மாறி வரும் உணவுச் சூழலில் பெரும்பாலான மக்கள், உடல் பருமன் பிரச்சனையால் பாதிப்படைந்து இருக்கின்றனர். இதனால் உடல்ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் மக்கள் பாதிப்படைகின்றனர். ஆனால், எளிய சில வழிமுறைகள் மூலம் சுலபமாக உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும். உடல் எடை குறையப் பருக வேண்டிய பானங்கள் என்னென்ன என்பது குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்.
தண்ணீர்
நம்முடைய உடலுக்குத் தேவையான ஆரோக்கிய பானம் என்றாலே அதில் முதல் இடம் தண்ணீருக்குத் தான். நிறைய தண்ணீர் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். தண்ணீர் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கவே அதை ஒரு சுமையாகக் கருதி நாம் செய்யத் தவறுகிறோம். ஆனால், ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ஒரு நாளைக்கு அதாவது 24 மணி நேரத்திற்கு நம்முடைய உடலுக்குக் கிட்டதட்ட 7 முதல் 8 லிட்டர் வரையிலும் தண்ணீர் தேவைப்படுகிறதாம். அதில் நாம் எடுத்துக் கொள்ளும் மற்ற திரவ உணவுகளும் சேர்த்தே அடங்குகிறது.
கிரீன் டீ
கிரீன் டீ எவ்வளவு ஆரோக்கியமானது என்பதை விடவும் கிரீன் டீ குடிப்பது மிகப் பெரிய ராயலான விஷயமாகக் கருதப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறை தான் கிரீன் டீ குடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. நாளைக்கு 3 முதல் 5 கப் வரை குடிக்கலாம். ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து கப் வரை கிரீன் டீ குடித்தால், கிட்டதட்ட 35 முதல் 43 சதவீதம் வரை உடலில் தேங்கியுள்ள கொழுப்புகள் குறையும்.
ஜூஸ்
ஜூஸ் என்றதும் எப்போதும் நாம் யோசிப்பது வெறும் பழச்சாறுகள் மட்டும் தான். ஆனால், உடல் எடை இழப்பைப் பொருத்தவரை உங்களுக்கான சிறந்த தேர்வு வெஜிடபிள் ஜூஸ் தான். பழச்சாறுகளை விடவும் வெஜிடபிள் ஜூஸில் இன்னும் நிறைய நன்மைகளும் நார்ச்சத்துக்களும் அதிகம். சர்க்கரைச் சத்து குறைவு. அதனால் உடல் எடை குறைப்பினில் மிகப் பெரிய இடத்தை வெஜிடபிள் ஜூஸ் பெறுகிறது. உங்களுடைய வழக்கமான உணவுகளுக்கு முன்பாக, ஒரு டம்ளர் வெஜிடபிள் ஜூஸ் குடித்து வந்தால், கிட்டதட்ட 135 கலோரிகள் வரை கரைக்க முடியும்.
இளநீர்
இளநீர் என்பது நம்முடைய உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்டுகளைத் தருகின்றது. பழச்சாறுகளில் எலக்ட்ரோலைட்டுகள் கிடைத்தாலும் அதைவிட இளநீரில் மிக அதிகமாகவே இருக்கிறது. இதில் தான் அதிகப்படியான சர்க்கரை இருக்காது. மற்றொரு முக்கியமான விஷயம் இளநீரில் மற்ற பானங்களைப் போல செயற்கை நிறமூட்டி, சுவையூட்டி என எதையும் கலப்படம் செய்யவே முடியாது. இளநீர் இயற்கையாகவே நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தை வேகப்படுத்துகின்றது. உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. அதனால் இயல்பாகவே எடையைக் கூட்டாமல் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும்.
பிளாக் காபி
காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக பிளாக் காபி குடித்தால் உங்களால் மிகச்சிறந்த மாற்றத்தைக் காண முடியும். அதோடு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் காக்கவும் பிளாக் காபி உதவி புரிகிறது. அதனால் பிளாக் காபி மூலமாகவே உடல் எடையைக் குறைக்க முடியும். ஆனால் ஒரு நாளைக்கு 1-2 கப்புக்கு மேல் குடிக்க வேண்டாம்.

தேயிலை
மலைப் பிரதேசங்களில் இருப்பவர்கள் இதை எளிதாக செய்ய முடியும். பொடி செய்த டீத்தூளைப் பயன்படுத்தாமல் தேயிலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடித்து வரலாம். இது சருமத்தின் ரேடிக்கல் டேமேஜைத் தடுக்கும். வயதான தோற்றம் உண்டாகாமல் சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும்.