ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையா? ஆயுர்வேத மருத்துவத்தின் 6 முக்கிய கோட்பாடுகள்!

Date:

ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி என்பது, இன்றைய நவீன காலத்து பெண்கள் சந்தித்து வரும் முக்கியமான பிரச்சினை ஆகும். இதன் காரணமாக உடல்பருமன், கரு உருவாவதில் சிக்கல், ஹைப்பர்-கொலெஸ்ட்ரோலீமியா (Hypercholesterolemia) மனநிலை மாற்றங்கள் மற்றும் இதய பாதிப்புகள் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். எனவே, ஒவ்வொரு பெண்ணும் ஆரோக்கியமான நல்வாழ்வுக்கு முறையான மாதவிடாய் சுழற்சியைக் கொண்டிருப்பது மிகவும் அவசியம்.

உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்துதல், உடற்பயிற்சி செய்வது, உடல் எடை குறைத்தல், ஆரோக்கியமான உணவை உட்கொள்வது போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை உடனடியாக கட்டுப்படுத்த முடியும். அந்த வகையில், ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியை தூண்டும் 6 முக்கிய ஆயுர்வேத கோட்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை, ஒவ்வொரு பெண்ணும் நல்ல உடல் ஆரோக்கியத்திற்காக, நிச்சயம் பின்பற்ற வேண்டும்.

Ayurveda Menstrual Cycle001
Credit: mavcure.com/

1. நீங்கள் ஓய்வில் இருப்பது அவசியம்:

ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சிக்கு உடலுக்கு போதுமான அளவு ஓய்வு கொடுப்பது முக்கியம். ஏனெனில், சில சமயங்களில் அதிகப்படியான வேலை, பேசுவது, சிந்தனை, செக்ஸ் அல்லது எந்தவொரு உடல் செயல்பாடுகளும் மாதவிடாய் சுழற்சியின் இயற்கையான ஓட்டத்தைத் தடுக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோன்று, நீங்கள் சீக்கிரம் எழுந்திருப்பது, சரியான வேலை நேரத்தை பராமரிப்பது மற்றும் சரியான நேரத்தில் உணவை உட்கொள்வது போன்றவையும் இதில் அடங்கும்.

2. நீங்கள் இயற்கையின் நிகழ்வினை கட்டுப்படுத்த வேண்டாம்:

நீங்கள் கீழே செல்லும் உடல் ஆற்றலை நிறுத்தினால், அது மாதவிடாய் சுழற்சியை எதிர்மறையாக பாதிக்கிறது. எனவே, உங்கள் மாதவிடாய் சுழற்சியின் போது, சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் மற்றும் தும்முவது போன்ற இயற்கையின் நிகழ்வினை ஒருபோதும் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டாம்.

3. மன அழுத்தமில்லாமல் இருங்கள்:

Ayurveda Menstrual Cycle003
Credit: theplectrums.co.uk/

மன அழுத்தம், பதற்றம் போன்றவை உங்கள் ஹார்மோன் அளவை வெகுவாக பாதிக்கிறது. இதனால் மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு ஏற்படும். நீங்கள் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகும் போது அதன் காரணமாக, கருமுட்டை உற்பத்தி பாதிப்படையும். இதனை நீங்கள் நடைபயிற்சி செய்வது, சத்தான உணவுகளை சாப்பிடுவது, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது போன்ற வாழ்வியல் முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் எளிதில் சரிசெய்யலாம்.

4. உணவில் மாற்றம்:

புரதம், ஆன்டிஆக்ஸிடென்ட் சத்துகள் இருக்கும் உணவுகளை குறைந்த அளவில் சாப்பிடும்போது, அட்ரினல் மற்றும் தைராய்டு சுரப்பிகளில் பிரச்சனை ஏற்படும். இது, மாதவிடாயில் பிரச்சனையை ஏற்படுத்தும்.

எனவே, மாதவிடாய் சுழற்சியின் போது, சரியான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அதேபோன்று உங்கள் உணவில் இஞ்சி, கிராம்பு, குங்குமப்பூ, பெருஞ்சீரகம், சீரகம், இலவங்கப்பட்டை, கொத்தமல்லி, பூண்டு ஆகியவற்றைக் சேர்த்து கொள்ளலாம்.

5. யோகா:

Ayurveda Menstrual Cycle005
Credit: unsplash.com/

மாதவிடாய் சுழற்சியின் போது ஒரு பெண் யோகா செய்யலாமா அல்லது இல்லையா என்ற கேள்வி இன்னும் விவாதத்திற்குரியது. ஆயினும் கூட, பெரும்பாலான ஆயுர்வேதக் கொள்கைகள், பெண்களின் முறையான மாதவிடாய் சுழற்சிக்கு அன்றாடம் மிதமான யோகாவைக் மேற்கொள்ள பரிந்துரைக்கின்றன.

ஏனெனில், யோகா பயிற்சி மூலம், பி.சி.ஓ.எஸ், கருவுறாமை, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி போன்ற பிரச்சினைகளை குணப்படுத்த முடியும் என்பது ஆயுர்வேத கோட்பாடாகும்.

6. சுவாசப் பயிற்சி அவசியம்:

இது ஒரு ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சிக்கு செய்ய வேண்டிய சுவாசப் பயிற்ச்சியாகும். இது ஒவ்வொரு பெண்ணின் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாகும்.

இதற்கு முதலில் நீங்கள் இடது நாசியை விரல்களை கொண்டு மூடிக்கொண்டு வலது நாசி வழியாக சுவாசிக்கவும். பிறகு சில வினாடிகள் கழித்து மெதுவாக காற்றினை வெளியேறவும். மறுபடியும், வலது நாசி வழியாக சுவாசிக்கவும், இடது வழியாக வெளியேறவும். இதே போன்று, 10 நிமிடங்கள் நீங்கள் செய்ய வேண்டும். எனவே, மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத மருத்துவத்தின் கோட்பாட்டு வழிமுறைகளை பின்பற்றினால், உங்களின் மாதவிடாய் சுழற்சி சீராவது மட்டுமின்றி, நீங்கள் ஆரோக்கியமாகவும் வாழலாம்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!