டெங்குவை எதிர்க்கும் சித்த மருத்துவம் – கசாயங்களின் நன்மைகள்

Date:

தமிழகமெங்கும் தற்போது டெங்குக் காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு, கொசுக் கடிப்பதால் ஏற்படும் வைரஸ் பாதிப்பால் பரவும் காய்ச்சல் ஆகும். இந்தக் காய்ச்சல் ஏடிஎஸ் (Aides Mosquito) என்னும் நோய் பரப்பும் கொசு கடிப்பதால் ஏற்படுகிறது. இரவில் கடிக்கும் கொசுவால் டெங்கு காய்ச்சல் வருவது இல்லை.

நமது சுற்றுப்புறத்தைச் சுகாதாரமாக வைத்துக் கொண்டால், எந்தவித நோய் தாக்குதல்களில் இருந்தும் தப்பிக்கலாம்.  டெங்கு பரப்பும் கொசுக்கள் தேங்கிக் கிடக்கும் சுத்தமான தண்ணீர், ஏர் கூலர்,  பூ ஜாடி ஆகியவற்றிலும், தேங்காய் சிரட்டை, டயர் ஆகியவற்றில் தேங்கியிருக்கும் தண்ணீரிலும் உற்பத்தியாகின்றன.

டெங்கு அறிகுறிகள்

டெங்குக் காய்ச்சல் 5 நாட்களுக்கு இருக்கும். மூக்கு ஒழுகுதல், லேசான இருமல், தொண்டை அடைத்துக் கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இந்தக் காய்ச்சலின் போது சிறுவர்களுக்கு மேலும் சில அறிகுறிகள் காணப்படும். இந்த காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நாளில் இருந்தே அதன் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்.

400px Dengue fever symptoms tamil 1டெங்குக் காய்ச்சலின் போது தலைவலி கடுமையாக இருக்கும். தசைகளிலும் மூட்டுகளிலும் கடுமையான வலி காணப்படும். காய்ச்சல் வந்த சில நாட்களில் குழந்தைகளுக்கு சொறி, சிரங்கு ஏற்படலாம். பசி எடுக்காது. குமட்டும். வாந்தி வரும். உடலில் உள்ள பல நிண நீர் சுரப்பிகளும் பெரிதாகி விடும். ஒரு வாரம் காய்ச்சல் இருக்கும். மறைவது போல மீண்டும் வரும். காய்ச்சலின் போதும் அது சரியான பிறகும்  உடலில் பலவீனம் ஏற்படும். சில குழந்தைகளுக்கு ரத்தக்கசிவு ஏற்படலாம்.

டெங்கு காய்ச்சலின் மூன்று நிலைகள்

முதல் நிலையில் (காய்ச்சல் வந்த 3 நாட்களில்) தொண்டையில் புண், மலச்சிக்கல், அதிகக் காய்ச்சல், தாகம், பலவீனம், வயிற்றுப் பகுதி இளகிய நிலை ஆகிய அறிகுறிகள் காணப்படும். இந்த நிலையில் காய்ச்சலை எளிதில் குணமாக்கலாம்.

2-வது நிலையில், காய்ச்சல் வந்த 7 நாட்களில் கடுமையான முதுகு வலி, உடலில் நீர் சத்து குறைந்து காணப்படும். உடல் முழுக்க சிவப்பு நிறத்தில் சொறி போன்று ஏற்படும். உடலில் ரத்தக்கசிவு, மூட்டு வலி, ரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்தி குறைவு, கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றில் வீக்கம், நுரையீரலில் நீர் தேங்கி வீக்கம் ஆகியன ஏற்படும். இந்த நிலை மோசமானதாக கருதப்பட்டாலும் 90 சதவீதம் நோயாளிகளை குணப்படுத்தலாம்.

INSECTS LIVE ZIKA01163-வது நிலையில், காய்ச்சல் வந்த 7 நாட்களுக்குப் பின்னர் கண்களில் ரத்தக்கசிவு, ஈரலில் வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படும். வாதத்தை வெளியேற்றி பித்தத்தைக் குறைக்கும் விதமான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.  ரத்தம் சுத்தம் செய்ய கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல் திறனை அதிகரிக்க வேண்டும். மேலும், ரத்தக்கசிவை நிறுத்தி உடலில் தேங்கும் கெட்ட நீரை வெளியேற்ற சிகிச்சை அளிக்க வேண்டும். டெங்குக் காய்ச்சல் மற்ற காய்ச்சலை விட  கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் பல வித கஷாயங்களைத் தர வேண்டும்.

டெங்குவை விரட்டும் சித்த வைத்தியம்

உணவு உட்கொள்ள முடியாதவர்கள் உலர்ந்த திராட்சையை 6 மணி நேரம் ஊற வைத்து வெந்நீர் ஆறிய பின்னர், அதனை அருந்த வேண்டும். பொரியையும் நீரில் ஊற வைத்து உணவாக தரலாம்.

தும்பை இலை 20 மி.லி எடுத்து,  100 மி.லி தண்ணீரில் கலந்து மிதமான சூட்டில் கொதிக்க வைத்து, 6 மணி நேரத்திற்கு ஒரு முறை தர வேண்டும்.

dc Cover 9vdt6ajqm3h0fv3upoq4i54b53 20170902045845.Mediநிலவேம்பு கசாயமும், பப்பாளி இலை சாறும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து காய்ச்சலை விரட்டுவதில் துரிதமாக செயல்படுகின்றன. நிலவேம்பு என்பது வீடுகளில், காட்டுப் பகுதிகளில் வெள்ளைநிற பூ பூக்கும் ஒருவகை செடியாகும். இதை கிராமத்தில் உள்ள மக்கள் சிறியாநங்கை செடி என்று கூறுவார்கள். இந்த செடியானது அதிக கசப்பு தன்மை கொண்டது.

நில வேம்பின் மகத்துவம்
நிலவேம்பு மூலிகை மூலம் பலவிதமான நோய்களை தீர்க்க முடியும். தீராத காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், சிக்கன் குன்யா காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், தோல் நோய், நீர்கோர்வை, பித்தமயக்கம், மூட்டு வலி, உடல் வலி, எய்ட்ஸ் நோயான பால்வினை நோய் உள்ளிட்ட பெரும்பாலான நோய்களை குணமாக்க முடியும்.

டெங்கு காய்ச்சலுக்குப் பயன்படுத்துகின்ற நிலவேம்புக் கசாயத்தில், நிலவேம்பு மட்டும் சேர்க்கப்படுவதில்லை அதனுடன் 9 பொருட்கள் சேர்த்து நிலவேம்புக் கசாயம் தயாரிக்கப்படுகிறது. அதாவது நிலவேம்பு என்கின்ற சிறியாநங்கைச் செடி, வெட்டிவேர், விலாமிச்சம் வேர், பற்படாகம், பேய் புடலை, கோரைக்கிழங்கு, சந்தன சிறாய், சுக்கு, மிளகு ஆகிய 9 பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்து பொடியாக்கி விட்டு, ஒரு ஸ்பூன் பொடிக்கு 200 மில்லி தண்ணீர் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த 200 மில்லி தண்ணீர் 50 மில்லி தண்ணீராக வற்றியவுடன் அதை வடிகட்டி மிதமான சூட்டில் குடிக்கவேண்டும். இந்த கசாயத்தை தயார் செய்த 4 மணி நேரத்திற்குள் குடிக்கவேண்டும். தாய் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. காய்ச்சல் இருப்பவர்கள் காலை, மாலை என ஒரு நாளைக்கு 2 வேளை குடிக்கவேண்டும். காய்ச்சல் நிற்கும் வரை குடிக்கலாம்.

நிலா வேம்புக் கசாயம் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் மக்கள் கூடும் இடங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது. அதைத் தவிர்க்காமல் வாங்கிக் குடித்து டெங்குவை எதிர்க்கலாம்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!