எலிகளின் மூலமாக மனித உடலுக்கு இருபதுக்கும் மேலான நோய் தொற்று பாதிப்புகள் உண்டாகின்றன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இதனை ஓரளவுக்கு அறிந்ததால் தான் பலரும் எலியைக் காணும் போது அதனைக் கொல்ல முயல்கின்றனர். எலிகளை அப்படியே ஓட விடாமல் கொல்லுவதே மனித இனத்திற்கு நோய் அண்டாமல் பாதுகாக்கும் வழியாகும்.
ஒருவேளை அவைகளை உயிரோடு விட்டால், அவை உங்கள் வீடுகளைத் தங்கள் இருப்பிடமாக ஏற்றுக் கொள்ளத் துவங்கும். இதனால் பல நோய்கள் உங்களைத் தாக்கத் தொடங்கலாம். இப்போதெல்லாம் எலி பிஸ்கட்டுகளும் பெரும்பாலும் எலிகளை விரட்டத் தவறி விடுகின்றன. பொறி வைத்துப் பிடிப்பதெல்லாம் கொஞ்சம் சிரமமான வேலை. ஆகவே, வீட்டுத் தீர்வுகள் மூலம் எலியைக் கொல்வதற்கான முறைகளை நாம் இப்போது இந்தப் பதிவில் பார்க்கலாம்.
புதினா எண்ணெய்
புதினாவின் வாசனை எலிக்கு ஏற்றுக் கொள்ளாது . வீட்டுத் தீர்வுகள் மூலம் எலியைக் கொல்ல நினைக்கிறவர்கள், புதினா எண்ணெயில் பஞ்சை நனைத்து எலி பொந்திற்கு அருகில் வைக்கவும். இதன் வாசனை எலியின் நுரையீரலை சுருங்கச் செய்து கொன்று விடும்.
பூனையை வாங்குங்கள்
இது ஒரு பழைய தீர்வாகும். எலியைக் கொல்வதற்காகப் பூனையை வாங்கலாம். எலி எங்கிருந்தாலும் அதனைப் பூனை பிடித்து விழுங்கி விடும்.
மனித முடி
மனித முடியைக் கண்டாலே எலி ஓடி விடும். இதற்குக் காரணம், இந்த முடியை ஒரு வேளை எலிகள் விழுங்கி விட்டால் அதற்கு மரணம் நிச்சயம்.
அந்துருண்டை
அந்துருண்டை எலிகளைக் கொல்வதற்கு ஒரு சிறந்த தீர்வு. இந்த சிறிய வாசனை மிகுந்த உருண்டைகள் மனிதனுக்கே விஷத்தன்மையைக் கொடுப்பது. ஆகையால் எலிகளும் இதற்கு விதி விலக்கல்ல. இதனைப் பயன்படுத்தி எலிகளை நிச்சயம் கொல்லலாம்.
அமோனியா
சில துளிகள் அமோனியாவை எலிப் பொந்தில் தெளித்து விடுவதால் எலிகளைக் கொல்லலாம் . அதன் காரமான வாசனை காரணமாக எலிகள் செத்து விடும்.
மாட்டு சாணம்
மாட்டுச் சாணம் பயன்படுத்தி எலிகளைக் கொல்லலாம். இந்தச் சாணத்தை எலிகள் உண்பதால் அதன் வயிற்றில் அழற்சி ஏற்பட்டு வாந்தி எடுத்து இறந்து விடலாம்.
ஒலிகளும் பயத்தை உண்டாக்கும்
அதிகமான ஒலி எலிகளுக்கு பயத்தை உண்டாக்கும் . மேலும், அவற்றின் காதுகளில் இரத்தம் வழியத் தொடங்கும். ஒலிப்பெருக்கியில் இருந்து வெளிப்படும் கூர்மையான ஒலி இயற்கையாகவே எலிகளைக் கொல்லும். இது ஒரு சிறந்த வீட்டுத் தீர்வாகும்.
மிளகு
மிளகுத் தூளை எலி பொந்திற்கு அருகில் தெளித்து விடுவதால் இயற்கையாக எலிகள் இறக்க நேரிடும். மிளகின் வாசம் எலிகளின் நுரையீரலைப் பாதிக்கும் . இதனால் மூச்சு விட முடியாமல் எலிகள் இறக்கலாம்.
பிரிஞ்சி இலை
பிரிஞ்சி இலையை எலிகள் உணவாகப் பார்க்கும். ஆகவே இந்த இலைகளை எலி பொந்திற்கு அருகில் வைப்பதால் அதனை உட்கொள்ளும் போது அவை இறந்து விடும்.
பேபி பவுடர்
இயற்கை முறைகள் எலிகளைக் கொல்ல கை கொடுக்காத நிலையில் இந்த தீர்வைச் செயல்படுத்தலாம். பேபி பவுடரை எலி பொந்தில் தெளித்து விடுவதால் அதன் வாசனை எலிகளை, மயக்க நிலைக்கு ஆளாக்கிக் கொல்லும்.