நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து மிக்க 10 உணவுகள்!

Date:

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் நீங்கள் எந்த கால நிலையையும் எளிதில் கடந்துவிடலாம். இதில், குறிப்பிடப்பட்டுள்ள 10 உணவுகளும் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிச்சயம் உதவும். அத்துடன் இது எளிதில் உங்களுக்கு கிடைக்க கூடியவை மட்டுமே.

1. சிட்ரஸ் பழங்கள் (ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி)

சிட்ரஸ் நிறைந்த பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அளவு வைட்டமின் சி கிடைக்கும். இது இரத்த வெள்ளை அணுக்களை அதிகப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

சிட்ரஸ் பழங்கள் அனைத்திலும் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது. வைட்டமின் சி குளிர் காய்ச்சல் வராமல் தடுக்கும்.

immunity increase 1

2. சிவப்பு குடைமிளகாய்

சிவப்பு குடைமிளகாயில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. மேலும், நீராலான குடைமிளகாய் புரதம் மற்றும் சிறிய அளவிலான கொழுப்பும் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், சருமத்தை பராமரிக்க உதவும். மேலும், பீட்டா கரோட்டின் கண்களை பாதுகாக்கும்.

3. பூண்டு

பூண்டு உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் உணவு பொருள். இதில், சிறிய அளவு ஜிங் கலந்துள்ளது. பண்டய காலத்திலேயே பூண்டில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் இருப்பது கண்டறியப்பட்டது. அத்துடன் இரத்த அழுத்த குறைவையும் சரி செய்கிறது.

இது ஸ்பெயின், இத்தாலி, சீனா போன்ற நாடுகளிலும் கூட அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பூண்டின் நோய் எதிர்ப்பு திறனுக்கு காரணம் அல்லிசின் போன்ற கந்தகங்களைக் கொண்ட சேர்மம் இருப்பதே.

immunity increase 2

4. இஞ்சி

இஞ்சி நாம் வீடுகளில் அதிகம் பயன்படுத்தும் உணவு. இது, வீக்கத்தை குறைக்க உதவுகிறது. அத்துடன். தொண்டை புண், அழற்சி, குமட்டல் ஆகியவற்றை கட்டுப்படுத்தும். அஜீரணம், ஆரம்ப கால ஆஸ்துமா, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது.

240 கிராம் இஞ்சியில்:

கொழுப்பு – 0.4 கிராம்
சோடியம் – 0 மி.கி
கார்போஹைட்ரேட் -6.9 கிராம்
நார்ச்சத்து – 1.4 கிராம்
சர்க்கரை – 13 கிராம்
புரோட்டீன் – 0.9 கிராம் அடங்கியுள்ளது.

Also Read:இஞ்சி டீ உடல்நலத்துக்கு நல்லதா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

5. ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிறைந்துள்ளது. இதில், வைட்டமின் ஏ,சி மற்றம் ஈ அத்துடன் பைபர் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளது. இதன் சக்தி மிகுதியாக கிடைக்க சமைத்து உண்ண வேண்டும்.

6. கீரை வகைகள்

கீரையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. எனவே நோய் எதிர்ப்பு திறனை கீரையால் அதிகப்படுத்த முடியும்.

ப்ரோக்கோலியைப் போலவே, கீரையும் முடிந்தவரை சிறிதளவு சமைத்து சாப்பிடுவது சிறந்தது. ஏனெனில் சமைக்கும் போது வைட்டமின் ஏ கீரையில் தூண்டப்படுகின்றது. இதுவும் உடல் நலனுக்கு சிறந்தது.

Also Read:எளிமையான முறையில் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய 6 காய்கறி & மூலிகைச் செடிகள்!

immunity increase 3

7. பாதாம்

இது சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றத்தை உருவாக்கி நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது. பாதாமில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. அதேபோல் வைட்டமின்களும் நிறைந்து காணப்படுகின்றது.

பெரியவர்களுக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 15 மி.கி வைட்டமின் ஈ மட்டும் தேவைப்படுகிறது. அவர்களுக்கு 46 முழு ஷெல் பாதாம் பரிந்துரைக்கப்படுகிறது.

8. மஞ்சள்

மஞ்சள் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் பொருள். பொதுவாக சமைக்கும் அனைத்து உணவுகளிலும் சிறிதளவு மஞ்சள் நிச்சயம் சேர்க்கப்படும். இதன் மூலம் கீல்வாதம், முடக்குவாதம் ஆகியவற்றுக்கு தீர்வளிக்க முடியும்.

இதில், உடற் பயிற்சியால் ஏற்படும் தசை சேதத்தை குறைக்க முடியும். தொடர்ந்து வைரஸால் பாதிக்கப்பட கூடிய நோயையும் கட்டுப்படுத்த மஞ்சளால் இயலும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து இதற்கான ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றது.

immunity increase 4

9. கிரீன் டீ

பச்சை மற்றும் கருப்பு தேநீர் இரண்டுமே ஒரு வகை ஆக்ஸிஜனேற்றமாக ஃபிளாவனாய்டுகளால் நிரம்பியுள்ளது. எபிகல்லோகாடெசின் கேலேட் அதிகம் நிரம்பியுள்ளதால் நோய் எதிர்ப்பு செயல்பாட்டில் தீவிரமாக செயல்படுகிறது. கிரீன்டீ-ல் அமினோ அமிலம் அதிகம் உள்ளது. இது நோய்கிருமிகளுடன் சண்டையிடும் திறன் கொண்டுள்ளது.

Also Read:கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையுமா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

10. பப்பாளி

பப்பாளி வைட்டமின் சி நிறைந்துள்ள மற்றொரு பழமாகும். பப்பாளி பாப்பேன் எனப்படும் செரிமான நொதியைக் கொண்டுள்ளது. பப்பாளியில் பாப்பேன் நிறைந்துள்ளதால் இது அழற்சி பிரச்சனையில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

பப்பாளி பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஃபோலேட் ஆகியவை சரியான அளவை கொண்டுள்ளது. இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும்.

இவை அனைத்தும் உங்கள் உடலில் பல நோய்களை அண்டவிடாமல் தடுக்கிறது. சரியான அளவில் எடுத்துக்கொள்வது சிறந்தது.

முக்கிய குறிப்பு: இந்த உணவுகள் கொரோனா வைரஸ், அதாவது கோவிட்-19லிருந்து உங்களை தடுக்கும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இவை இயற்கை முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பவை. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், சுத்தமாக இருத்தலே ஒரே வழி.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!