின் மூலம் இந்த பாதிப்புகளை தவிர்க்க முடியும். அவற்றில் முக்கியமான ஒன்றுதான் ”பாமிங்முறை”. கணினியில் வேலை செய்யும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஐந்து நிமிடம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். ஓய்வு எடுக்கும்போது இரு கண்களையும் மூடிக்கொண்டு சற்றுநேரம் இரு உள்ளங்கைகளை விழிகளின் மேல் வைத்துக் கண்களை மூடித்திறந்து ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு ஐந்து நிமிடம் கண்களை மூடித்திறந்தால் கண்ணீர் வழக்கமான பாதையில் செல்லும். இதனால் மன அழுத்தம் குறையும்.

அதேபோன்று, தினமும் கண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கண்களை மூடி யோகா அல்லது தியானம் செய்யலாம். மேலும், கணினி சுவரொட்டியில் அடர்த்தி குறைவான நிறம் வைத்தால் கண்களுக்கு வரும் குறைபாடுகளை குறைக்கலாம். ஏனெனில், மிக அடர்த்தியான வண்ணங்களைப் பார்த்தால் கண்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படும். இது விழித்திரையில் உள்ள நீரை விரைவாக உலர வைத்துவிடும். எனவே, தலைவலி ஏற்படும் போதோ, பார்க்கும் பொருட்கள் எல்லாம் மங்கலாக தெரியும்போதோ அல்லது பார்வையில் நீங்களே ஏதேனும் வித்தியாசத்தை உணர்ந்தாலோ தாமதிக்காமல் உடனே கண் மருத்துவரிடம் சிகிக்சை மேற்கொள்வது நல்லது.

தாமதப்படுத்தும் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் கண்ணின் இயல்பான திறன் குறைந்துக் கொண்டே வரும். ஆகவே, எச்சரிக்கையாக இருப்போம். கண்களில் ஏதேனும் குறைபாடு இருப்பின் தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செயல்படவும்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!