இருபத்தியொரு நூற்றாண்டுகளாக மனித இனம் பல்வேறு சாதனைச் சிகரங்களை அசாதாரண வேகத்தில் கடந்திருக்கிறது. ஆனாலும் இயற்கை விடுக்கும் சில புதிர்களுக்கான தீர்வுகளை நோக்கித் தீவிரமாக நகர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது நவீன விஞ்ஞானம். இயற்கை நமக்களிக்கும் பல விடை தெரியா கேள்விகளில் தலையாயது, முக்கியமானது, பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது, கருத்தடையும் அதன் வழிமுறைகளும்.

மூலிகை மருத்துவம்
கர்ப்பத்தைத் தடுக்க, கருத்தடை மற்றும் பல வகையான பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகள் உள்ளன. கருத்தடை மாத்திரைகள், ஆணுறை உபயோகிப்பு, ஆண், பெண் துணைகளுக்கு இடையேயான பரஸ்பர புரிதல், சுய கட்டுப்பாடு, தற்காலிக கருத்தடை சாதனங்கள்(காப்பர் டியூப்) என ஏராளமான வழிமுறைகள் இன்று சமூகத்தில் நடைமுறையில் இருக்கின்றன. இந்த முறைகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு இயற்கை முறையிலான கருத்தடையை ஏற்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பது மறுக்க முடியாத உண்மை.

மூலிகைகளின் வழியேயான கருத்தடை வழிமுறைகள் இன்று அதிகமானோரால் பரிந்துரைக்கபடுகிறது. உள்ளே எடுத்துக்கொள்ளும் இம்மூலிகைகள் கர்ப்பப்பையின் சுவற்றை கடினமாக்குவதன் மூலம் கருத்தடை ஏற்படுத்தப்படுகிறது. முட்டை கருப்பை சுவரில் உள்வாங்க முடியாவிட்டால், அது உடைந்து ,மாதவிடாய் வழக்கமானதாகிவிடும்.
பொதுவாக பயன்படுத்தப்படும் இம்மாதிரி கருத்தடை மூலிகைகள் குயின் அன்னேஸ் லேஸ், ப்ளூ கொஹாஷ், பென்னிரோயல் மற்றும் வேம்பு. அவற்றைப்பற்றி கீழே காணலாம்.
குயின் அன்னேஸ் லேஸ் (Queen Anne’s Lace)

இந்த மூலிகையின் விதைகளை உட்கொள்வதன் மூலம் கருப்பையினுள்ளே முட்டைச் சேர்க்கையைத் தடுக்க முடியும். இம்மூலிகையின் மீதான ஆராய்ச்சி உலகம் முழுவதும் பரவலாக நடந்து வருகிறது. கருவுற்ற எட்டு மணி நேரத்திற்குள் இம்மூலிகையை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் நல்ல முடிவுகளைப் பெறலாம். இதனை கசாயம் அல்லது தேநீர் போன்று அருந்தலாம். நேரடியாக இவ்விதைகளை மென்று உட்கொள்ளுவது உடனடித் தீர்வுகளைத் தரவல்லது. பித்தப்பை, சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களும் தாய்ப்பால் கொடுப்பவர்களும் இதைத் தவிர்த்தல் நல்லது.
ப்ளூ கொஹாஷ் (Blue Cohosh)

இதில் இரண்டு வகையான கருத்தடை ஊக்கிகள் உள்ளன. ஒன்று இயற்கை ஹார்மோன்களை கட்டுப்படுத்தும். காலசொபோனின் என்ற மற்றொன்று கர்பப்பையினுள் கரு சேராமல் தடுக்கும். ஒரு சிட்டிகை அளவிலான ப்ளூ கொஹாஷ் யை வெந்நீரில் போட்டு குடிக்கலாம். 300 முதல் 400 மி.கி வரை ஒரு நாளில் பயன்படுத்துவது ஆரோக்கியமானது. ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் பயன்படுத்துவது தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.
பென்னிரோயல் (Pennyroyal)

பண்டைய கிரேக்க ரோமானிய காலத்திலிருந்தே பென்னிரோயலின் பயன்பாடு இருந்ததாக சில ஆய்வுகள் கூறுகின்றன. இது இயற்கை மாதவிடாயை ஊக்குவிப்பதன் மூலம் கர்ப்பத்தடையை ஏற்படுத்தும். தூய்மையான தண்ணீரில் நன்கு காய வைக்கப்பட்ட ஒரு சிட்டிகை பென்னிரோயலைப் போட்டு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து உட்கொள்ளலாம். தேவைப்பட்டால் தேன் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இவை உடலுறவு முடிந்த சில மணி நேரங்களில் உட்கொண்டால் மட்டுமே பலனைப் பெற முடியும்.
பென்னிரோயல் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தொடர் பயன்பாடு சிறுநீரக பாதிப்பு அல்லது மத்திய நரம்பு மண்டல பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஆதலால் ஒரு நாளைக்கு மூன்று கோப்பைகளுக்கு மேல் குடிக்காமல் இருப்பது சிறந்தது. மாதவிடாய் பத்து நாட்களுக்கும் தள்ளிப் போன பின் இவற்றை உபயோகிப்பது பயனற்றது மற்றும் ஆபத்தானது.
வேம்பு (Neem)
பழங்கால இந்தியப் பயன்பாட்டில் பெரிதும் பயன்படுத்தப்பட்டது வேம்பு. எண்ணையாக இவற்றை பிறப்புறுப்பில் தடவுவதன் மூலமாக இவை விந்து செல்கள் கர்ப்பப்பையினுள் செல்லும் முன் நீர்த்துப் போகச் செய்கிறது. இதனால் கருத்தடை சுலபமாகிறது. ஆண்கள் வேப்பெண்ணெயை உட்கொள்வது கருத்தடையை ஏற்படுத்தும். மேலுமிதனால் விந்து உற்பத்தியில் எந்த வித பாதிப்பும் இருக்காது. சரியான கலவை விகிதம் இந்த செயல்பாட்டில் மிகவும் முக்கியத்தும் பெறுகிறது.
மூலிகை மருத்துவம் என்றாலும் நிபுணர்களிடம் போதிய அறிவுரையை கேட்டுப் பெறுவது முக்கியமாகும்.
