சூடாக டீ குடிப்பவரா நீங்கள்? மருத்துவர்கள் எச்சரிக்கை!!

0
147
hot_tea
Credit: Jacked Up Coffee & Tea Products

நம்மில் பலருக்கு கோப்பை தேநீருடன் தான் பொழுதே விடிகிறது. இன்னும் சிலர் ஒரு நாளைக்கு பல கப்களை கபளீகரம் செய்கிறார்கள். சுறுசுறுப்பு மற்றும் சுவை ஆகியவற்றின் காரணமாக இந்த கப்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே போகிறது. ஆனால் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்னும்போது தேநீர் எம்மாத்திரம்?

hot_tea
Credit: Jacked Up Coffee & Tea Products

ஈரான் நாட்டில் அமெரிக்க கேன்சர் ஆராய்ச்சிக் கழகம் சார்பில் தேநீர் அருந்துபவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆய்வு ஒன்று நடைபெற்றது. இந்த ஆய்வின் தலைவரான டாக்டர். ஃபர்கத் இஸ்லாமி (Dr. Farhad Islami) சில அதிர்ச்சி தரத்தக்க முடிவுகளை முன்வைக்கிறார்.

சூடாக தேநீர் அருந்தும் நபர்களுக்கு உணவுக்குழாய் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு, இளஞ்சூட்டில் தேநீர் அருந்தும் நபரைக்கட்டிலும் இருமடங்கு அதிகம் என்கிறார் இஸ்லாமி.

சூடு

ஈரானில் உள்ள கோலஸ்டன் நகரில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 50,000 மக்கள் கலந்துகொண்டார்கள். தேநீர் அருந்துபவர்கள் சராசரியாக 60 டிகிரி வெப்பத்தில் குடிக்க விரும்புவதாக கண்டுபிடிக்கப்படிருக்கிறது. ஒரு நாளில் ஒரு நபர் அருந்தும் சராசரி தேநீரின் அளவு 700 மி.லி ஆகும். குளிர்ந்த நிலையில் தேநீர் குடிப்பவர்களுடன் ஒப்பிடும்போது சூடாக குடிப்பவர்களுக்கு esophageal cancer எனப்படும் உணவுக்குழாய் புற்றுநோயை உருவாக்குவதற்கான வாய்ப்பு 90 சதவிகிதம் அதிகமாகும்.

hot tea
Credit: Fox News

சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி கழகம் அளித்த தரவுகளின்படி ஆண்டுக்கு 400,000 மக்கள் உணவுக்குழாய் புற்றுநோயால் மரணிக்கின்றனர்.

உணவுக்குழாய்

வாயின் தொண்டையிலிருந்து வயிற்றுப்பகுதிக்கு உணவினைக் கடத்த உணவுக்குழாய் பயன்படுகிறது. சூடான பானம், ஆல்கஹால், சிகரெட் ஆகியவற்றால் உணவுக்குழாயானது தீவிரமாக பாதிக்கப்படுகிறது.

அமெரிக்க புற்றுநோய் ஆய்வு மையம் அளித்துள்ள தரவுகளின்படி, 2019 ஆம் ஆண்டு மட்டும் உணவுக்குழாய் கேன்சரால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 13,750. பெண்களின் எண்ணிக்கை 3,900 ஆகும்.

ஆய்வு

ஈரானில் நடைபெற்ற இந்த ஆய்வில் 40 முதல் 75 வயதுகுட்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். இதில் பத்து வருடங்கள் தொடர்ந்து தேநீர் குடிப்பவர்களில் 317 பேருக்கு உணவுக்குழாய் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

food pipe
Credit: Medical News Today

ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும், மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள மக்கள் அதிக அளவு சூடான தேநீரையே பருக விரும்புகின்றனர். எனவே தேநீரை கொஞ்ச நேரம் குளிர்ந்த பிறகு பருகுவது சிறந்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.