ஃபார்ச்சூன் ரைஸ் பிரான் ஹெல்த் ஆயில் என்ற சமையல் எண்ணெய்க்கு விளம்பரத் தூதராக சவுரவ் கங்குலி ஒப்பந்தம் செய்யப்பட்டு அதன் விளம்பரங்களில் தோன்றி அந்தப் பொருளை விளம்பரப்படுத்தி வந்தார்.
இந்த விளம்பரத்தில் நடித்த கங்குலிக்கு கடந்த 2-ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மம்தா பானர்ஜி, விராட் கோலி, சேவாக், அஸ்வின் மேலும் கிரிக்கெட் பிரமுகர்கள் மற்றும் சமூக பிரபலங்கள், கங்குலி உடல் நலம் பெற்று மீண்டு வர வாழ்த்து தெரிவித்தனர்.
சவுரவ் கங்குலி அந்த ஃபார்ச்சூன் ரைஸ் பிரான் ஹெல்த் எண்ணெய் விளம்பரத்தில், “உங்கள் நோய் எதிர்ப்பாற்றல், இருதய வலிமையை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் 40 வயதுகளிலும் கூட உங்கள் வாழ்க்கையை முழுவதும் அனுபவிக்கலாம். அது இந்த எண்ணெய் மூலம் தொடங்கட்டும். கொலஸ்ட்ராலை குறைக்கும் இந்த எண்ணெய்க்கு மாறுங்கள். இது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. இந்த எண்ணெய் உங்கள் நோய் எதிர்பாற்றலை அதிகரிக்கிறது” என்று விளம்பரப் படுத்துவார்.
“இதயத்திற்கு நலமானது” என விளம்பரம் செய்தவரே இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் எண்ணெயை விளம்பரப்படுத்தியவருக்கே இருதய நோய் ஏற்பட்டிருப்பதால் தங்களது விளம்பரங்களை ‘அதானி வில்மர்’ நிறுவனம் நிறுத்தியுள்ளது. அதானியின் ‘ஃபார்ச்சூன் ரைஸ் பிரான் ஹெல்த் ஆயில்’, பிராண்டட் ரைச் ஆயில் சந்தையில் முன்னிலை வகிக்கிறது.
Also Read: தவறான / முகம் சுழிக்க வைக்கும் விளம்பரங்கள் – எங்கே புகார் அளிப்பது?