இந்த உலகம் முழுவதும் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை பல மாதங்களாக மாற்றிவிட்டது இந்த கொரோனா பெரும் தொற்று. பெரும்பாலும் மக்கள் பேசும்போதோ, இருமும்போது அல்லது தும்மும்போதோ வெளிப்படும் சுவாசத் துளிகளால் மற்றவருக்கும் கொரோனா பரவுகிறது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமா நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது, நாம் அதிகம் தவறவிட்ட விஷயங்களில் ஒன்று ஹோட்டல்களில் சென்று சாப்பிடுவது. வார இறுதி நாட்களில் நண்பர்களுடன், குடும்பத்துடன், உறவினர்களுடன் சென்று நன்றாக சாப்பிட்டு பல மாதங்கள் ஆகி இருக்கும்.
ஊரடங்குகள் தளர்விற்கு பிறகு, தற்போது உணவகங்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துவிட்டன. சிலர் உணவகங்களுக்கு சென்று உணவருந்த தொடங்கிவிட்டோம் . இது பாதுகாப்பானதா அல்லது பாதுகாப்பற்றதா? நீங்கள் உணவகத்துக்குச் செல்லத் திட்டமிட்டால், அங்கீகரிக்கப்பட்ட அமைப்பால் (நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம்) அறிவிக்கப்பட்ட சில பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அறிந்து வைத்துக்கொள்வது அவசியம். பெரும்பாலான உணவகங்கள், சில தேவையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கடைபிடிக்கின்றன.
கொரோனா பரவலைத் தடுக்க, நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையமானது (CDC) வாடிக்கையாளர்கள், உணவக உரிமையாளர்கள், பணியாளர்கள், மற்றும் அங்கு வசிக்கும் மக்களை பாதுகாக்கக்கூடிய வகையில் சில பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் பார்கள் இதனை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
கொரோனா காலத்தில் ரெஸ்டாரெண்ட் செல்லும் போது கவனிக்க வேண்டியவை
மிகக் குறைந்த ஆபத்து:
வாகனத்தில் அமர்ந்து உணவருந்தும் முறையை கொண்டுள்ள உணவகங்கள், டெலிவரி, டேக்-அவுட் மற்றும் கர்ப்-சைட் பிக்-அப் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கும் உணவகங்களில் ஆபத்து குறைவானதே.
அதிக ஆபத்து:
உணவகங்களின் உட்புற அல்லது வெளிப்புற இருக்கைகளில், போதுமான 6 அடி இடைவெளியில் டேபிள்கள் மற்றும் இருக்கைகளை அமைத்து, அமர்ந்து உணவருந்தும் முறையைக் கொண்டுள்ள உணவகங்களில், டெலிவரி, டேக்-அவுட் (Take-out) மற்றும் கர்ப்-சைட் பிக்-அப் (Curb-side pickup) அனுமதிக்கும் உணவகங்கள் அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியவை.
மிக அதிக ஆபத்து:
6 அடி இடைவெளிக்கு குறைத்து டேபிள்களை இருக்கைகளை அமைத்து, உட்புறம் மற்றும் வெளிப்புறம் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கும் உணவகங்கள் மிக மிக ஆபத்தானவை.
உச்சபட்ச ஆபத்து:
ஆறு அடிக்கு குறைவான இடைவெளி கொண்ட, உட்புறம் மற்றும் வெளிப்புறம் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கும் உணவகங்கள் உங்களுக்கு ஆபத்து நிறைந்தவை.
மேலே குறிப்பிடப்பட்ட அளவுகளில், பாதுகாப்பான அளவீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் உணவகங்களில் மட்டுமே நீங்கள் உணவருந்த செல்வது சரியானது.
அசுத்தமான, வைரஸ் பரவியிருந்து சுத்தம் செய்யப்படாத மேற்பரப்பில் இருந்தும் வைரஸ் கைகளுக்கு பரவக்கூடும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, எப்போதும் முகக்கவசத்தை அணிந்து, மேற்பரப்புகளைத் தொடாமல் தவிர்ப்பது நல்லது, தவறி தொட்டுவிட்டால், சாப்பிடுவதற்கு முன்பும் சானிடைசர் மூலம் கைகளை நன்கு சுத்தம் செய்து, சமூக விலகலைப் பின்பற்றுங்கள்.