கொரோனா தொற்று காலத்தை நாம் கடந்துக் கொண்டிருக்கிறோம். இந்த காலத்தை எதிர்க் கொள்ளும் வகையில் பல விலைமதிப்பற்ற மற்றும் வித்தியாசமான முகக்கவசங்கள் பிரபலமடைந்துள்ளது. இவை அனைத்தும் மக்கள் விரும்பும் வித்தியாசமான நடைமுறைகளை கொண்டுள்ளது.
கண்ணுக்கு தெரியாத முகக்கவசம்

இந்த முகக்கவசத்தை கனடாவை சேர்ந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது. இது வேலை செய்பவர்களுக்கு எளிதானதாகவும், கண்ணில் பனி மூடும் பிரச்சினையும் ஏற்படுவதில்லை.
அதே போல் மூக்கு மற்றும் வாய்ப் பகுதியை எதிரில் நிற்பவர் பார்க்கவும் முடியும். துணி முகக்கவசம் போல் இதன் மூக்கு பகுதி வளைவதில்லை. இதை உருவாக்கிய நிறுவனத்தின் தகவல் படி மற்ற முகக்கவசங்களை போலவே இந்த முகக்கவசமும் உங்களை நன்கு பாதுகாக்கும் என்று அதை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான முகக்கவசம்

30 வயதான பிரெஞ்சு தோல் விற்பனையாளர் அனிசா மெப்ராபெக் காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான முகக்கவசத்தை உருவாக்கியுள்ளார். இதில், உதடு, காது ஆகியவை வெளிப்படையாக தெரிகிறது. இதன் மூலம் அவர்கள் மற்றவர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ள முடியும் என்று அனிசா வெளிப்படுத்தியுள்ளார்.
Also Read: கண்ணின் விழித்திரையை அச்சிடும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு
வைரம் மற்றும் தங்கத்தாலான முகக்கவசம்

இஸ்ரேல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த முகக்கவசத்திற்கு 11 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 18 காரட் தங்கத்தாலான இந்த முகக்கவசத்தில் 3600 வெள்ளை மற்றும் கருப்பு வைரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 99 பில்டர் பொருத்தப்பட்டுள்ளதாக வடிவமைப்பாளர் ஐசன் லெவி தெரித்துள்ளார்.
வாழை மரத்தில் இருந்து பிரிக்கப்பட்ட நூலில் முகக்கவசம்

இந்த வாழை மரத்தில் இருந்து பிரிக்கப்பட்ட நூலில் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் பிளாஸ்டிக் இல்லாமல் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது. தேயிலை பைகள் மற்றும் ரூபாய் நோட்டுகளில் இருக்கும் பைபர் பாலியஸ்டரான அபாக்கா இந்த முகக்கவசத்தில் கலந்து செய்யப்பட்டுள்ளது என்று பிலிபைன்ஸ் ஃபைபர் ஏஜென்சி தலைவர் கென்னடி கோஸ்டேல்ஸ் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையால் நடத்தப்பட்ட ஆய்வுகளில் N-95 முகக்கவசங்களை காட்டிலும் அபாக்காவில் பாதுகாப்பு அதிகம் என்று தெரிவித்துள்ளனர்.
உங்கள் படம் அச்சிடப்பட்ட முகக்கவசம்

கேரள மாநிலத்தில் புகைப்பட கலைஞர் ஒருவர் முகம் அச்சிடப்பட்ட முகக்கவசத்தை உருவாக்கியுள்ளார். இந்த முகக்கவசம் தயாரிக்க 60 ரூபாய் மட்டும் செலவாகும். இதை தயாரித்த பினேஷ் ஜி பால் என்பவர் இது குறித்து கூறுகையில், நான் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றபோது அந்த கடையின் உரிமையாளர் முககவசத்தால் என்னை அடையாளம் காணவில்லை. எனவே இது போன்ற முயற்சியை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தங்க முகக்கவசம்

கொரோனா காலத்தில் முகக்கவசம் அணிய புனேவை சேர்ந்த சங்கர் என்ற நபர் 2.89 லட்சம் ரூபாய் மதிப்புள்ள முகக்கவசத்தை வாங்கியுள்ளார். இந்த முகக்கவசம் 60 கிராம் மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது.
இதை தயாரித்து வாங்கிய சங்கர் தங்கத்தின் மீதான ஆர்வம் கொண்டவர் என்பதால் தங்கத்தில் முகக்கவசம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
Also Read: தங்கத்தை விட விலைமதிப்பான உலோகம் – ஒரு கிராம் 2000 கோடி
மின்காந்த முகக்கவசம்

ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் வைரஸைக் கொல்லும் தொழில் நுட்பத்துடன் மின்காந்த முகக்கவசம் தயாரித்தனர். இந்த முகக்கவசத்தில் உள்ள மின்காந்த புலம் சார்ஸ்-2 உள்ளிட்ட வைரஸை அழிக்கும் திறன் கொண்டுள்ளது என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்னாஸி தங்க முகக்கவசம்

ஸ்னாஸி தங்கம் மற்றும் வெள்ளி கலந்து தமிழ்நாடு கோயம்புத்தூரை சேர்ந்த வியாபாரி ராதாகிருஷ்ணன் சுந்தரம் ஆச்சார்யா தயாரித்துள்ளார். இது 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த விலைமதிப்பு 2.75 லட்சம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொழிபெயர்ப்பு முககவசம்

இந்த முகக்கவசத்தின் மூலம் உங்களிடம் பேசும் நபருக்கு மொழிபெயர்க்க வசதியாக இருக்கும். அத்துடன் அலைப்பேசியில் பேசும் போது குரலை ஏற்ற வகையில் உயர்த்தி வழங்குகிறது.
இந்த முகக்கவசத்தின் தொழில் நுட்பம் மொபைலுடன் இணைக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட ஒரு ரோபோவை போன்றே இந்த முகக்கவசத்தில் செயல்பாடுகள் உள்ளன.
வைரம் வைக்கப்பட்ட முகக்கவசம்

குஜராத்தின் சூரத்தில் உள்ள நகைகடை வியாபாரி ஒருவர் வைரம் பதிக்கப்பட்ட முகக்கவசம் செய்துள்ளார். இது சாதாரண முகக்கவசங்களில், வைரக்கல்கள் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
Also Read: கோஹினூர் வைரம் சாபமா? – தொடரும் மர்மம்
திருமண முகக்கவசம்

அசாமில் வடிவமைப்பாளரான மணமகள் தன் திருமணத்தில் தானே வடிவமைத்த திருமண முகக்கவசத்துடன் தோன்றினார். இந்த முகக்கவசம் பட்டால் நெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மக்கள் சொந்தமாக தரமான முகக்கவசங்கள் தயாரிக்கலாம் என்பதை ஊக்குவிப்பதாக மணமகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் தற்போது மிக பிரபலமானதாகும். இது தவிர துணிகளில் ஆடைகளுக்கு ஏற்றப்படி முகக்கவசத்தை தயாரித்து பல நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. !