Home நலம் & மருத்துவம் பச்சைப் பயறு: ஊட்டச்சத்து மற்றும் பயன்கள்

பச்சைப் பயறு: ஊட்டச்சத்து மற்றும் பயன்கள்

தெற்கு ஆசியாவின் உணவு வகைகளில் ஒன்று பச்சைப்பயறு. பாசிப் பயறு எனவும் அழைக்கப்படும் இது வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும். மேற்புற பச்சைத் தோலை நீக்கிய பின் உள்ளிருக்கும் பருப்பு, பாசிப் பருப்பு என்று அழைக்கப்படுகிறது. இது வெள்ளை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கிறது.

பயன்கள்

சீன நாட்டில், டெசர்ட் உணவு வகையை செய்ய பச்சைப் பயறு பயன்படுத்தப்படுகிறது. சில நாடுகளில், பச்சைப் பயறு கலவையாக செய்து ஐஸ் க்ரீமில் பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடப்படும் முக்கிய உணவு வகையாக அல்லது இனிப்பு கலந்த உணவு வகையாக இது செய்யப்படுகிறது. தண்ணீரில் (8 மணி நேரம்) ஊறவைத்து, நன்கு ஊறிய பின் ஒரு துணியில் எடுத்து கட்டி வைத்தால் அடுத்த நாள் நன்கு முளை கட்டிவிடும். முளை கட்டிய பயறுவகைகளை சாப்பிடுவது இரண்டு மடங்கு பலன் தரும். மசாலா பொருட்கள் சேர்த்து பச்சைப் பயறை வேகவைத்தும் சமைக்கலாம். ஊறவைத்து உப்பு எலுமிச்சை சேர்த்து சாலட்டாகவும் இதனை சாப்பிடலாம்.

ஊட்டச்சத்து மற்றும் பயன்கள்

  • இதில் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது, புரதச்சத்து நிறைந்தது. அதிக அளவு அமினோ அமிலங்கள் கொண்டுள்ளது.
  • பச்சைப் பயறில் விட்டமின் பி9 மிக அதிகளவும், பி1 அதிகளவிலும் உள்ளன.
  • நார்சத்து அதிகம் இருக்கின்றது.
  • உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
  • கண்கள், தலைமுடி, கல்லீரல், சருமம் ஆகியவற்றின் நலத்தை இது மேம்படுத்துகிறது.
  • இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகின்றது.
  • இதில் இருக்கின்ற ஊட்டச்சத்துகள், சருமத்தை பருக்கள், காயங்களிலிருந்து பாதுகாக்கிறது. பச்சைப் பயறினை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சரும பளபளப்பைப் பெறலாம்.
  • பச்சைப் பயறில் உள்ள ஆன்டி ஆக்ஸிஜென்டுகள், கெட்ட கொழுப்புகள் உடலில் சேருவதைத் தடுக்கின்றன.
  • கல்லீரல் நலத்தையும் இது மேம்படுத்துகிறது.
  • இப்பயறில் உள்ள கார்போஹைட்ரேட் எளிதில் செரிமானம் அடையும் தன்மையைக் கொண்டுள்ளது. மற்ற பயறுகளைவிட இது எளிதில் செரிமானம் அடைவதுடன் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

NO COMMENTS

error: Content is DMCA copyright protected!