சானிடைஸர் மற்றும் கிருமிநாசினிகள் ஏன் 99.9% கிருமிகளை மட்டுமே அழிக்கின்றன? 0.1% கிருமிகளை அழிக்க முடியாதற்கு என்ன காரணம்?

Date:

பெரும்பாலான ப்ளீச், கிருமிநாசினிகள் மற்றும் ஆன்டிபாக்டீரியல் தயாரிப்புகளில் இடம் பெற்றிருக்கும் ஒரு வாசகம் தான் “99.99% கிருமிகளை அழிக்கும்”. இதை விளம்பரங்களில் கூட சொல்ல நாமும் கேட்டிருப்போம். இது போன்ற வாசகங்களை சானிடைஸர் அல்லது சேனிடைஸர் (sanitizer), சோப்பு, கழிவறையை சுத்தம் செய்யும் தயாரிப்புகளிலும் இருப்பதை கவனித்திருப்போம். ஆனால் அது ஏன் 99.99%?, ஏன்100% இல்லை என்று யோசித்து இருக்கிறீர்களா? இது மாதிரி ஏன் அவர்களே கொஞ்சம் குறைத்து சொல்கிறார்கள் தெரியுமா?

கொரோனா வைரசுக்கு பரிந்துரைக்கப்படும் ஆல்கஹால் கலந்த சானிடைஸர் கூட 100% கிருமிகளை அழிக்காது. என்ன காரணம் தெரியுமா?

சில தயாரிப்புகள் 99% கிருமிகளை அழிக்கும் என்றும் சில 99.9% கிருமிகளை அழிக்கும் என்றும் கூறுகின்றன. நாமும் 99% ஐ விட 99.99% என்று கூறும் தயாரிப்பு தான் சிறந்தது என்று நினைத்து வாங்குவோம்.

chemical-disinfectants
Credit: Clean Innovations

உண்மையில் 99.99% கிருமிகளை அழிக்கும் என்றால் அது ரொம்ப நல்ல விஷயம் தான். நாம் எதிர்பார்ப்பதும் அதைத் தான். பொதுவாக விளம்பரங்களுக்காக ஏதேதோ சொல்லும் நிறுவனங்கள் 99.99% ஐ 100% என போடாததற்கு காரணம் இருக்கிறது. 

சரி 99.99% என்று கூறும் தயாரிப்பு 99.99% கிருமிகளை அழிக்குமா என்றால் நிச்சயம் கிடையாது.

ஒவ்வொரு கிருமிநாசினி தயாரிப்பும் செயல்படுத்தும் கிருமிகள் மீதான தாக்கம் நிச்சயம் ஒரே மாதிரி இருக்காது!

கிருமிநாசினி தயாரிப்புகள்

முதலில் எல்லா கிருமிநாசினிகளும் ஒன்று அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இது போன்ற தயாரிப்புகள் அனைத்தும் ஒரே மாதிரி தயாரிக்கப்படுவதில்லை. பொதுவாக நாம் நினைப்பது எல்லா கிருமிநாசினிகளும் கிருமிகளை அழிக்கும் என்பதால் எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான பொருட்கள் தான் இருக்கும் எனவும் அவற்றின் நிறம் வாசனை மற்றும் நீர்ம தன்மையில் தான் சின்ன வித்தியாசங்கள் இருக்கும் என்றும் நினைக்கிறோம். இது உண்மை இல்லை.

ஒவ்வொரு கிருமிநாசினியும் பல வகைகளில் வேறுபடுகிறது. ஒவ்வொன்றும் வேறுபட்ட ரசாயனங்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு தயாரிப்பு செயல்படுத்தும் கிருமிகள் மீதான தாக்கம் நிச்சயம் ஒரே மாதிரி இருக்காது.

எடுத்துக்காட்டாக ப்ளீச் போன்றவை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தயாரிப்புகளை சேதப்படுத்தும். pH அதிகமாக உள்ள கிருமிநாசினிகள் சாதாரண தரைகளுக்கும் துணிகளுக்கு ஏற்றதல்ல. அதே சமயம் குறைந்த pH உள்ளவற்றை பயன்படுத்தும் போது அது எல்லா கிருமிகளையும் அழிப்பதும் அல்ல.

ஒரு கிருமிநாசினியின், கிருமியை கண்டறியும் திறன் குறிப்பிட்ட அளவு தான் இருக்கும்!

செயல் திறன்

ஒரு தயாரிப்பின் செயல் திறன் என்று தயாரிப்பு நிறுவனம் கூறுவது அவர்கள் அந்த தயாரிப்பை சோதிக்கும் போது அங்கு உட்படுத்தப்பட்ட கிருமிகளுடன் அது செயல்பட்ட திறனை தான். நிச்சயம் எல்லா கிருமிகளையும் வைத்து அவர்கள் சோதிப்பது இல்லை. உண்மையில் அது சாத்தியமும் இல்லை.

ஒரு தயாரிப்பு எந்த கிருமியை அழிப்பதில் சிறந்ததோ அதை மட்டும் வேண்டுமானால் 100% அழிக்கும். காரணம் ஒரு கிருமிநாசினியின், கிருமியை கண்டறியும் திறன் குறிப்பிட்ட அளவு தான் இருக்கும்.

மூலப்பொருட்கள்

பெரும்பாலும் கிருமிநாசினிகளில் சோடியம் ஹைபோகுளோரைடு, குவாட்டர்னரி அம்மோனியம், ஹைட்ரஜன் பெராக்சைடு, அயோடின், ஆல்கஹால், வெள்ளி அயனிகள் மற்றும் அமிலங்கள் இருக்கும். இவை ஒவ்வொன்றிற்கும் அவற்றிற்கே உரிய கிருமிகளை அழிக்கும் பண்பு இருப்பதால் அவற்றை கரைசலாக்க வேறு சில சேர்மங்களுடன் கலக்கும் போது அவற்றின் தன்மை மாறி நோய்க் காரணிகளுடன் அதற்கேற்ற செயல் திறனுடன் இருக்கும்.

disinfectants
Credit: Wikipedia


பாக்டீரியாக்களை அழிக்க பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள் பாக்டீரியாக்களை விரைவாக தாக்கி அதன் புரதத்தை சேதப்படுத்தி, அதன் செல்லில் உள்ள வெளி அடுக்கை முறிக்கும். இதனால் பாக்டீரியாவின் டிஎன்ஏ (DNA) கசிந்து அது இறந்துவிடும். ஆனால் சில கிருமிகள் பல வெளி அடுக்குகளை கொண்டிருக்கும். அது போன்ற கிருமிகளை கிருமிநாசினிகள் அழிக்க முடியாது.

எடுத்துக்காட்டாக கிருமிநாசினிகளின் குறிப்பிட்ட கலவை உணவு தயாரிக்கும் இடங்களில் இருக்கும் பாக்டீரியாக்களை மிகுந்த திறனோடு அழிக்க வல்லது. சில கிருமிநாசினிகள் இன்ஃப்ளூயன்ஸா போன்ற வைரஸ்களை அழிக்க வல்லது. மேலும் சில உயர்நிலை கிருமிநாசினிகளும் உண்டு. அவை கிருமிகளை அழிப்பதில் அதிக திறன் கொண்டவையாக இருக்கும். இவை தான் மருத்துவமனைகளில் உபயோகிக்கப்படுகின்றன. இதனால் தான் கிருமிநாசினிகள் 100% எல்லா கிருமிகளையும் அழிக்கும் என்று கூற முடிவதில்லை.

ஆராய்ச்சி

அமெரிக்காவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் கைகளை சுத்தப்படுத்தும் ஒரு தயாரிப்பை ஆய்வு செய்ததில் அவை 46-60% கிருமிகளை தான் அழித்தன. மீண்டும் பயன்படுத்தும் போதும் எந்த மாற்றமும் இல்லாமல் வெறும் கை கழுவும் வேலையைத் தான் செய்துள்ளது. அது அழிக்காத 0.01% என்பதும் குறைவான அளவு அல்ல. அதிகமான அளவு கிருமிகளை அழிக்கவில்லை என்பதே உண்மை.

விளம்பர வார்த்தை

தயாரிப்புகளை விளம்பரப்படுத்துபவர்கள் அதன் உண்மையான செயல்திறனை விட அதன் விளைவுகளுக்கான கணிப்பை மட்டுமே கொண்டு வெறுமனே 99.99% கிருமிகளை அழிக்கும் என்று கூறுவார்கள். மொத்தத்தில் 99.99% என்பது வெறும் விளம்பர வார்த்தையே தவிர உண்மைகள் இல்லை. இதன் மூலம் அந்த தயாரிப்பு சிறந்தது என்று சொல்ல முயற்சிக்கிறார்கள். மேலும் Almost என்ற வார்த்தையையும் கூறுவார்கள்.

The-Basics-of-Float-Tank-Sanitation
Credit: float tank solutions

அதே போல் 30 நொடிகளில் அழிக்கும் என்றும் குறிப்பிடுவார்கள். இதுவும் எல்லா கிருமிக்கும் அல்ல. ஏதாவது ஒன்று இரண்டு கிருமிகளை மட்டுமே 30 நொடிகளில் அழிக்கும். அதிலும் சில தயாரிப்புகளில் * என்ற ஒரு சின்னம் இருக்கும். இதற்கான விளக்கத்தையும் அடியில் கொடுத்திருப்பார்கள். நிபந்தனைகளுக்குட்பட்டது என்று குறிப்பிட்டிருப்பதை நாம் சரியாக கவனிப்பது இல்லை. 99.99% என்று மட்டும் கூறுவதால் அந்த தயாரிபின் செயல் திறன் சரியில்லை என்று யாரேனும் வழக்கு தொடுத்தால் கூட அவர்களால் 100% என்று கூறவில்லையே என்று கூறி சுலபமாகத் தப்பிக்க முடியும்.

இது போன்ற தயாரிப்புகளின் உண்மையான அர்த்தம் ஓரளவு கிருமிகளை அழிக்கும் என்பது தான். எந்த கிருமியுடன் போராட வேண்டுமோ அதற்கு ஏற்ற கிருமிநாசினியை பயன்படுத்தலாமே தவிர  ஒரே தயாரிப்பு எல்லா கிருமிகளையும் அழிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!