நீங்கள் ஃபேஸ் மாஸ்க் அணியும் போது, உங்கள் மூக்குக்கண்ணாடியில் பனிபோன்ற படலம் உருவாகி உங்களின் பார்க்கும் திறன் குறைகிறதா? இது உங்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ளோர்கள் சந்திக்கும் பிரச்சனை தான்.
கண்ணாடியில் பனிப் படலம்
கண்ணாடியில் பனிப் படலம் எப்படி உருவாகிறது என்பதை அறிந்து கொண்டு அதை தவிர்க்கும் 7 சிறந்த எளிய வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
உங்களது மூக்குக்கண்ணாடியில் மூடுபனி போன்ற (மங்கலான படலம்) உருவாகி, மங்கலான பார்வையை தருகிறது. இதற்கு காரணம் இது தான்…
நீங்கள் சுவாசிக்கும்போது, உங்களது சூடான காற்று உங்களுடைய ஃபேஸ் மாஸ்க் வழியாக வெளியேறி உங்கள் மூக்குக்கண்ணாடிகளின் குளிர்ந்த மேற்பரப்புடன் ஒட்டி கொண்டு ஒடுக்கமாக மாறுவதனால் இத்தகைய மங்கலான படலம் தோன்றுகிறது.
இது நடப்பதைத் தடுப்பதற்கு, சிறந்த வழிமுறைகள் சில கீழே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
1நீங்கள் மூக்குக்கண்ணாடிகளை கழுவும் வழிமுறை!
நீங்கள் மூக்குக்கண்ணாடியைக் கழுவும் போது உங்களது கண்ணாடி மங்கலாக தெரிவதை தடுக்க கூடிய சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவ வேண்டும்.
பின்னர, அவற்றை மைக்ரோ ஃபைபர் துணி கொண்டு துடைக்க வேண்டும். இவை பொதுவாக நீங்கள் கண்ணாடி வாங்கும் போதே உங்களுக்கு கிடைக்கும்.
2டேப்பைப் பயன்படுத்துங்கள்!
Glasses fogging with mask? Get a roll of micropore tape – $2 at any chemist.Tape the mask along the bridge of your nose and cheeks. Then glasses on top. Other way is put a folded tissue across the bridge of your nose. Long time surgical tricks. Can’t operate with fogged lenses. pic.twitter.com/DqlnOw40fm
— Dr Julie Miller (@DrJulieAMiller) July 19, 2020
உங்களது மூக்குக்கண்ணாடி மங்கலாக தெரிவதை நிறுத்துவதற்கான மற்றொருமொறு வழிமுறை உங்கள் ஃபேஸ் மாஸ்க்கிற்கு மேல் டேப் ஒட்டுவது. இதற்காக, நீங்கள் வீட்டில் உபயோகிக்கும் சாதாரண டேப்பைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், அது உங்கள் தோலை சேதமடைய செய்யக்கூடும். இதற்கு பதில், நீங்கள் மெடிக்கல் டேப் உபயோகிக்கலாம். இது அமேசான் தளத்தில் கிடைக்கிறது. கொஞ்சம் பொறுமையுடன் அமேசான் தளத்தில் தேடிப்பார்த்து சிறந்ததை வாங்கிக்கொள்ளலாம்.
3ஃபேஸ் மாஸ்க்கிற்கு மேல் மூக்குக்கண்ணாடி அணிவது!
நீங்கள் உங்களது ஃபேஸ் மாஸ்க்கிற்கு மேல் மூக்குக்கண்ணாடி அணியும் போது ஃபேஸ் மாஸ்க்கினை சிறந்த முறையில் மேலே இழுத்து, உங்களது மூக்குக்கண்ணாடியை சரிசெய்ய முடியும். அதனால், உங்களுடைய மூக்குக்கண்ணாடி ஃபேஸ் மாஸ்க்கிற்கு மேல் மிகவும் இறுக்கமாக அமர்ந்திருக்கும்.
4ஃபேஸ் மாஸ்க் சரியான முறையில் பொருந்தி இருக்கிறதா?
நீங்கள் ஃபேஸ் மாஸ்க் அணியும் போது உங்களது மூக்குக்கண்ணாடி மங்கலாக தெரிந்தால், ஃபேஸ் மாஸ்க் சரியாக முறையில் பொருத்தப்படாத காரணத்தால் இருக்கலாம்.
எனவே, உங்கள் ஃபேஸ் மாஸ்க் சரியான முறையில் பொருந்தி இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும்.
5உங்கள் மூக்குக் கண்ணாடியை சரி செய்யவும்!
உங்கள் மூக்குக்கண்ணாடியை உங்கள் மூக்கிலிருந்து மேலும் கீழே தள்ளினால், அதன் வழியாக காற்று உள்நுழைவதால் படலம் தோன்றலாம். ஏனெனில், நீங்கள் பயன்படுத்தும் ஃபேஸ் மாஸ்க் உங்களது மூக்கிற்கு கீழே பொருத்தப்பட்டிருக்கும் அப்போது அதிக இடைவெளி இருப்பதால் இவை நிகழும்.
6Face Shield பயன்படுத்துவது
தற்போது மருந்தகங்களில் அல்லது இணையத்தில் Face Shield கிடைக்கிறது. Face Shield பயன்படுத்தினால் பனி படராது. அமேசான் தளத்தில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.
7காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துதல்!
இதற்கு மாற்று வழிமுறையாக காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தலாம்.
இதனை தவிர்த்து, நீங்கள் உங்களது வீட்டில் ஃபேஸ் மாஸ்க் தயாரித்தால் (ஃபேஸ் மாஸ்க் முறையாக எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பாருங்கள்) அவற்றுக்கு சில கம்பி சேர்க்கலாம்.
நீங்கள் கடையில் வாங்கிய ஃபேஸ் மாஸ்க் அணிந்திருந்தால், அவற்றுள் உங்களது கம்பியை சேர்க்கலாம். பின்னர், அவற்றை கீழே மடித்து உங்கள் ஃபேஸ் மாஸ்க்கி னை கம்பியில் சேர்த்து தைக்கவும். நீங்கள் கையால் தைக்கலாம் அல்லது இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்.
மாற்றாக, நீங்கள் ஏற்கனவே கம்பி பொருத்தப்பட்ட ஒரு ஃபேஸ் மாஸ்க் வாங்க விரும்பலாம்.