உலகம் முழுவதும் பெண்களுக்கு வரும் கேன்சர்களில் மார்பக புற்றுநோய் மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மரபணு மூலமாக மார்பக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகமுள்ளதாக சொல்லப்பட்டாலும் நிச்சயம் வரும் என்றும் சொல்வதற்கில்லை. அதே நேரத்தில் வேறு சில பழக்கவழக்கங்களும் புற்றுநோய் வர காரணமாக இருக்கலாம் என எச்சரிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதில் மது, அளவுக்கு அதிகமான உடல் எடை மற்றும் அதிக நேர தூக்கம் ஆகியவை மிக முக்கிய காரணிகளாக இருக்கின்றன.

நேற்று வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரை ஒன்றில் மார்பக புற்றுநோய் இருக்கும் 100 பெண்களில் ஒருவர் அதிகாலையில் எழும் பழக்கம் கொண்டவராக இருக்கிறார். அதேபோல 100 ல் இருவர் அதிக நேரம் தூங்கும் இயல்பைக் கொண்டவராக இருக்கிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தூங்கும் கால அளவிற்கும் மார்பக புற்றுநோய் உருவாக்கத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட கேன்சர் பாதிக்கப்பட்டவர்களின் கணக்கெடுப்பில் மொத்தம் 4 லட்சம் பேர் கலந்துகொண்டார்கள். இந்த பிரம்மாண்ட ஆய்வை மேற்கொண்ட லுகா மாக்னி (Luca Magnani) தூக்கத்தின் அளவு கேன்சர் வருகையை பாதிப்பது அரிது என்கிறார். லூகா லண்டனில் உள்ள இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் கேன்சர் குறித்த ஆய்வை மேற்கொள்கிறார்.

2016 ஆம் ஆண்டு பிரிட்டனில் charity Cancer Research அமைப்பால் நடத்தப்பட்ட ஆய்வில் பிரிட்டனில் அதிகமானோருக்கு வரும் கேன்சர்களில் மார்பக புற்றுநோய் முதலிடத்தில் இருப்பதாக தெரியவந்திருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 260,000 என்கிறது அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி நடத்திய ஆய்வு. லண்டன் இம்பீரியல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கும் டாக்டர் டிபென்டர் கில் (Dr. Dipender Gil) உலகம் முழுவதிலுமுள்ள கேன்சர் நோயாளிகளில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையே அதிகம். இதற்கு மது, உடல் பருமன் மற்றும் மரபணு ஆகியவை மிக முக்கிய காரணமாக இருக்கின்றன. அதேபோல அதீத தூக்கமும் ஒரு காரணியாக இருக்கலாம், ஆனால் இது ஏற்படுத்தும் விளைவு மிகச்சிறியதாகும். ஆனால் எதிர்காலத்தில் கேன்சர் நோயின் மர்மத்தை விடுவிக்கும் என்றார்.