Home நலம் & மருத்துவம் வலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா?

வலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா?

நம்மில் பலர் பல வகையான மூட நம்பிக்கைகளைக் கடைபிடித்து வருகின்றோம். சில மூட நம்பிக்கைகள் மற்றவரை எந்த விதத்திலும் பாதிக்காதவாறு இருக்கும். சில மூட நம்பிக்கைகள் அனைவரையும் பாதிக்கக் கூடும். இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் நம் அனைவருக்கும் தேவையற்றதே. ஒரு சில மூட நம்பிக்கையில் சில நன்மைகளும் இருக்கும்.

அந்த வகையில், ஒரு சுவாரசியமான மூட நம்பிக்கையும் இருக்கிறது. அது என்னவென்றால் கண்கள் துடிப்பது தான். கண்கள் துடிப்பது உண்மையில் நல்லதா..? கெட்டதா..?  எந்தக் கண் துடிப்பது ஆண்களுக்கு நல்லது..? பெண்களுக்கு எது கெட்டது…? எவ்வாறு இதைத் தடுப்பது போன்ற பல வகையான கேள்விகளுக்குப் பதிலே இந்த பதிவு.

கண்கள் துடிக்கக் காரணங்கள்

நமது கண்கள் துடிப்பதற்கு ஒரு சில காரணங்கள் உள்ளன. இதனை ஆங்கிலத்தில் யோகிமியா (myokymia) என்று அழைப்பார்கள். கண்களில் உள்ள தசைகள் அல்லது நரம்புகள் இழுப்பது போன்ற நிலை ஏற்படுவதே கண் துடிப்பாகக் கருதுகின்றனர்.

Eye Twitching

கண்கள் துடித்தால் பல வகையான பலன்கள் கிடைப்பதாக நம்பப்படுகிறது. குறிப்பாக வலது கண் துடிப்பதால் நினைத்தது அப்படியே நடக்கும் என்றும், வலது புருவம் துடித்தால் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும் என்றும், வலது கண் இமை துடிப்பதால் மகிழ்ச்சியான செய்தி வரும் என்றும் பலரால் நம்பப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், கண்ணின் நடுப்பக்கம் துடித்தால் உங்களின் துணையைப் பிரிந்து விடுவீர்கள் என்றும், இடது கண் இமை துடிப்பதால் அதிக கஷ்டங்கள் வரும் என்றும், இடது புருவம் துடிப்பதால் குழந்தைப் பிறப்பு நடக்கும் என்றும், வலது கண் கீழ் பக்கம் துடித்தால் பழிகளுக்கு ஆளாக நேரிடும் எனவும் கூறுகின்றனர்.

பலருக்கு வலது கண் துடிக்கும். ஒரு சிலருக்கு இடது கண் துடிக்கும். அதிலும் ஆண்களுக்கு வலது கண் துடிப்பது நல்லது என்றும், அதுவே பெண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது என்றும் ஒரு பேச்சு இருந்து வருகிறது.

உண்மையில் “அதிகமான சோர்வு, மன அழுத்தம், கண்கள் வறட்சி, குடிப் பழக்கம் போன்ற காரணிகளால் தான் கண்கள் துடிக்கின்றன” என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது அதிகமாக காபி குடிப்பதாலும் ஏற்படுகிறதாம். சில நேரங்களில் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணங்களாலும் இது ஏற்படக் கூடும்.

கண் துடித்தால் அபசகுணமா ?

உங்களுக்கு அடிக்கடி கண்கள் துடித்தால் அது அபசகுணம் அல்ல. மாறாக இதற்குக் காரணமாக இருப்பது நரம்பு சார்ந்த பிரச்சினைகளே. நீண்ட நாட்கள் கண் துடிப்பு அல்லது வெட்டி இழுப்பது போன்று இருந்தால் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் உங்களுக்கு இருக்கின்றன என்று அர்த்தம்.

Eye Twitching Tamil

கண்கள் துடிப்பதை நிறுத்த வேண்டும் என்றால், முதலில் நீங்கள் நன்றாக உறங்க வேண்டும். கண்களுக்கு அதிக அளவில் அழுத்தம் கொடுத்தால் கட்டாயம் இது போன்ற பாதிப்புகள் ஏற்படும். உங்களுக்கு அடிக்கடி கண்கள் துடிக்கிறது என்பதை நன்மையாகக் கருதாதீர்கள். இது மூளை சார்ந்த பிரச்சினையாகக் கூட இருக்கலாம்.

கண்கள் அடிக்கடி துடிப்பதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமால் மருத்துவரை அணுகுவது மிக நல்லது. மேலும், கண்களுக்கு வெதுவெதுப்பான நீரால் ஒத்தடம் கொடுத்தால் சற்றே இந்தத் துடிப்பு குறைய தொடங்கும். மேலும், நரம்புகளுக்கு சிறிது ஓய்வும் கிடைக்கும்.

நாம் செய்கின்ற எல்லா விஷயத்திலும் சிந்தித்துச் செயல்படுவதே சிறந்தது. யாராக இருந்தாலும், இது போன்ற விஷயத்தை அபசகுணமாகவோ, நம்பிக்கையாகவோ எடுத்து கொள்ளாமல் சற்றுச் சிந்தித்து செயல்பட்டால் ஆபத்துகள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்றளவும் மறக்கமுடியாத 10 சம்பவங்கள்!

கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகள் பதிவுகள் செய்யப்படுகின்றன. பல சாதனைகள் முறியடிக்கப்படுகின்றன. ஆனால் சில தருணங்களும், பதிவுகளும் வரலாறாக மாறி ரசிகர்களின் இதயங்களில் எப்போதும் புதியதாகவே இருக்கும். சில தருணங்கள்...
- Advertisment -

Copyrighted Content. You cannot copy content of this page