நன்றாக பசி எடுத்ததும் உண்பவர்கள் மட்டுமே ஆரோக்கியமான மனிதர்கள்! நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு அடையாளம் பசி உணர்வு ஏற்படுவதுதான்.
எல்லா நேரங்களிலும், பசி உணர்வு என்பது வயிறு தொடர்பான பிரச்சினையாக மட்டுமே இருக்காது. சில நேரங்களில் நம் மனது, எண்ணம் தொடர்பானதாகவும் இருக்கும். சில நேரங்களில் சில சமயங்களில் ஒருவித பதற்றம் உண்டாகும். இந்த மன அழுத்தம் உங்களுக்கு பசிக்கவும், பசியின்மை ஏற்படவும் மற்றும் செரிமானத்தைக் குறைக்கவும் செய்கிறது. எனவே உங்கள் மனதை பதற்றத்திலிருந்து விடுவிப்பதற்கு, மனதை திசைதிருப்பும் முயற்சியையும், உங்கள் கவலையையும் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். அளவுக்கு அதிகமான பயமும், கவலையும்கூட பசியின்மைக்கு காரணமாகும்.
பசியின்மைக்கு, மனச்சோர்வு பொதுவான காரணங்களில் ஒன்றாகும். மனச்சோர்வு மூளையில் சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இது உடலின் உளவியல் நிலையைக் கண்காணிப்பதற்கும், குறைவான செயலில் ஈடுபடுவதற்கும் காரணமாகி விடுகின்றது. இது பசி மற்றும் பசியின்மை அறிகுறி குறைவதற்கு வழிவகுக்கும்.
மனஅழுத்தம், சில நேரங்களில் குமட்டல் மற்றும் அஜீரணக் கோளாறு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். உங்கள் உணவு விருப்பத்திற்கு இது இடையூறாக இருக்கும். உணவைப் பார்த்தாலே பிடிக்காதது போல் தோன்றும். உங்களுக்கு பிடித்த உணவாக இருந்தாலும் வெறுப்பது போல் தோன்றும். இந்நேரத்தில், நீங்கள் செய்ய விரும்பும் வேறு ஏதாவது ஒன்றை செய்து உங்கள் கவனத்தை மாற்ற வேண்டும். இது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
சிலநேரங்களில், மலச்சிக்கல், அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம், புகைப்பழக்கத்தினாலும் பசியின்மை ஏற்படலாம். உடல் உழைப்பின்மையாலும் பசியின்மை உணர்வு தோன்றலாம்.
நீங்கள் என்ன சாப்பிட விரும்பினாலும் வயதும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, நிலைமை எதுவாக இருந்தாலும், உங்கள் உடலுக்குத் தேவையான சரியான அளவு ஊட்டச்சத்துக்களை அவ்வப்போது உட்கொள்ளுங்கள்.