வல்லாரை கீரை பற்றி நம்மில் பலரும் தெரிந்த ஒரு கீரைதான். வல்லாரை ஞாபக சக்தியை அதிகரிக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். அதையும் தாண்டி பல மருத்துவ குணங்களை கொண்டது. வல்லாரை கீரையின் 8 மருத்துவ குணங்களை பார்ப்போம்.
வல்லாரை ஈரப்பதம் உள்ள இடங்களில் தானாகவே வளரக்கூடிய தாவரம். இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான், இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் சீனா போன்ற நாடுகளில் தெற்காசியாவின் வெப்பமண்டல, ஈரமான மற்றும் சதுப்பு நிலப்பகுதிகளில் இந்த வற்றாத மூலிகை செழித்து வளர்கிறது.
வல்லாரை கீரையின் சத்துக்கள்
வல்லாரை கீரையில் நம் அன்றாட தேவைக்கு போதுமான அளவு பொட்டாசியம் உள்ளது. பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் இதில் உள்ளது.
அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது
அறிவாற்றல் மற்றும் நினைவகத்தை மேம்படுத்துவதில் வல்லாரை கீரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
அல்சைமர் நோய் எனும் மறதி நோய்
வல்லாரை நினைவாற்றல் மற்றும் நரம்பு செயல்பாட்டை மேம்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இது அல்சைமர் நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான திறனை வழங்குகிறது.
வல்லாரை கீரையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
ரத்தஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. வெள்ளை இரத்த அணுக்கள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் பயன்படுகிறது.
கவலை மற்றும் மன அழுத்தம்
வல்லாரை கீரை கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது என்று ஆய்வு சொல்கிறது.
வல்லாரை கீரை ரத்தத்தை சுத்திகரிக்கும்
ஹீமோகிளோபின் அளவை அதிகரிக்கவும் ரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவுகிறது. உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது.
வல்லாரை கீரை காயங்களை குணப்படுத்தும்
உடலில் உள்ள காயங்களை குணப்படுத்தும் வல்லமை வல்லாரைக்கு உண்டு.
மூட்டு வலி
அழற்சி எதிர்ப்பு பண்புகள் கீல்வாதத்திற்கு சிகிச்சையளிப்பதில் வல்லாரை முக்கிய பங்கு வகிக்கிறது.
Also Read: எளிமையான முறையில் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய 6 காய்கறி & மூலிகைச் செடிகள்!
மிளகு கீரை எண்ணெய் அல்லது புதினா எண்ணெய் பயன்படுத்துவதால் ஏற்படும் 8 நன்மைகள்!