ஓவ்வொரு வருடமும் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. இதன் காரணமாக சரும பாதிப்புகளும் அதிகரித்துவிட்டன. சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள் நம் சருமத்தில் படுவதால் பல்வேறு வகையான பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.
வெளியே சென்று வந்ததும் சருமத்தில் கருமை படர காரணம் என்ன என்பது பற்றி சிந்தித்தது உண்டா? முகச் சுருக்கம், பருக்கள், தேமல் மற்றும் கருமை இல்லாத சருமம்தான் எல்லோரது விருப்பமும். அதற்கு ஏற்ற உணவுகளை எடுத்து கொள்வது மிகவும் அவசியமானது. புற ஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்க சில பழங்களை நீங்கள் அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும்.
தர்பூசணி:

தர்பூசணியில் லைகோபீன், வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் சருமத்தை புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் கோடைகாலத்தில் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைந்து, உடற்சோர்வை போக்குகிறது.
அவகாடோ:

அவகாடோவில் வைட்டமின் ஈ உள்ளதால், உடலை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதுடன், சரும பாதிப்பில் இருந்து காக்கவும் செய்கிறது. வறண்ட சருமத்தினருக்கு எண்ணெய் சத்து மிகுந்த இந்த பழம் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடம் பெறுகிறது. அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளின் அளவை உற்பத்தி செய்யும். வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
மாதுளை:

மாதுளையில் எண்ணற்ற பலன்கள் உள்ளது. சூரிய கதிர்களால் சரும பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையை தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும்உதவுகிறது. மெலனின் உற்பத்தியை சீராக்க மாதுளை உதவும். பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடவும், மாதுளையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டு உதவுகின்றன.
ப்ளூபெர்ரீஸ்:

ப்ளூபெர்ரீஸில் ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் அதிகபடியான வைட்டமின் சி, வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. சரும பாதிப்புகளை போக்கி சருமத்தை பளிச்சென்று வைத்திருக்க உதவும். ஞாபக மறதியை போக்க உதவும். நம் உடலில் உள்ள தேவையற்ற கிருமிகளை அழித்து விடுவதால் தோல் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்க உதவுகிறது.
ஆரஞ்சு:

சிட்ரஸ் பழங்கள் அனைத்துமே சருமத்திற்கு நன்மை பயக்கக்கூடியது தான். குறிப்பாக ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, லிமோனின் போன்றவை அடங்கியிருக்கிறது. நார்ச்சத்து நிறைந்துள்ளதால் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும். வைட்டமின் சிமற்றும் கால்சியம் சத்தும் அதிகம் நிறைந்துள்ளதால் பற்கள் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
Also Read: கோடைக்காலத்தில் நமக்கு கிடைக்கக்கூடிய சிறந்த பழங்கள் மற்றும் அவற்றின் ஊட்டச்சத்துக்கள்
வைட்டமின் சி குறைபாடு: இந்த 7 அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா?
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து மிக்க 10 உணவுகள்!