சமீப காலமாகவே இஞ்சியின் மீதான மக்களின் மோகம் அதிகரித்துள்ளது. உணவுகளில் மட்டுமல்லாது தேனீர் மற்றும் சுடுதண்ணீர் ஆகியவற்றிலும் கூட இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. பல மருத்துவ குணங்களைக் கொண்ட இஞ்சி வயிற்றுப் பிரச்சினைகள் மற்றும் வாந்தி போன்ற உடல் உபாதைகளுக்கு உடனடி தீர்வு அளிக்கிறது. உடல் நலத்தில் இஞ்சியின் பங்கு என்ன என்பதைப் பற்றி மருத்துவ உலகில் பல்வேறு ஆராய்ச்சிகள் இன்றும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

Power of Positivity
2015ஆம் ஆண்டு வெளியான பெயின் மெடிசின் என்னும் ஆய்வுக் கட்டுரை ஒன்றில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலியை போக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு வெளிவந்த The journal of pain இன்னும் ஆய்வுக் கட்டுரையில் உடற்பயிற்சிக்கு பின்பு இஞ்சியை எடுத்துக்கொண்டால் 25 சதவிகிதம் உடம்பு புத்துணர்ச்சி பெறுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்
உடல் எடை குறைக்கும் இஞ்சி மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் இது உடம்புக்கு தேவையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்களைத் தருவதால் சோர்வு நீக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பிரபலமான மஞ்சள் பாலோடு இஞ்சி சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. பாலை நன்றாகக் காய வைத்து அதனுடன் மஞ்சள் மற்றும் இஞ்சியை கலந்து குடிப்பது பற்றி பழங்கால ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

NellieBellie
உங்களுக்கு நேரமும் பொறுமையும் இருந்தால் பாலோடு மஞ்சள் ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, மிளகு, சாக்லெட் துகள்கள் மற்றும் வெண்ணிலா விதைகள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகவும். இது உடலுக்கு மிகுந்த நன்மையை அளிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். நீங்கள் அதிரடி பிரியர் என்றால் உங்களுடைய தேநீரில் சிறுதுண்டு இஞ்சியை வெட்டிப் போட்டு கொதிக்க வைத்து பருகவும். எலுமிச்சம் பழச்சாறுடன் இஞ்சியை சேர்த்து காலையில் குடிப்பது பல உடல் உபாதைகளில் இருந்து உங்களைக் காப்பாற்றும்.
இஞ்சி டீ கர்ப்பகாலத்தில் பருகலாமா?
கர்ப்ப காலத்தில் மருத்துவ பயன்பாடுகளுக்காக எடுத்துக் கொள்ளும்போது இஞ்சி மிகவும் பாதுகாப்பானது. எனினும் கர்ப்ப காலத்தில் இஞ்சியைப் பயன்படுத்துவதை தவிர்ப்பதே நல்லது.
அளவுக்கு அதிகமாக இஞ்சி பயன்படுத்தினால் எதுவும் பக்கவிளைவு வருமா?
தினந்தோறும் இஞ்சி எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது தேவையற்றது. ஒரே சத்துள்ள பொருளை உடலுக்கு தேவைப்படும் அளவைவிட அதிகமாக எடுத்துக்கொண்டால் பக்கவிளைவுகள் வரக்கூடும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தானே. இஞ்சி அதிகம் சேர்த்துக்கொண்டால் நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் பொதுவான வயிற்று பிரச்சினை உள்ளிட்ட லேசான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். சில வெளிநாட்டு பெண்கள் இஞ்சியை எடுத்துக் கொள்ளும்போது கூடுதல் மாதவிடாய் இரத்தப்போக்கு இருப்பதாக கூறியுள்ளனர்.
அல்சர் இருப்பவர்கள் இஞ்சியை உபயோகிப்பதற்கு முன்னர் மருத்துவர்களிடம் அறிவுரை கேட்பது நல்லது.