இயற்கை மருத்துவத்தில், உடலமைப்புகளில் கழிவுகள் மற்றும் நோயுற்ற விஷயங்களின் தேக்கமே நோய்க்கான முதன்மை காரணமாக கருதப்படுகிறது. இக்கழிவுகள் வெவ்வேறு வகையான நீக்குதல் சிகிச்சை மூலம் அகற்றப்படுகிறது. அதில் உண்ணாவிரதம் உடல் அமைப்புகளில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் சிகிச்சை முறையாக பயன்படுத்தப்படுகிறது.
உண்ணாவிரதம் என்பது சில (அ) அனைத்து உணவு, பானம் (அ) இரண்டிலிருந்தும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு விருப்பத்துடன் விலகும் செயலாகும். மன தயார் நிலை என்பது முக்கியமான ஒன்றாகும்.
நோய்க்கான முதன்மை காரணம் உடலில் நோயுற்ற பொருட்கள் குவிதல். அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை, உடலில் இருந்து கழிவுகளை அகற்றுவது. இயற்கையிலேயே நோயிலிருந்து தன்னை தடுக்கும் மற்றும் ஆரோக்கியமற்ற நிலையில் அதை குணப்படுத்தி ஆரோக்கியத்தை மீண்டும் பெறும் சக்தி மனித உடலுக்கு உண்டு.
நாள்பட்ட நோய்கள் தவறான சிகிச்சையின் விளைவாகவும், கடுமையான நோய்களை அடக்குவதாலும் வருகின்றன.
ஜெர்மன் இயற்கை மருத்துவர் Kuhne -“Disease is a unit”. அதாவது நோய் என்பது உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நோயுற்ற விஷயங்களின் தேக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது எனக் கூறுகிறார்.
- மத உண்ணாவிரதம்
- கலச்சார உண்ணாவிரதம்
- இடைப்பட்ட உண்ணாவிரதம்
- திரவ உண்ணாவிரதம்
- அரசியல் சார்ந்த உண்ணாவிரதம்

- குறுகிய கால உண்ணாவிரதம்
- இடைப்பட்ட உண்ணாவிரதம்
- நீண்டகால உண்ணாவிரதம்
- நீர் விரதம்
- பழ விரதம்
- சாறு உண்ணாவிரதம்
- மோனோ டயட் உண்ணாவிரதம்
- ட்ரை உண்ணாவிரதம்.
Herbert M. Shelton -The Science & Fine Art of Fasting இப்புத்தகத்தில் ஷெல்டனின் கூற்றுப்படி ஒருவர் உண்ணாவிரதம் இருக்கும் போது, பொதுவாக உணவு மற்றும் செரிமானத்திற்கு செல்லும் ஆற்றல் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதற்காக திருப்பி விடப்படுகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை மீட்டமைக்கும் ஒரு முறையாக செயல்படுகிறது.
காய்ச்சல், உடலில் வளர்சிதை மாற்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும், கிருமிகளை கொல்லவும் நிறுவப்படுவது ஆகும். இந்நிகழ்வு உடலே குணப்படுத்திக்கொள்ளும் நிகழ்வு ஆகும். ஆதலால் இவை அடக்கப்படக்கூடாது அதன் போக்கை இயக்க அனுமதிக்க வேண்டும்.
முதலில் நோய் வாய்ப்படும் போது எடுக்க வேண்டிய நடவடிக்கை சாப்பிடுவதை நிறுத்துவது ஆகும். அவ்வாறு செய்யும் போது செரிமானத்தில் செலவிடப் படமுடியாத அளவிளான ஆற்றல் இப்போது திசுக்களை சரிசெய்வதற்கும் நச்சுகளை அகற்றவும் செலவிடப்படுகிறது.
யார் யாரெல்லாம் உண்ணா விரதம் இருக்கலாம்?
- போதுமான உடல் உழைப்பு இல்லாதவர்கள்( sedentary workers )
- மலச்சிக்கல்
- ரியூமாட்டிசம்
- உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள்
- தோல் வியாதி
- ஆர்த்ரைட்டிஸ்
- வளர்சிதை மாற்ற கோளாறு
- Type 2 நீரிழிவு நோய்.
பயன்கள்:
Autophagy உயிரணுக்களில் காணப்படும் தேவையற்ற மற்றும் தொழிற்படாமல் இருக்கும் கூறுகளை அகற்றுவதற்காக இயற்கையாகவே நிகழும் ஒழுங்குபடுத்தபட்ட செயல்முறை ஆகும். விரதம் இருக்கும் போது இந்நிகழ்வு ஊக்குவிக்கப்படுகிறது.
- இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் சரி செய்யப்படுகிறது.
- புதிய ஆரோக்கியமான செல்களின் உருவாக்கத்தை அதிகரிக்கிறது.
- சிர்காடியன் தளத்தை மேம்படுத்துகிறது.
- ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது.
- இரத்தத்தில், இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.
- அடிப்போஸ் திசுக்களில் இருந்து free fatty acids பிரிந்து வருவதை அதிகரித்து, கொழுப்பை எரிக்க செய்து உடல் எடை குறைய வழிவகுக்கிறது.
- தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் முதுமையடைதலை மெதுவாக்குகிறது.
- அழற்சி செயல்முறையை குறைக்கிறது.
- உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் அகற்றப்பட்டு இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. ஆரோக்கியமான ஆயுட் காலத்தை நீடிக்க செய்கிறது.
உண்ணாநோன்பு இருப்பதற்கு முன்
குடல் சுத்தம் (எனிமா- மலத்துவாரத்தின் வழியே நீர் ஏற்றி குடல் கழிவுதல்) செய்யப்பட்டிருக்க வேண்டும்.
மிதமான சுடுநீர் அருந்தி இருக்க வேண்டும்.
உடலுக்கு ஓய்வு கொடுத்து, மனதளவில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அதிக அளவில் உணவு எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். படிப்படியாக நாம் எடுத்துக் கொள்ளும் உணவை அதிகரிக்க வேண்டும்.
உண்ணாவிரதம் இருக்கும் கால அளவு ஒவ்வொருவரின் வயதை பொறுத்து மாறுபடும் என்பதால் மருத்துவரின் தகுந்த ஆலோசனை படிமேற்கொள்ளுதல் நிறைந்த பலனைத் தரும்.
Also Read: ஒரு நாள் முழுக்க சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும்?
சரிவிகித உணவு என்றால் என்ன..? எந்த உணவை எவ்வளவு சாப்பிட்டால் நல்லது..?