திராட்சை பழம் தமிழில் கொடி முந்திரி என்று அழைக்கப்படுகிறது. கொடி வகையைச் சேர்ந்த திராட்சை பழம் வெவ்வேறு நிறங்களில் காணப்படுகிறது. கருப்பு, பச்சை, கருநீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். நீர்ச்சத்து நிறைந்த இப்பழம் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்டது.
திராட்சை பழத்தில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B2, வைட்டமின் B12, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் செலீனியம் ஆகியவை உள்ளன. இவற்றில் டானின், ஃபிளேவோனாய்ட்ஸ், டார்டாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம், பாலிஃபீனால், ஆன்தோசயனின்ஸ் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன.
திராட்சை பழம் சாப்பிடுவதால் ஏற்படும் 10 நன்மைகள்
இதயம் சம்பந்தமான பிரச்சினைகளை சரிசெய்கிறது:
அதிக அளவில் ஃபிளேவோனாய்ட்ஸ் திராட்சையில் உள்ளது. இவை திராட்சை பழத்திற்கு நிறம் கொடுப்பது மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகவும் செயல்படுகிறது. இரண்டு வகை ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. அவை ரெஸ்வரட்ரால் (Resveratrol), குர்செடின் (quercetin) ஆகும். இது இரத்த நாளங்களில் இரத்தம் உறைதலை தடுக்கிறது மற்றும் LDL கொலஸ்டிரால் அளவை குறைக்கிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது.
இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது:

இவற்றில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் ஆகியவை இரத்த அழுத்தம் சீராக இருக்க உதவுகிறது.
கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:

திராட்சை பழத்தில் லூடீன், Zeaxanthin உள்ளதால் நீல ஒளியால் கண்களுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்கிறது. Free radicals ஐ குறைத்து கண்புரை விழுவதை தடுக்கிறது.
புற்றுநோய் வராமல் தடுப்பதோடு மட்டுமல்லாமல் அதன் வளர்ச்சியையும் தடுக்கிறது:
திராட்சையில் உள்ள பாலிஃபீனால் மற்றும் திராட்சை விதைகளில் உள்ள புரோஆன்தோசயனிடின் ஆன்டி-டியூமெரோஜெனிக் தன்மை உடையது மற்றும் திராட்சை பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவு உள்ளது. ஆகையால் இது மார்பக புற்றுநோய், தோல் மற்றும் கோலான் கேன்சர் வராமல் தடுக்க உதவுகிறது.
நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது:
இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
ஆஸ்துமா உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது:
திராட்சை பழம் எதிர்ப்பு அழற்சி தன்மை கொண்டதால் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் வீக்கத்தை குறைக்கிறது. நுரையீரலை ஈரப்பதமாக வைத்து ஆஸ்துமா நிகழ்வுகளை குறைக்கிறது.
உடல் எடை குறைய வழிவகுக்கிறது:
திராட்சை பழத்தில் உள்ள ஃபிளேவோனாய்ட்ஸ், நார்ச்சத்து மற்றும் திராட்சையின் தோலில் உள்ள சபோனின் ஆகியவை கொழுப்பை குறைக்க உதவுகிறது.
மூட்டு வலிக்கு பயனுள்ளதாக உள்ளது:
பாலிஃபீனால் மூட்டுகளில் அதன் இயக்கம் மற்றும் நெகிழ்வு தன்மையை அதிகரித்து மூட்டுகளை வலிமையாக்குகிறது. மேலும், யூரிக் அமிலம் அளவை குறைத்து வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:
திராட்சை பழத்தில் ஃபிளேவோனாய்ட்ஸ் மட்டுமல்லாமல் வைட்டமின் C -யும் காணப்படுகிறது. இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. மேலும் திராட்சை ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டி வைரல் தன்மை கொண்டுள்ளது.
தோல் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:
வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் முகத்தில் உள்ள செல்களை புத்துயிர் பெறச் செய்கிறது. முகத்தில் உள்ள தழும்புகள், பருக்களை அகற்றவும் இளமையாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. பொடுகு வராமல் தடுக்கிறது மற்றும் முடி உதிர்வதை குறைக்கிறது.
Also Read: ‘தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்லத் தேவையில்லை’ – இது எந்த அளவிற்கு…
கிர்ணி பழம் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்!