Home நலம் & மருத்துவம் பிரபலமாகும் வீகன் உணவுமுறை - உண்மையிலேயே ஆரோக்கியத்திற்கு நல்லதா?

பிரபலமாகும் வீகன் உணவுமுறை – உண்மையிலேயே ஆரோக்கியத்திற்கு நல்லதா?

உடல்நலம், மிருக நலன் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவை மீதான ஈடுபாட்டின் காரணமாக இறைச்சி,  மீன் அல்லது விலங்குகளிடமிருந்து பெறப்படும் முட்டைகள், பால் பொருட்களையும் தாங்கள் உண்பதில்லை என்று வீகன்கள் கூறுகின்றனர்.

Credit : Medical News Today

சாதாரண உணவுமுறையை மேற்கொள்பவர்களுக்கு இந்த மாற்றம் எவ்வளவு கடினமாக இருக்கும்? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

விலங்குகளோடு தொடர்பில்லாத பொருட்கள் என்று அறியப்படும் உணவுகளுக்கும் விலங்குகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது.

நீங்கள் வீகனிசத்தை பின்பற்றினால், உடலின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான வைட்டமின் டி கிடைக்காத நிலைக்கு தள்ளப்படும் அபாயமும் உள்ளது.

முட்டைகள், பாலாடைக்கட்டி போன்றவற்றிற்கு வீகன்கள் மறுப்புத் தெரிவிப்பதாகக் கூறினாலும், மயோனைஸ்  (முட்டை கலந்தது), பாஸ்தா (இதுவும் முட்டை கலந்தது தான்) மற்றும் மதுவகைகள் (சில வகை மதுபானங்களைத் தயாரிக்கும் போது அதில் மீன்களின் எலும்புகள் அல்லது மற்ற விலங்குகளின் புரதங்களைக் கலக்கின்றனர்.) ஆகியவற்றைத் தங்களது உணவுகளில் கொண்டுள்ளனர்.

வீகன்களுக்குத்  தவறுதலாக விலங்குகளோடு தொடர்புடைய உணவுகளைத் தவிர்ப்பது எவ்வளவு கடினமானதோ , அதேபோல் தங்களது உடலுக்குத் தேவையான புரதச்சத்துக்களைத் தவறாமல் எடுத்துக் கொள்வதும் கடினமானதாகவே உள்ளது.

நீங்கள் வீகனிசத்தை பின்பற்றினால், உடலின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான வைட்டமின் டி கிடைக்காத நிலைக்குத் தள்ளப்படும் அபாயமும் உள்ளது.

வீகனிசத்தின் வரைமுறையின் படி இது போன்ற சத்துக்களைப் பெற வேண்டுமென்றால், செறிவூட்டப்பட்ட உணவுகள், சோயா பால், அரிசி பால், ஆரஞ்சு பழச்சாறு மற்றும் தானிய வகைகளைச்  சார்ந்திருக்க வேண்டும். மாற்றாக வைட்டமின் டி மாத்திரையை எடுத்துக் கொள்வதை கூட நீங்கள் பரிசீலனை செய்யலாம்.

மேலும், நீங்கள் வீகனிசத்தைப் பின்பற்றினால், உடலின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான அயோடினை இழக்க நேரிடும். எனவே, பாலைத் தவிர்த்து அயோடின் அதிகமுள்ள பாதாம் பால் போன்றவற்றை நீங்கள் பருக வேண்டியிருக்கும். கடற்பாசிகளில் அயோடின் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தாலும், அதைப் பெறுவதற்கு நீங்கள் மாத்திரை வடிவில் அதை உட்கொள்ள வேண்டியிருக்கும்.

வீகனிசத்தில் வைட்டமின் பி12-ஐ பெறுவதும் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. ஏனெனில், இது விதைகள், பருப்பு வகைகள் அல்லது காய்கறிகளில் கிடைப்பதில்லை. எனவே, வீகன்கள் செறிவூட்டப்பட்ட உணவுகள், தானியங்கள் அல்லது மாத்திரைகளை உட்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

Credit : Food Revolution Network

வீகனிசத்தை கடைபிடிப்பது ஆரோக்கியத்துக்கு உதவுகிறதா?

சைவத்தைக் கடைபிடிப்பவர்கள் மற்றும் வீகனிசத்தை கடைபிடிப்பவர்களை அடிப்படையாகக் கொண்டு, இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட 10 ஆய்வுகளைப் பகுப்பாய்வு செய்து சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்று வீகனிசத்துக்கு ஆதரவாக பதிலளிக்கிறது.

சைவத்தையோ அல்லது வீகனிசத்தையோ பின்பற்றுபவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்களும், புற்றுநோயும் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சைவத்தையோ அல்லது வீகனிசத்தையோ கடைபிடிப்பதென்பது ஆரோக்கியத்துடன் தொடர்புடையதே தவிர நீண்டகாலம் வாழ்வதற்கான வழியாகக் கருதப்படவில்லை.

மருத்துவர் கில்ஸ் இயோ (Gills Eyo) என்பவர், வீகனிசத்தை ஒரு மாதத்திற்கு கடைபிடித்து, அதனால் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு முடிவு செய்தார். மருத்துவர் இயோ ஒரு மாதத்திற்கு வீகனிசத்தை கடைபிடித்த பிறகு அவருக்கு என்ன ஆனது தெரியுமா? 30 நாட்களில் அவரது உடல் எடை நான்கு கிலோ குறைந்ததோடு மட்டுமல்லாமல், அவரது உடல் கொழுப்பின் அளவும் 12 சதவீதம் வரை குறைந்தது.

நீங்கள் வீகனிசத்தை தொடர்ந்து கடைபிடிப்பீர்களா என்று அவரிடம் கேட்டபோது, “மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இருந்த போதிலும் முழுவதும் வீகனாக ஆவதற்கு நான் விரும்பவில்லை. ஒரு மாதத்தில்  ஒரு சில நாட்களுக்கு இதை கடைபிடிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்” என்று அவர் கூறுகிறார்.

“கடந்த ஒரு மாத வீகன் வாழ்க்கையில் முட்டைகளை உண்ணாமல் மிகவும் சிரமப்பட்டேன். ஆனால், இதைத் துவங்குவதற்கு முன்பு இறைச்சிகள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று எண்ணினேன்” என்று இயோ மேலும் கூறுகிறார்.

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

பூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது?

2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்வெளி ஆர்வலர்கள் பலரும், ஒரு வால்மீன் / வால்நட்சத்திரம் வானில் தெரிவதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வால்நட்சத்திரம் பல மேற்கத்திய நாடுகளில்...
- Advertisment -