துளசியில் மருத்துவ குணம் ஏராளம் தான்… ஆனால் பக்க விளைவுகள் பற்றி தெரியுமா? யாரெல்லாம் சாப்பிடக் கூடாது…

Date:

‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்ற பழமொழி நாம் உணவாக உட்கொள்ளும் அனைத்து உணவுபொருளுக்கும் பொருந்தும். பல்வேறு நோய்களில் இருந்து விடுதலை தரும் குணம் கொண்ட மூலிகை தான் துளசி… இருந்தும் அளவுக்கு அதிகமாக நாம் எடுத்துக்கொண்டால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும்? வாருங்கள் பார்க்கலாம்.

side effects tulasi003 1
Credit: drinkherbaltea.com/

துளசியின் பக்க விளைவுகள்

நீரிழிவு நோயாளிகள் மற்றும் குறைந்த இரத்த அழுத்தத்திற்கு மாத்திரை சாப்பிடுபவர்கள் துளசி சாப்பிட்டால், அது சர்க்கரையின் அளவினை மேலும் குறைய செய்யும். அது மட்டும் இன்றி, தலைச்சுற்றல், வலிப்பு, குமட்டல், விரைவான இதய துடிப்பு, வாய் மற்றும் தொண்டை வீக்கத்திற்கு வழிவகுக்கலாம்.

துளசியில் ‘யூஜெனோல்‘ எனும் ஒரு சக்திவாய்ந்த கலவை பொருள் உள்ளது. எனவே, நீங்கள் அளவுக்கு அதிகமாக துளசி சாப்பிடும் போது, அது உங்களுக்கு விஷமாக மாறுகிறது. மேலும், இருமல், சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் வருதல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

அடிக்கடி துளசி சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்களை குறைத்து, கரு உருவாவதில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதேபோன்று, இளம்பெண்கள் மாதவிடாய் நேரங்களில், துளசி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

அசெட்டமினோஃபென் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் தொடர்ந்து துளசியை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம். ஏனெனில், இரண்டுமே வலி நிவாரணிகளாகும். இரண்டையும் ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளும்போது அவை கல்லீரலின் செயல்பாடுகளை பாதிக்கும்.

துளசியில் இருக்கும் முக்கியமான ஒரு பொருள் எஸ்ட்ராகல். எனவே, நீங்கள் அதிக அளவு துளசியை உட்கொண்டால் எஸ்ட்ராகல் அளவு அதிகரித்து உடலில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

கர்ப்பமாக இருக்கும் அல்லது கர்ப்பமாகுவதற்கு முயற்சிக்கும் பெண்கள் துளசியை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இது இனப்பெருக்க திறனை பாதிக்கும். அதுமட்டுமின்றி, தாய் மற்றும் குழந்தைக்கு நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தி, முதுகு வலி, வயிற்றுப் போக்கு, அதிக ரத்தம் வெளிப்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே, கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று துளசி எடுத்து கொள்வது நல்லது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!